தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

(ஸ்ரீ சூலினி சக்ர விருத்த மத்தியில் தியான ஆவஹனாதி பூஜை)

Go down

ஸ்ரீ - (ஸ்ரீ சூலினி சக்ர விருத்த மத்தியில் தியான ஆவஹனாதி பூஜை) Empty (ஸ்ரீ சூலினி சக்ர விருத்த மத்தியில் தியான ஆவஹனாதி பூஜை)

Post  ishwarya Sat Feb 02, 2013 2:06 pm

அஷ்ட தளம்:

ஓம் துக்காயை, வரதா விந்திய வாஸினி, அசுர மர்த்தினி புத்தப்ரியா, தேவ ஸித்த பூஜிதா, நந்தினி, மஹா யோகேஸ்வரி நம:

தளாக்ரம் :
ஓம் சக்ராய நம: சங்க, அஸி, கதா, சாப, சூல பாண, பாச நம:

மந்திர ஜபம்

அஸ்யஸ்ரீ சூலினி துர்க்கா மகா மந்திரஸ்ய தீர்க்க தபரிஷி: ககுப்சந்த :ஸ்ரீ சூலினி துர்க்கா தேவதா

ஹும் பீஜம் ஸ்வாஹா சக்தி : மம ஸர்வா பீஷ்ட ஸித்தி யர்த்தே ஜபே விநியோக :

ஷடங்க நியாஸ :
சூலினி துர்க்கே, மகா யோகேஸ்வரி, வரதே, தேவஸித்த பூஜித யுத்தப்பிரியே, விந்த்யா வாஸினி, நந்தினி.

தியானம்

பிப்ராணா சூல பாணாஸ்ய அபய வர கதா சாப பாசான் கராப்ஜை :-
மேக ஸ்யாமா கிரீடோல்லஸித சசிகலா பூஷணா பீஷணா ஸ்யா
ஸிம்ஹஸ் கந்தாதி ரூடா சதஸ்ரு பிரசிதம் கேடகம் பிப்ரதீபி :
கன்யாபி :பின்ன தைத்யா பவது பவபயத்வம்ஸினி சூலினி ந :

மூல மந்திரம்

ஜ்வல ஜ்வல சூலினி துஷ்ட க்ரக ஹும் பட் ஸ்வாஹா

ஸ்ரீ சூலினி மாலா மந்திரம்

அஸ்ய ஸ்ரீ சூலினி மாலா மந்திரஸ்ய மிருத்யுஞ்ஜய ரிஷி : உஷ்ணிக் சந்த: ஸ்ரீ சூலினி தேவதா

தும் - பீஜம், ஸ்வாஹா சக்தி : பட் கீலகம் ஸ்ரீ சூலினி துர்க்கா ப்ரசாத ஸித்தியர்த்தே ஜபே விநியோக:

தியானம்

ஓம் நமோ பகவதி ஜ்வல ஜ்வல சூலினி ஸர்வ சத்ரு சம்ஹாரிணி. ஸர்வபூத நிர்நாசினி, ஸகல துரித நிவாரிணி, ஸகல ராக்ஷஸ ஸம்ஹாரிணி, ஸிம்ஹ வாஹினி, அஷ்ட புஜே, அட்டஹாஸ த்வம்ஸினி.

ஓம் ஹ்ரீம் ஜ்வல சூலினி ஆவேசய பூத க்ரகம், பிரேத க்ரகம், பிசாச க்ரகம், பிரம்ம ராக்ஷஸ க்ரகம், சாகினி க்ரகம், டாகினி க்ரகம், காகினி க்ரகம், வேதாளக் க்ரகம், காளிக் க்ரகம், மகா காளிக் க்ரகம், கூக்ஷ்மாண்ட க்ரகம், ஆவேசய க்ரகம், அநாவேசய க்ரகம், ஸ்வப்ன க்ரகம், அனுபோக க்ரகம், அபஸ்மார க்ரகம், யக்ஷ க்ரகம், பக்ஷக் க்ரகம், மாஸ க்ரகம், மண்டலக் க்ரகம், நித்ய க்ரகம், க்ரூர க்ரகம், க்ருத்ரிம க்ரகம், ஸம்ஹதார ஸர்வ க்ரகான் உச்சாடய உச்சாடய, ரம் ரம், நாசய நாசய, மாரய மாரய, பூரய பூரய, சோஷய சோஷய, தஹ தஹ, பச பச, பக்ஷய பக்ஷய, கண்டய கண்டய, கட்கேந ப்ரகர ப்ரகர, சூலேன விதாரய விதாரய, பாசேன பந்தய பந்தய, அனலேன தஹ தஹ.

ஓம் ஹ்ரீம் தும் துர்க்கே வம் வடுக பைரவி ஸகல ரோக ஸம் ஹாரிணீ, பூதஜ்வர, பிரேதஜ்வர, பிசாசஜ்வர, மாரிஜ்வர, மஹா மாரிஜ்வர, அமரஜ்வர, க்ருத்ரி மஜ்வர, வாதஜ்வர, பித்தஜ்வர, சிலேக்ஷ்ம ஜ்வர, சந்நிபாத ஜ்வர, ஏகாஹிக ஜ்வர, த்வாஸிக ஜ்வர, த்ர்யாஹிக ஜ்வர சதுர்திக ஜ்வர, பக்ஷ ஜ்வர, மாஸ ஜ்வர, ஷண்மாச ஜ்வர, வத்ஸர ஜ்வர, புராண ஜ்வராணி பஞ்ஜய பஞ்ஜய, குடில சூல, குக்ஷி சூல, பார்ச்வ சூல, சிரஸ் சூல, யந்திர மந்திர தந்திர வித்யாம் பூரய.

மாம் ரக்ஷ ரக்ஷ மம பரிவாரான் ரக்ஷ ரக்ஷ ஓம் நம: க்ருஷ்ண வாஸஸி தும் துர்க்கே வம் வடுக பைரவி மம சத்ரூன் நாசய நாசய ஸகல க்ஷüத்ரான் நாசய நாசய ஓம் ஹ்ரீம் நம ஸ்வாஹா ஓம் ஸ்ரீம்தும் துர்க்கா பரமேஸ்வர்யை நம:

விஸ்வ ஜோதி : ப்ரகாஸே விவித தநுமயே விஸ்வஹ்ருத் பத்ம வாஸேவிஸ்வ வ்யாபார பேதாநு குண விதிகரே விஸ்வ சிøக்ஷ கர÷க்ஷ விஸ்வத் ரோஹம் க்ஷமஸ்வாகில துரித கணந் நாசய த்யாஸு சஸ் வதத் ராஹி ஸ்ரீ சூலிநீ ஸே ஸஹஜ கருணயா ஸந்ததம் ஸந்நிதேஹி

சூலினி பராக்ரமம்

விருத்தம், அஷ்ட தளம், பூபுரம், விருத்த மத்தியில் தியான ஆவஹனாதி பூஜை

ஓம் நமோ பகவதி ஜ்வல ஜ்வல சூலினி
ஸர்வ சத்ரு சம்ஹாரிணி
ஸர்வ பூத நிர்நாசினி ஸகல துரித நிவாரிணி
ஸகல ராக்ஷச ஸம்ஹாரிணி
ஸிம்ஹ வாகினி அஷ்டபுஜே
அட்டஹாஸ துவம்ஸினி நமஸ்தே

சரப சக்திகளில் பிரதான இடத்தை பிரத்தியங்கிராவுக்கு கொடுத்துவிட்டு அடுத்த இடத்தைப் பெற்றிருப்பவள் சூலினி. பிரத்தியங்கிரா காளி, இவள் துர்க்கை. மனித வாழ்க்கையில் துன்பங்களை ஒழித்துக்கட்ட துர்க்கையின் தயவு வேண்டும். சிவபெருமான் சூலத்தைப் பிரயோகித்து துஷ்ட நிக்ரஹம் செய்த காரியங்களில் எல்லாம் பக்கத் துணையாக இருந்தவள் சூலினி தான். சூலபாணியாக எப்போதும் விளங்குவதால் சூலினி. மனம், வாக்கு, காயம் இம்மூன்றும் ஒரே மாதிரி செயல்பட வேண்டும். மனம் ஒன்று நினைக்க, வாக்கு ஒன்று சொல்ல, காயம் ஒன்று செய்யக் கூடாது. பதி பசு பாசம் - பசு பாசம் என்கிறவற்றின் சேர்க்கையால் ஏற்படுகிற விபரீதத்தை நீக்கி பதியாகிய இறைவனை அடைய வேண்டும்.

துர்க்கை

துர்க்கமா என்று ஒரு பெயர். துர்க்கமன் என்ற அசுரனை சம்ஹரித்தவளாதலினாலும் துர்க்கா எனப் பெயர்.

தத்ரைவச வதிஷ்யாமி துர்க மாக்யம் மஹாஸுரம்
துக்கா தேவீதி விக்யாதம் தன்மே நாம பவிஷ்யதி

இந்திரன் முதலிய தேவர்களின் சத்ருக்களை ஒழித்ததால் துர்க்கா.

ஸுபலாதிபயே துர்கே தாரிதா ரிபுஸங்கடே
தேவா: சக்ராதயோ யேன துர்கா பிரகீர்த்திதா
- தேவீ புராணம்

துக்க ஹந்திரி : சம்சாரத்திலுள்ள துக்கங்களை போக்கடிப்பவள்.

துர்க்கையின் உருவத்திற்கான வியாக்யானம் துர்க்கை - பரப்பிரும்மம். சூலம் - ஞானம் சிங்கமும் மகிஷமும் - காமக்ரோதங்கள். இவளை வழிபடுபவன் காமக்ரோதங்களை ஒழித்து ஞானம் பெறுகிறான் என்பதே இதன் தாத்பர்யம்.

ருத்ர ரூபிணி

இந்த அம்பிகை ருத்ர ரூபத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ருத்ரன் லோகோபகாரமாகவே சம்ஹாரம் செய்கிறார். அவனுக்கு உதவுபவள் என்பதால் ருத்ர ரூபிணி.

ருத்ரன் என்ற வார்த்தைக்கு அநேக அர்த்தங்கள் உண்டு.

ருஜம் த்ராவயதே தஸ்மாத் ருத்ர: பசுபதி: ஸ்ம்ருத:
- சிவ ரகஸ்யம்
ருத் துக்கம் து : கஹேதுர்வா தத் த்ராவயதிய : ப்ரபு :
ருத்ர இத்யுச்யதே தஸ்மாத் சிவ : பரம காரணம்
- வாயவீய ஸம்ஹிதை

இதன் அர்த்தம் துக்கத்தைப் போக்கடிப்பதால் ருத்ரன். தேகத்திலிருக்கும் பிராணன்களுக்கும் ருத்ரன் என்று பெயர்.

ப்ராணா வாவ்ருத்ர ஏதே ஹீதம் ஸர்வம் ரோதயந்தீ
- சாந்தோபாக்யோபனிஷத்

ஸம்ருத்யுவை நாசம் செய்யும் சக்தியுள்ளவள் சூலினி. இதனால் காலஹந்திரி என்று பெயர் மார்க்கண்டேயரைக் காப்பாற்ற யமனை உதைத்தது. இறைவனின் தேவி பாகமான இடது கால் தானே. இப்பாதமே குஞ்சிதாங்ரியாக விளங்குகிறது. அவளே பிரும்ம ஸ்வரூபிணி. பிரும்மமானது காலனுக்குக் காலனாக இருப்பதாக ச்ருதியில் சொல்லப்பட்டிருக்கிறது.

ஞ : கால காலோ குணீ ஸர்வ வித்யா
அம்பிகைக்கு ம்ருத்யுதாரு குடாரிகா என்று ஒரு பெயர்.

அபக்தானாம் ச ஸர்வேஷாம் திரோதானகரீ யத:
ஸ்ரீஸ் திரஸ்கரிணி தஸ்மாத் ப்ரோக்தா ஸத்யம் வராணணே.
- திரிபுரா சித்தாந்தம்

பாக்கியில்லாமல் த்வம்ஸம் செய்யப்பட்டு திரோதானமடைந்த (மறைந்த) ஜகத்தை திரும்பவும் சிருஷ்டிப்பதற்காக பரமாணு முதலியவைகளை உண்டாக்குவதை அனுக்கிரகம் என்று சொல்லப்படும் இதை செய்பவர் சதாசிவன். அவருக்கு இக்காரியத்தில் இந்த அம்பிகை உதவியாக இருக்கிறாளாம். இதர தேவர்கள் ஒவ்வொரு பலத்தைத்தான் கொடுப்பவர்கள். ஆனால், தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்கிற நான்கு புருஷார்த்தங்களையும் அளிக்கும் சக்தி அம்பிகைக்கு மட்டுமே இருக்கிறது. ஆகவே அம்பிகை அருள் இல்லையேல் போகம் மோக்ஷம் இரண்டும் கிடைக்காது.

யேர்ச்சயந்தி பராசக்திம் விதினா விதினாபிவா
நதே ஸர்ஸாரிணோ நானம் முக்தா ஏவ நஸம்சய:
தஸ்மாத் அசேஷ வர்ணானாம் த்ரிபுரா ராதனம் வினா
நஸ்தோ போகாயவர் கௌது யேளக பத்யேன குத்ரசித்
- பிரும்மாண்ட புராணம்

ராக்ஷஸக்னி

ராக்ஷஸர்களை ஸம்ஹாரம் செய்வதால் இவளுக்கு ராக்ஷஸக்னி என்று ஒரு பெயர்.

இத்தம் யதா யதா பாதா தாநவோத்ர பவிஷ்யதி
ததா ததா வதீர்யாஹம் கரிஷ்யாம் யரி ஸம்ஷயம்

பரமசிவனின் அஷ்டமூர்த்தங்களில் ஆகாசமயமாத்மகமான மூர்த்திக்கு பீமன் என்று பெயர். இவருடைய பத்னி சூலம் ஏந்திய அம்பிகை. இவளைக் காஷ்டா என்றழைக்கின்றனர். பத்து திக்குகள் ரூபமாக இருப்பவள் என்று அர்த்தம். எல்லாவற்றையும் தாண்டி (கடந்து) இருப்பதால் காஷ்டா என்ற பெயர் ஏற்பட்டதாகவும் சொல்லலாம். அத்யத்ருஷ்ட தசாங்குலம் என்று இதையே ச்ருதி சொல்கிறது.

அம்பிகையானவள் 1. சரீர துன்பங்கள் 2. பஞ்ச பூதங்களினால் ஏற்படும் துன்பங்கள் 3. தேவதைகளால் ஏற்படும் துன்பங்கள் ஆகிய மூன்று தாபங்களையும் நீக்கி சந்தோஷத்தைத் தருபவள்.

திரிபுர ஸம்ஹாரத்தில் பங்கு

திரிபுர சம்ஹாரம் செய்த சிவபெருமானுக்கு சூலம் ஏந்திய கையுடன் பக்கத்துணையாக இருந்தவள் சூலினிதான். திரிபுரம் என்றால் பொன், வெள்ளி, இரும்பு என்னும் உலோகங்களால் அமைந்துள்ள மதில்களோடு கூடிய முப்புரம் மூன்று லோகங்களிலிருந்து பறந்து சென்று அழிக்கும் ஆற்றலுள்ளவை.

தாரகாசுரன் குமாரர்களான வித்யுன்மாலி, மகாராக்ஷன், தாரகாக்ஷன் இவர்கள் தவம் செய்து அரும்பெரும் வரங்களைப் பெற்றனர். இதன் முக்கிய அம்சம் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை மூவரும் அறை க்ஷணம் கூடுவர். அச்சமயம் சர்வேஸ்வரனால் தான் மரணம் வரலாம். அவரும் அதுவரை உலகில் இல்லாத ரதத்தில் அமர்ந்து புதிய விதமான சரத்தால் அடிக்க வேண்டும். இவர்கள் உபத்திரவம் தாங்க முடியாத அளவுக்குப் போய் விட்டது. ஊரை அழித்து உடலை வளர்ப்பது ராக்ஷஸ குணம். இதை இவர்கள் பின்பற்றினர். பல கொடுமை களை இழைத்தாலும் தாங்கள் வாழத் தவறாமல் தர்மம் புரிந்தனர். ஆகவே அவர்களை யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை.

இறைவனிடம் இவர்கள் அக்கிரமங்களை தேவர்கள் தெரிவிக்கவே அவரும் யுத்த சன்னத் தரானார். இமயமலையே தேர். சந்திர சூரியர் தேர் சக்ரமாயினர். பதினான்கு லோகங்களும் தேர் தட்டுகளாயின. எட்டுத்திக்கிலுள்ள மலைகள் சேர்ந்து தூண்களாகின. அலைக்கடல் தேர் சிலையாயிற்று. இத்தேரில் நான்கு வேதங்களும் நான்கு குதிரைகளாகப் பூட்டப்பட்டன. காயத்ரியே கடிவாளம், பிரும்மா சாரதியாக அமர்ந்தவர். மேருமலை வில்லாக வாசுகி நாணாக அமைய விஷ்ணுவே பாணமாகி விட்டார். அக்னி தேவன் அம்பின் கூர்மையான வாயாக ஜ்வலிக்க வாயு அம்பில் கட்டிய சிறகாயிற்று.

சிவபெருமான் இந்த முப்புர அட்டகாசங்களை ஒழித்துக்கட்ட யுத்த சன்னத்தரானார். ஒவ்வொரு தேவர்களும் தங்கள் மனத்திற்குள் நம்மாலன்றோ சிவபெருமான் முப்புரங்களை ஒழிக்கப் போகிறார் என்ற அகந்தை ஏற்பட்டிருப்பதை அறிந்தார். உடனே சிவபெருமான் இடப்பக்கம் இருக்கும் தேவியைக் கடைக்கண்ணால் பார்த்தார். சிரித்தார். புன்சிரிப்பு தான். அச்சிரிப்பிலேயே முப்புரங்களும் சாம்பலாகி விட்டன. முப்புரங்களையும் ஒழிக்க இறைவனுக்கு சக்தி கொடுத்தவள் அம்பிகையே. எந்தக் காரியத்தை ஈசன் செய்ய எண்ணினாலும் அவருக்கு மனமு வந்துத் துணை செய்ய அவள் நிற்கிறாள். இதைத் தான் அபிராமிபட்டர் முப்புரங்கள் மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாள் நுதலே என்கிறார்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum