தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கள்ள உறவில் ஈடுபடுவோருக்கு ஹார்ட் அட்டாக் வரும் வாய்ப்பு அதிகம்!

Go down

கள்ள உறவில் ஈடுபடுவோருக்கு ஹார்ட் அட்டாக் வரும் வாய்ப்பு அதிகம்! Empty கள்ள உறவில் ஈடுபடுவோருக்கு ஹார்ட் அட்டாக் வரும் வாய்ப்பு அதிகம்!

Post  ishwarya Fri Feb 15, 2013 5:39 pm

Sex
திருமண உறவைத் தாண்டி பிற பெண்களுடன் கள்ளத்தனமான உறவில் ஈடுபடுபவர்களுக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

ஹூஸ்டனில் உள்ள பெய்லர் மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் ஜிலின் லெவின் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் மாரடைப்பு ஏற்பட்ட 5,559 நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 0.6 சதவிகிதம் பேர் தாம்பத்ய உறவின் போது ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு மரணமடைந்துள்ளனர். 93 சதவிகிதம் பேர் கள்ளத்தனமான உறவில் ஈடுபட்டபோது அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் இளவயதினர். தவிர உறவின் போது அதிகம் உணவு உட்கொண்டது, மது அருந்தியது போன்ற காரணங்களினால் உறவில் ஈடுபட்டதனால் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளனர்.

குற்ற உணர்ச்சி

மனைவிக்குத் தெரியாமல் கள்ளதொடர்பு வைத்திருப்பவர்களுக்கு மனரீதியாக குற்ற உணர்ச்சி ஏற்படும். இதனால் அவர்கள் எப்போதும் பதட்டத்துடன் காணப்படுவர். மேலும் செக்ஸ் உறவில் ஈடுபடும் போது ஏற்படும் அதிக பதட்டமும், ஆர்வமும் அவர்களுக்கு மாரடைப்பை ஏற்படுத்துகிறது என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் குடித்து விட்டு உறவில் ஈடுபடுபவர்களை அதிக அளவில் மாரடைப்பு தாக்கும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

கள்ள உறவு மரணங்கள்

இதேபோல் இத்தாலியில் உள்ள பிளாரன்ஸ் பல்கலைகழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் வித்தியாசமான ஒரு ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் மனைவியைத் தவிர்த்து மற்றவர்களுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்பவர்களுக்கு என்ன பாதிப்புகள் ஏற்படுகிறது என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு கள்ளதொடர்பு வைத்திருப்பவர்களுக்கு அதிகமாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொதுவாக செக்ஸ் உறவில் ஈடுபடும்போது சில நேரங்களில் மரணங்கள் நேரிடுவது உண்டு. அதிலும் மற்றவர்களை விட 3 மடங்கு அதிகமாக கள்ளத் தொடர்பில் ஈடுபடுபவர்களுக்கு அதிகமாக மரணங்கள் நிகழ்வதாக ஆய்வில் தெரிந்துள்ளது.

செக்ஸ் ஒரு மருந்து

அதேசமயம் மாரடைப்பு வந்தவர்கள் சில வாரங்கள் கழித்து தங்களின் மனைவியுடன் பாதுகாப்பான உறவில் ஈடுபடலாம் என்றும் கூறியுள்ளனர். செக்ஸ் என்பது மன அழுத்தம் போக்கும் மருந்தாக செயல்படுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அரை மணிநேரம் உறவில் ஈடுபட்டால் 630 கலோரிகள் வரை எரிக்கப்படுகிறது என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த ஆய்வு முடிவு அமெரிக்காவின் ஹார்ட் அசோசியேசன் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum