முதுகுவலியால் அவதிப்படுகிறீர்களா?
Page 1 of 1
முதுகுவலியால் அவதிப்படுகிறீர்களா?
இன்று பலரையும் படுத்தி எடுக்கும் தொந்தரவு, `பேக் பெய்ன்' எனப்படும் முதுகுவலி. தலைவலி, காய்ச்சல் போல முதுகுவலியும் இன்று இயல்பான விஷயமாகிவிட்டது. இதில் அதிகம் பாதிக்கப்படுவது இருபது வயதில் இருந்து முப்பத்தைந்து வயது வரை உள்ளவர்கள்தான். அதுவும் முதுகுவலியால் பாதிக்கப்படுபவர்களில் பெண்கள் முதலிடத்தில் இருக்கிறார்கள். சரி, முதுகுவலி ஏற்படாமல் தவிர்ப்பது எப்படி? இதோ அதற்கான வழிகள்...
1. நாம் படுக்கும் படுக்கையும் முதுகுவலிக்கு ஒரு முக்கியக் காரணமாக உள்ளது. `போம்' மெத்தைகள் முதுகுவலிக்கு ஒரு காரணம். அதனால் போம் மெத்தையில் படுப்பதைத் தவிர்க்க வேண்டும். இலவம் பஞ்சு மெத்தைகள், பாய், ஜமுக்காளம் ஆகியவை நல்லது. உயரம் குறைந்த தலையணை முதுகுவலியைக் குறைக்கும்.
2. இரு சக்கர வாகனங்களில் நீண்ட தூரம் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அதுவும் மேடு, பள்ளமான சாலைகளில் வேகமாகச் செல்லக் கூடாது. வாகனங்களின் முன்னால் அதிகம் வளையாமல் நிமிர்ந்து உட்கார்ந்து ஓட்ட வேண்டும்.
3. அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் எப்போதும் நாற்காலியிலேயே அமர்ந்திருக்காமல் அரைமணிக்கு ஒரு முறை எழுந்து நடந்து பின்னர் வேலையைத் தொடர வேண்டும்.
4. கணினியில் வேலை செய்பவர்கள் உயரம் சரியாக உள்ள நாற்காலியில் அமர வேண்டும். நாற்காலியில் உட்காரும்போது எதிரே உள்ள மானிட்டரின் நடுவில் உங்கள் மூக்குத் தெரிந்தால் நீங்கள் சரியான உயரத்தில் உட்கார்ந்திருக்கிறீர்கள் என்று பொருள்.
5. நாற்காலியில் அமர்ந்திருக்கும்போது உங்கள் பாதங்கள் தரையில் பதிந்திருக்கும்படி அமருங்கள். உயரம் போதவில்லை என்றால், பாதம் பதியும்படி உயரமாக எதையாவது உபயோகியுங்கள். பாதத்தின் நிலையை அடிக்கடி மாற்றுங்கள்.
6. நாற்காலியில் உட்காரும்போது முழங்காலை விட இடுப்பு சற்று உயரமாக இருப்பது நல்லது.
7. நாம் அமர்ந்திருக்கும்போது 40 சதவீத எடையை பின்கழுத்துப் பகுதி எலும்புகளும், இடுப்புப் பகுதி எலும்புகளும்தான் தாங்குகின்றன. அதனால் நாற்காலியில் நன்றாக நிமிர்ந்து, இடுப்புப் பகுதி நாற்காலியில் பதியும்படி அமர வேண்டும். தேவைப்பட்டால் முதுகுக்குப் பின் குஷன் பயன்படுத்தலாம்.
8. எந்தப் பொருளை எப்படித் தூக்க வேண்டுமோ அப்படித் தூக்க வேண்டும். இரண்டாக வளைந்து, குனிந்து பொருட்களை எடுக்கவோ, தூக்கவோ கூடாது. கால்களை அகட்டி, முதுகெலும்பை வளைக்காமல் தூக்கிப் பழகிக் கொள்ளுங்கள். கனமான பொருட்களைக் கையில் வைத்துக்கொண்டு அப்படியே திரும்பிப் பார்க்கக் கூடாது.
9. உடல் எடை அதிகம் உள்ளவர்கள் மட்டுமல்ல, மற்றவர்களும் நடைப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். நடைப் பயிற்சியால் முதுகு, இடுப்புத் தசைகள் உறுதியாகின்றன. இது முதுகுவலி வராமல் தடுக்க உதவும்.
பெண்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் அதிக `ஹீல்ஸ்' உள்ள செருப்புகளைப் பயன்படுத்தக் கூடாது. முதுகுவலியில் இருந்து எளிதாக நலம் பெற்றுவிடலாம். அதற்கு ஆரம்பத்திலேயே கவனம் தேவை. இதனால் அதிகம் செலவு செய்ய வேண்டியதில்லை. பயப்படவும் தேவையில்லை.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum