கூந்தல் உதிர்வை தடுக்கும் உணவுகள்...
Page 1 of 1
கூந்தல் உதிர்வை தடுக்கும் உணவுகள்...
இன்றைய காலத்தில் மாசடைந்து சுற்றுசூழல் காரணமாக கூந்தலில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஏன், அந்த பிரச்சனைகளால் வலுக்கைத் தலை கூட வருகிறது. சொல்லப்போனால் கூந்தலை வைத்தே உடலின் ஆரோக்கியத்தைப் பற்றி சொல்லலாம்.
நீங்கள் ஆரோக்கியத்துடன் இருந்தால், கூந்தல் நன்கு ஆரோக்கியத்துடன் எந்த பிரச்சனையுமின்றி இருக்கும். இல்லையெனில் கூந்தல் உதிர்தல், பொடுகுத் தொல்லை, வறட்சி போன்றவை ஏற்படும். இவையெல்லாம் வருவதற்கு காரணம், உடலில் போதிய சத்துக்கள் இல்லாததே ஆகும்.
சைவ உணவுகள் சிலவற்றால் கூந்தல் நன்கு வலுவடைந்து, கூந்தல் உதிர்தல் தடுக்கப்படும் என்று ஒரு ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களான ஜிங்க், வைட்டமின் சி, புரோட்டீன் போன்றவை உள்ள உணவுகளை சாப்பிட்டாலே, கூந்தலில் எந்த பிரச்சனையும் வராமல் இருக்கும்.
அந்த சத்துக்கள் எந்த உணவுப் பொருட்களில் அதிகம் உள்ளன என்பதைப் பார்ப்போம். கூந்தல் உதிர்ந்தால் புரோட்டீன் உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். ஏனெனில் அவை கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பதோடு, பழுதடைந்த முடியை சரிசெய்கிறது. பாதாமில் வைட்டமின் ஈ அதிகம் நிறைந்துள்ளது. இவை கூந்தலை விரைவில் வளரச் செய்கிறது.
மேலும் கால்சியம் சத்தும் அதிக அளவில் உள்ளது. இதனால் கூந்தலின் வேர்கள் நன்கு வலுவடையும் மற்றும் இதில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் கூந்தலை பட்டுப் போன்று மென்மையாக வைக்கிறது. சிகப்பு அரிசி அரிசியில் காப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.
மேலும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் உள்ள இந்த அரிசியை அதிகம் உணவில் சேர்த்தால், கூந்தல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். பச்சை காய்கறிகளான பசலைக் கீரை, கடுகு கீரை போன்றவற்றில் கூந்தலுக்கு தேவையான இரும்புச்சத்து நிறைந்துள்ளது. அதிலும் இதில் வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள், இரும்புச்சத்துக்களை உடலில் உறிஞ்சுவதற்கு உதவுகிறது.
பருப்பு வகைகளில் ஒன்றான கொண்டைக்கடலையில் அதிக அளவில் ஜிங்க் உள்ளது. இது ஸ்கால்ப்பில் பொடுகு ஏற்படாமல் தடுப்பதில் சிறந்தது. அதிலும் இதில் உள்ள கனிமச்சத்துக்கள் பொடுகு வராமல் பாதுகாப்பதில் சிறந்தது. எனவே இதனை உணவில் சேர்த்தால், கூந்தல் உதிர்தலை தடுக்கலாம்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கூந்தல் உதிர்வை தடுக்கும பீர்
» கூந்தல் உதிர்வை தடுக்கும் எண்ணெய் குளியல்
» கூந்தல் உதிர்வை தடுக்க
» கூந்தல் உதிர்வை தடுக்கும பீர்
» புற்றுநோயை தடுக்கும் 10 ஆரோக்கிய உணவுகள்!!!
» கூந்தல் உதிர்வை தடுக்கும் எண்ணெய் குளியல்
» கூந்தல் உதிர்வை தடுக்க
» கூந்தல் உதிர்வை தடுக்கும பீர்
» புற்றுநோயை தடுக்கும் 10 ஆரோக்கிய உணவுகள்!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum