பின்புற அழகிற்கு பயிற்சி
Page 1 of 1
பின்புற அழகிற்கு பயிற்சி
உடலின் பின்பகுதி அதிக சதை பிடித்து அசிங்கமாக இருக்கிறதே என்று இன்றைய பெரும்பாலான பெண்களும் அதிகம் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இடுப்பும், பின்புறமும் சரியான அமைப்பு இல்லாததால் அதற்கேற்ப உடைகளை தேர்ந்தெடுப்பதிலும் சிக்கல்கள் எழுகின்றன.
எனவே பின்புறத்தை அழகாக்க அழகியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்கள். ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்கள் அனைவருமே எதிர்கொள்ளும் ஒரு சிக்கல் பின்புறம் பெருத்துவிடுவதுதான்.
இதற்கு காரணம் ஒரே நேரத்தில் அதிக நேரம் உட்காரும்போது ப்ரிடிபோசைட் செல்கள் கொழுப்பு செல்களாக மாற்றம் பெறுகிறது என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் அதிக நேரம் கம்ப்யூட்டர், இன்டர்நெட் முன்பு செலவிடுவோருக்கு உடல்நல கோளாறுகள் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
முதலில் நேராக நின்றுகொண்டு தோள்களின் மீது நீளமாக ஒரு கட்டையை வைத்துக்கொள்ளவும். இரண்டு கைகளாலும் அந்த கட்டையை பிடித்துக்கொண்டு தலையை முன்னோக்கி நீட்டியவாறு முதுகுவரை வளைக்கவும். இதனால் பின்புறம் அழகாகும். உயரமான தூண் உள்ள பகுதியில் நின்று கொள்ளவும்.
அதனை பிடித்துக்கொண்டு வலதுகாலை பின்னோக்கி மடக்கவும், பத்துமுறை செய்யவும். அதேபோல் இடதுகாலையும் பின்னோக்கி மடக்கி நீட்டவும். இவ்வாறு செய்தால் கால் பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும். பின்புறம் டைட்டாக மாறி அழகாகும். ஆசனத்தை விரித்து முழங்கையை ஊன்றி குப்புற படுத்துக்கொள்ளவும்.
பின்னர் ஒருகாலை பின்னோக்கி மடக்கவும். இதோபோல் இருகால்களையும் பத்துமுறை மடக்கி நீட்டவும். இதேபோன்ற பயிற்சிகளை தொடர்ந்து காலையிலும், மாலையிலும் செய்துவர அழகான இடுப்பும், பின்பகுதியும் அழகாக மாறும்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» கண் அழகிற்கு
» புருவ அழகிற்கு..
» புருவ அழகிற்கு..
» வசீகரமான உடல் அழகிற்கு
» வசீகரமான உடல் அழகிற்கு
» புருவ அழகிற்கு..
» புருவ அழகிற்கு..
» வசீகரமான உடல் அழகிற்கு
» வசீகரமான உடல் அழகிற்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum