இனிப்பை தவிர்த்து கேசை குறையுங்கள்
Page 1 of 1
இனிப்பை தவிர்த்து கேசை குறையுங்கள்
`இந்த உணவுப் பொருள்களெல்லாம் சாப்பிட்டா கேஸ் உண்டாகும். அதனால இதெல்லாம் சாப்பிடாதீங்க'' என்று ஒரு பக்கம். ``இந்த உணவுப் பொருள்களெல்லாம் சாப்பிட்டா, உடம்புக்கு நல்லது. ஆனா கேஸ் ப்ராப்ளம் உண்டாகும். அதனால் பார்த்து சாப்பிடுங்க'' என்று இன்னொரு பக்கம். இப்படி சொல்லும்போது, எதை சாப்பிடுவது? எதை சாப்பிடக் கூடாது? எது சாப்பிட்டால் கேஸ் உண்டாகும்? எதை சாப்பிடாமல் இருந்தால் கேஸ் உண்டாகாது? என்ற குழப்பம் பாதிபேருக்கு வரத்தானே செய்யும்?
நம்மை அறியாமலேயே, நாம் செய்யும் சில சின்னச் சின்ன விஷயங்கள் கூட, வயிற்றில் கேஸை அதிகமாக சேர்க்கக்கூடிய நிலைக்கு கொண்டு வந்து விடுகின்றது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், நாம் சாப்பிடும் விஷயம். சில பேர் இரண்டு நிமிடத்தில் சாப்பிட்டு முடித்து விடுகிறார்கள். சிலபேர் இருபது நிமிடங்களுக்கு மேல் கூட சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். முதலில் வேக வேகமாக அள்ளிப் போடுவதை நிறுத்த வேண்டும்.
வயிற்றில் அதிகமான கேஸ் சேருவதற்கு முக்கிய காரணம், வாய் வழியாக காற்றை விழுங்குவது தான் என்று ஏற்கனவே நான் சொல்லியிருந்தேன். சாப்பிடுவதற்கு கொஞ்சம் அதிகநேரம் எடுத்துக் கொண்டு, மெதுவாக சாப்பிட்டால், மெதுவாக தண்ணீர் குடித்தால், வாய் வழியாக விழுங்கும் காற்றைக் குறைக்கலாம். இதைத்தான் அந்தக் காலத்தில் நம் தாத்தா, பாட்டிகள், ``சாப்பாட்டை சுவைத்து, மென்று மெதுவாக சாப்பிடு. கவளம் கவளமாக அப்படியே விழுங்காதே'' என்று சொன்னார்கள்.
ஆனால் நாம் இப்பொழுது, பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டு பஸ் வருவதற்குள், நின்று கொண்டே தட்டைக் கையில் வைத்துக் கொண்டு நிமிடங்களில் சாப்பிட்டு முடிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். காலை, மதியம், இரவு என்று மூன்று வேளைகளாக, சாப்பாட்டை அதிகம், அதிகமாக சாப்பிடுவதற்குப் பதிலாக, ஐந்து வேளைகளாகப் பிரித்து, கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுங்கள்.
இந்த மாதிரி பிரித்து சாப்பிடும்போது ஜீரணம் ஆவதற்கும் சுலபமாக இருக்கும். கேஸ் ப்ராப்ளமும் ஏற்படாது. சிக்லெட், சூயிங்கம் போன்றவற்றை, வாயில் போட்டு நீண்ட நேரம் மென்று கொண்டிருப்பது, இளைஞர்களுக்குப் பிடித்தமான ஒரு விஷயம். அதே மாதிரி, வெறும் வாயை மெல்லுவதென்பது, வயதானவர்கள் அதிகமாக செய்யும் ஒரு விஷயம். இந்த மாதிரி சூயிங்கம் மெல்லுவது, வெறும் வாயை மெல்லுவது, மற்றும் குச்சி மிட்டாய், ஐஸ்கிரீம் ஆகியவைகளை சப்புவதன் மூலமும், காற்று, வயிற்றுக்குள் போக அதிக வாய்ப்பு ஏற்படுகிறது.
எனவே மேற்கூறிய விஷயங்களைத் தவிர்த்தால், வயிற்றில் கேஸ் சேருவதைக் குறைக்கலாம். மேலும் பாட்டில் மற்றும் கேன்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களில் கார்பன் டை ஆக்ஸைடு சம்பந்தப்பட்ட கேஸ் கலந்திருப்பதால், அவைகளும் கேஸை அதிகமாக்கும். எனவே இவைகளையும் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். சிகரெட் புகையை உள்ளிழுக்கும்போது, புகையோடு சேர்த்து, காற்றையும் நிறைய உள்ளிழுக்கிறீர்கள். எனவே, சிகரெட் பிரியர்களே, சிகரெட்டை குறையுங்கள்.
உங்கள் வயிற்றில் அதிக கேஸ் உண்டாவது குறைந்து விடும். `சார்பிடால்' என்ற பொருள், சர்க்கரைக்குப் பதிலாக, இனிப்புக்காகச் சேர்க்கப்படும் ஒரு பொருளாகும். இந்த `சார்பிடால்' பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சில உணவுப் பொருள்களில் சேர்க்கப்பட்டிருக்கும். இந்த `சார்பிடால்' சேர்க்கப்பட்ட உணவை, நாம் அதிகமாக சாப்பிட்டால், வயிற்றில் அதிகமாக கேஸ் உண்டாகும். வயிற்றிலுள்ள பேக்டீரியாக்களுடன் இந்த சார்பிடால் சேர்ந்து, கேஸ் உண்டாகிறது.
அதனால் `சார்பிடால்' சேர்ந்த உணவுப் பொருள்களை குறையுங்கள். சர்க்கரைச் சத்து மற்றும் நார்ச்சத்து நிரம்பிய உணவுப் பொருள்கள், கேஸை அதிகமாக உண்டாக்கக் கூடிய உணவுப் பொருள்களாகும். அதிலும் குறிப்பாக ப்ரக்டோஸ், லேக்டோஸ், ரேபினோஸ், சார்பிடால் ஆகியவை கலந்திருக்கிற இனிப்புப் பொருட்கள் என்றால் கேட்கவே வேண்டாம். கண்டிப்பாக அதிகமாக கேஸை உண்டுபண்ணத்தான் செய்யும். எனவே இனிப்புப் பொருட்களை அதிகம் சாப்பிடாதீர்கள்.
சாப்பிடாமல் பட்டினி கிடந்தால், வயிற்றில் கேஸ் அதிகமாக உருவாவதைத் தடுக்கலாம். அதற்காக பட்டினி கிடக்க முடியுமா! காய்கறிகளில் முட்டைகோஸ், கொத்தவரை, கேரட், காலிப்ளவர், வெங்காயம், உருளைக்கிழங்கு, முள்ளங்கி, பட்டாணி, முதலியவைகள் கேஸ் அதிகமாக உண்டு பண்ணும் தன்மை வாய்ந்தவை. பழங்களில் ஆப்பிள், வாழைப்பழம், ஆரஞ்சு, பேரிக்காய், முதலிவைகள், கேஸ் அதிகமாக உண்டுபண்ணும்.
பால் சம்பந்தப்பட்ட பொருட்களில் பாலாடைக்கட்டி, ஐஸ்கிரீம், பால், பதப்படுத்தப்பட்ட பாலில் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் முதலியவைகள், கேஸ் அதிகமாக உண்டு பண்ணும். பீர், டயட் சோடா, பழ ஜுஸ், ஒயின் முதலியவைகள், கேஸ் அதிகமாக உண்டு பண்ணும். முக்கால்வாசி குளிர்பானங்களில் ப்ரக்டோஸ், சார்பிடால் இருப்பதால், இவைகள் எல்லாமே கேஸை உற்பத்தி பண்ணும். நொறுக்குத் தீனிகள் அனைத்துமே கேஸை உண்டு பண்ணும்.
கேஸ் குறைவாக உண்டுபண்ணும், சில உணவுப் பொருட்களைப் பார்ப்போம். யோகர்ட், வெண்ணெய், தயிர், சர்க்கரை சேர்க்காத வடிகட்டிய பழ ஜுஸ்கள், வெள்ளை சாதம், பிசைந்த, நன்றாக வெந்த உருளைக்கிழங்கு, முட்டை, மீன், கொழுப்பு நீக்கப்பட்ட கோழி இறைச்சி, கேரட், வெஜிடபிள் சூப் ஆகியவை குறைவான கேஸை உண்டு பண்ணும் உணவுப் பொருள்களாகும். பெரும்பாலும் உணவுப் பொருட்களுடன் நேரடியாக, சர்க்கரை சேர்த்து சாப்பிடாதீர்கள்.
இது கேஸை அதிகப்படுத்தும். சாப்பிட்டபின், முடிந்தால், மெதுவாக சுமார் அரை கிலோ மீட்டர் நடந்து விட்டு வாருங்கள். கேஸ் அதிகம் உண்டாவதை தடுக்கும். சிகரெட் புகைப்பதை குறையுங்கள். குளிர்பானங்கள் குடிக்கும்போது, ஸ்ட்ரா இல்லாமல் குடித்துப் பாருங்கள். ஸ்ட்ரா போட்டு குடிப்பது சுகாதாரம் தான். ஆனால் ஸ்ட்ரா உபயோகப்படுத்தி குடிக்கும்போது, காற்று வயிற்றுக்குள் போகிறது. மனஅழுத்தம் கூட கேஸை அதிகப்படுத்தும். எனவே ரிலாக்ஸாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
``மயூராஸனா' என்பது மயில் தோகை விரித்து ஆடுவது போல், செய்யப்படும் ஒரு யோகாசனப் பயிற்சியாகும். இந்தப் பயிற்சி செய்யும் போது, ரத்த ஓட்டம் அதிகமாகி, ஜீரணம் அதிகப்படுத்தப்பட்டு, கேஸ் அதிகமாக சேரவிடாமல் பார்த்துக் கொள்ளும்'' என்று யோகாசன நிபுணர்கள் கூறுவதுண்டு.
``தண்ணீரைத் தவிர, எதைச் சாப்பிட்டாலும் கேஸ் உண்டாகும்'' என்று ஈஸியாக சொல்லி விடலாமே என்று நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது. எதையும் அளவோடு சாப்பிடுங்கள்.
உங்கள் உடலுக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்று தெரிந்த உணவுப் பொருட்களை ஒதுக்கி விடுங்கள். கண்டிப்பாக கேஸ் உங்களை தொந்தரவு பண்ணாது

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இனிப்பை தவிர்த்து கேசை குறையுங்கள்
» தூக்கத்தை தவிர்த்து விடு
» திருட்டு சி.டிக்களை தவிர்த்து திரையுலகினரை வாழ வைக்க வேண்டும்: நடிகை தேவயானி பேட்டி
» சர்க்கரை நோயை விரட்ட உப்பை குறையுங்கள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum