தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நலம் சொல்லும் நகம்

Go down

நலம் சொல்லும் நகம் Empty நலம் சொல்லும் நகம்

Post  meenu Wed Jan 30, 2013 12:45 pm

இன்றைய நவநாகரீக இளைஞர்கள் - இளம்பெண்கள் ஆடை
அலங்காரங்களுக்கு ஏகப்பட்ட பணத்தை அள்ளி விடுகிறார்கள். அதே போல் வாசனை
திரவியங்கள், சோப்பு போன்றவற்றுக்கும் கொட்டிக் கொடுக்கிறார்கள்.

வெளி
பகட்டுக்காக பணத்தை தண்ணீராய் செலவழிக்கும் இவர்கள் தங்கள் உடல் நலத்தில்
அக்கறை எடுக்கிறார்களா என்றால் இல்லையென்றே கூறலாம். கட்டழகு கால்
வேண்டும் என நினைப்பவர்கள் கால் பாதத்தை எந்த கவனிப்பும் இல்லாமல் விட்டு
விடுவார்கள்.

அதுவே பித்த வெடிப்புக்கு வழி வகுத்து
பல்வேறு நோய்களுக்கு காரணியாக அமைந்து விடும். அதே போல் கால், கை
நகங்களின் பராமரிப்பிலும் கவனம் இல்லாமல் இருந்தால் பல்வேறு நோய்கள்
சொல்லாமலே வந்து ஒட்டிக்கொள்ளும்.மேலும் நமது விரல்களில் உள்ள நகங்கள் நாம்
என்ன நோயால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பதை சொல்லாமல் சொல்லி விடும்.

"அடுத்தது
காட்டும் பளிங்கு போல்'' நகத்தின் நிறத்தையும், அதன் தன்மையையும் வைத்தே
என்ன நோயால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பதை மருத்துவர்கள் சொல்லிவிடுவார்கள்.
நகம் எவ்வாறு நமது உடல் பாதிப்பை வெளிப்படுத்துகிறது என்பதற்கு மஞ்சள்
காமாலையால் பாதிக்கப்பட்டவர்களது நகங்கள் மஞ்சள் நிறத்தில் இருப்பதே இதற்கு
முதல் உதாரணம்.

தொடர்ந்து புகை பிடிப்பவர்களுக்கு
ஏற்படும் பாதிப்பையும் பழுப்பு நிற நகங்கள் வெளிப்படுத்துகின்றன. உடல்
நிலையில் ஏற்படுகிற சில தற்காலிக பாதிப்புகளினால், நகங்களின் வளர்ச்சியில்
கூட மாற்றங்களை ஏற்படுத்தும். நகங்களை சுத்தமாகவும், சரியான அளவில் வெட்டி
விடுவதும் ஒவ்வொருவரும் நமது உடல் ஆரோக்கியத்திற்காக செய்யும் செயலாகும்.


ஒருவரது உடலில் இரும்புச் சத்துக் குறைவாக
இருப்பின், நகங்கள் உடைவது அல்லது பட்டையாக பிரிந்து வளர்வதன் மூலம்
அறியலாம். சிலருக்கு நகங்களில் மேடு பள்ளங்கள் ஏற்பட்டிருக்கும். இதுவும்
ஊட்டசத்துக் குறைபாட்டையே காட்டுகிறது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum