வண்டி&வாகனங்கள் நிறுத்துமிடம்
Page 1 of 1
வண்டி&வாகனங்கள் நிறுத்துமிடம்
வண்டி&வாகனங்கள் நிறுத்துமிடம்
விஞ்ஞான வளர்ச்சியில் மனிதன் ஆடம்பரமான வாழ்க்கையை வாழவே விரும்புகிறான். ஆசைகளுக்கு அளவில்லை என்பார்கள். ஒரு 30 வருடங்களுக்கு முன்பு கூட சைக்கிள் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை குறைவாகத் தான் இருந்தது. எங்காவது வெளியில் செல்பவர்களும் வாடகை சைக்கிளை தான் எடுத்து செல்வார்கள். சொந்தமாக சைக்கிள் வைத்திருப்பவர்கள் அப்பொழுது பணக்காரக்கள். ஆனால் இன்றைய சூழ்நிலையில் வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்கிறார்களோ இல்லையோ வீட்டிற்கு ஒரு கார் பைக் போன்றவற்றை வைத்திருக்கிறார்கள். பெட்ரோல்,டீசல் விலைகள் எவ்வளவு தான் ஏறினாலும் வண்டி வாகனங்கள் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை குறைவதில்லை. முதலில் சொந்த வீட்டை கட்ட ஆசைப்படும் மனிதன் அடுத்த வாங்க நினைப்பது வண்டி வாகனங்களை தான்.
சொந்த வீட்டின் முன் ஒரு கார் அல்லது பைக் நிற்பது என்பது பெருமையான விஷயம் தானே. வண்டி வாகனங்களை வாஸ்துப் படி எங்கு நிறுத்தினால் நல்லது என பார்க்கும் போது ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு மூலையில் அதிக எடையுள்ள வண்டி வாகனங்களை நிறுத்த கூடாது. ஈசான்ய மூலை ஈசனே குடியிருக்க கூடிய இடம் என்பதால் இங்கு வாகனங்களை நிறுத்துவதால் அதன் டயர்க்களில் ஒட்டியிருக்கும் சேறு, மற்றும் அதிலிருந்து வழியும் ஆயில் பெட்ரோல் ஆகியவை அந்த இடத்தில் படுமேயானால் அந்த இடத்தின் தூய்மையானது கெட்டுவிடும். எனவே வடகிழக்கு மூலையில் வண்டி வாகனங்களை நிறுத்த கூடாது.
வடகிழக்கு மூலையைத் தவிர தென்கிழக்கு, தென்மேற்கு, வடமேற்கு பகுதிகளில் வண்டி வாகனங்களை நிறுத்தும் இடமாக அமைத்து
வடக்கு பார்த்த வீட்டிற்கு வடகிழக்கின் உச்ச ஸ்தானத்தில் வாசற்படி இருக்கும் போது வண்டி கார் நிறுத்துமிடமாக தென்கிழக்கை அமைப்பது நல்லது.
கிழக்கு பார்த்த வீட்டிற்கு வடகிழக்கில் உச்சஸ்தானத்தில் வீட்டின கேட் இருக்கின்ற போது வண்டி கார் நிறுத்துமிடமாக வடமேற்கு பகுதியாக இருப்பது நல்லது.
தெற்கு பார்த்த வீட்டிற்கு உச்ச ஸ்தானமான தென்கிழக்கில் வீட்டின் கேட் இருக்கும் போது வண்டி வாகனங்களை நிறுத்துமிடமாக தென்கிழக்கு பகுதியாக இருப்பது நல்லது.
மேற்கு பார்த்த வீட்டிற்கு வடமேற்க்கின் உச்ச ஸ்தானத்தில் வீட்டின் கேட் இருக்கும் போது வண்டி வாகனங்களை நிறுத்துமிடமாக வடமேற்கு பகுதியாக இருப்பது நல்லது.
மேற்கூறியவாறு உச்ச ஸ்தானங்களில் கேட்டை அமைத்து அதன் வழியே வண்டி வாகனங்கள் செல்லுமாறு அமைத்துக் கொள்ளலாம்.
அப்படி இல்லாமல் இடபற்றா குறை உள்ளவர்கள் நீச ஸ்தானங்களில் வண்டி வாகனங்களை நிறுத்த கூடிய (இடம்) கேட் அமைக்க வேண்டிய சூழ்நிலை வருமேயானால் அந்த வழியை வண்டி வாகனங்கள் நிறுத்தவதற்கு மட்டும் அமைத்துக் கொண்டு வீட்டின் உள்ளே செல்வதற்கு உச்ச ஸ்தானத்தில் கேட்டை அமைப்பது நல்லது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வண்டி&வாகனங்கள் நிறுத்துமிடம்
» கோயில் வாகனங்கள்
» கோயில் வாகனங்கள்
» வண்டி மறித்த காளியம்மன்
» வண்டி வாகன யோகம்
» கோயில் வாகனங்கள்
» கோயில் வாகனங்கள்
» வண்டி மறித்த காளியம்மன்
» வண்டி வாகன யோகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum