எனக்கு 23 வயது. குடும்ப கஷ்டங்கள் சொல்லி மாளாது. நிறைய மனக் குழப்பம். இதனால் அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் போகிறது. நான் என்ன செய்வது?
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1
எனக்கு 23 வயது. குடும்ப கஷ்டங்கள் சொல்லி மாளாது. நிறைய மனக் குழப்பம். இதனால் அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் போகிறது. நான் என்ன செய்வது?
நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. ஆனாலும், பரவாயில்லை. கஷ்டங்களை வேண்டாம் என்றால் போய்
விடாது. வாழ்க்கையில் பெரும்பாலான பிரச்னைகள் இடியாப்பச் சிக்கல் போன்றவைதான்.
கஷ்டங்கள் வரும்போது அதை முறியடிக்கும் ஒரே ஆயுதம் பொறுமை மட்டும்தான். ‘இப்போ என்ன, இதானே பிரச்னை. இதுக்கு என்ன பண்ணலாம்’ என்று யோசிக்கத் துவங்குங்கள்.
பலரிடம் யோசனை கேட்கும்போதுதான் குழப்பம் மேலிடுகிறது. கேட்கும் யோசனைகளால் குழம்பாமல் அவற்றில் ஏதாவது ஒன்றின் மூலமாவது தெளிவு கிடைக்குமா என்றுதான் பார்க்க வேண்டும்.
ஏதேனும் பணியில் ஈடுபட்டுக் கொண்டேயிருங்கள். சில சமயம் சும்மா இருந்தாலே ஏதோ நிறைய பிரச்னைகள் இருப்பதுபோல மனது கற்பனை செய்து கொள்ளும்.
வெள்ளியில் சிறிய நாகர் உருவம் வாங்கி 12 நாட்கள் அதற்கு பூ போட்டு வணங்கி வாருங்கள். பூஜை முடிவில் கந்தர் அலங்காரத்திலிருக்கும் இந்தப் பாட்டை பாடுங்கள்.
பன்னிரெண்டு நாட்கள் கழித்து முருகன் கோயில் அல்லது சிவன் கோயில் அர்ச்சகருக்கு நாகரை தானமாகக் கொடுத்திடுங்கள். எல்லா பிரச்னைகளும் மறையும்.
அப்பனே எனக்கு அமுதனே! ஆனந்தனே!
அகம்நெக அள்ளூரு தேன் ஒப்பனே!
உனக்குரிய அன்பரில் உரியனாய் - உனைப்பருக நின்ற
தோர் துப்பனே! சுடர் முடியனே!
துணையாளனே!
தொழம் பாளர் எய்ப்பினில் வைப்பவனே! எனை
வைப்பதோ சொலாய் நைய வையத்து எங்கள் மன்னனே!
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» என் வயது 21. நான் பிறந்த நாள்முதல் எல்லோரும் என்னை வெறுக்கிறார்கள். நான் யாரிடம் அதிக பாசமும், அன்பும் வைத்திருக்கிறேனோ அவர்கள் சீக்கிரமாக பிரிந்து விடுகிறார்கள். இதனால் மனம் உடைந்து போகிறேன். எனக்கு திருமணம் நிகழ்ந்தால் கணவரும் என்னை விட்டுப் பிரிந்து வ
» என் வயது 71. கயிறு வியாபாரம் செய்து வருகிறேன். எல்லோரும் இருந்தும் எந்த விதத்திலும் அவர்களிடமிருந்து உதவி எதுவும் பெற முடியவில்லை. வருமானம் போதாமல் வாழ்கிறேன். நான் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
» இப்போது என் வயது 25. எனக்கு ஒரு அக்கா. எங்கள் தந்தை எங்களுடன் இல்லை. தாயார் சத்துணவு ஊழியை. மிகமிகக் குறைந்த வருமானத்துடன் பலரிடம் உதவிகள் கேட்டு அக்காவின் திருமணத்தை நான் முடித்து வைத்தேன். 12வது வரை படித்து ஒரு கடையில் சாதாரண வேலை செய்துவரும் எனக்கு, எ
» என் பேரனுக்கு 5 வயதாகிறது. எழுந்து நிற்கவோ, பேசவோ முடியாது. இன்னும்கூட தலை சரியாக நிற்கவில்லை. நிறைய மருத்துவர்களைப் பார்த்து விட்டோம். என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஏதேனும் பரிகாரம் சொல்லுங்கள்.
» நான் ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிகிறேன். எனக்கு 3 பெண் குழந்தைகள் பிறந்து, ஒன்று 15 நாட்களிலும், 2வது குழந்தை 6ம் வகுப்பு படிக்கும்போதும், 3வது குழந்தை விஷக்காய்ச்சலாலும் இறந்து விட்டது. நான் என்ன பாவம் செய்தேன்? நல்வாழ்வு வாழ பரிகாரங்கள் கூறுங்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum