தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சோயா கிரேவி

Go down

சோயா கிரேவி Empty சோயா கிரேவி

Post  oviya Sun Jul 07, 2013 5:13 pm

தேவையான பொருட்கள்:

குட்டி சோயா - ஒரு கப்
தக்காளி - 2
வெங்காயம் - 2

அரைக்க:

தேங்காய் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 6 பல்
சோம்பு - சிறிதளவு
மிளகாய் தூள் - 4 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 6

தாளிக்க:

சோம்பு - சிறிதளவு
பட்டை - 2

செய்முறை:

* முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயார்படுத்தி வைத்துக் கொள்ளவும்.

* அரைக்க தந்துள்ள பொருட்களை அரைத்து கொள்ளவும்.

* வெங்காயம், தக்காளியை பொடி பொடியாக நறுக்கவும்.

* சோயாவை(மீல் மேக்கர்) சுடு தண்­ணீரில் போட்டு 5 நிமிடம் வேக வைக்கவும்.

* கடாயில் என்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை போட்டு வதக்கவும்.

* பின்னர் வெங்காயம் போட்டு பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும்.

* அதன் பின்னர் தக்காளி போட்டு வதக்கவும்.

* தக்காளியை நன்கு வெங்காயத்துடன் சேர்த்து கலக்கவும்.

* பின் சோயவையும் சேர்த்து வதக்கவும்.

* 5 நிமிடத்திற்கு பின், அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து வதக்கவும்.

* பச்சை வாசனை போகும் வரை, நன்கு கொதிக்க விடவும்.

* தேவையான அளவு தண்ணீ­ர் சேர்த்து கொதிக்க விடவும்.

* கொதித்த பின், கொத்தமல்லி தழை தூவி இறக்கி வைத்து பரிமாறவும்.

* இந்த கிரேவி, இட்லி, தோசை, சப்பாத்தி, பூரிக்கு சூப்பர் காம்பினேஷன்.

குறிப்பு: காரம் தேவைக்கு தகுந்தாற் போல், அதிகப்படுத்திக்கொள்ளவும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum