தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

த்ரிஷாவை புகழ்ந்து தள்ளும் முன்னணி நாயகர்கள்

Go down

த்ரிஷாவை புகழ்ந்து தள்ளும் முன்னணி நாயகர்கள் Empty த்ரிஷாவை புகழ்ந்து தள்ளும் முன்னணி நாயகர்கள்

Post  ishwarya Wed May 29, 2013 2:43 pm

உச்சத்தில் இருந்த த்ரிஷாவிற்கு வாய்ப்புகள் தற்போது சரிந்தாலும், தமிழில் ஜெயம் ரவியுடன் பூலோகம், ஜீவாவுடன் என்றென்றும் புன்னகை படங்களில் நடித்து வருகிறார்.

அதேபோல், தெலுங்கிலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். ஆனால், இதற்கடுத்து முன்னணி நடிகர்களுடன் அவரை ஜோடி சேர்க்கத் தான் யாரும் தயாராகயில்லை.

அதனால் தான், டைட்டில் கேரக்டர்களில் தன்னை யாராவது நடிக்க வைப்பார்களா என்று தனது ரூட்டை மாற்றிக் கொண்டுள்ளார் த்ரிஷா.

ஆனால், இப்படி த்ரிஷாவின் மார்க்கெட் சரிந்து விட்டதை எண்ணி ஆந்திராவில் உள்ள அவரது அபிமான கதாநாயகர்கள் தான் ரொம்பவே வருத்தத்தில் காணப்படுகின்றனர்.

அதாவது, சினிமாவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் த்ரிஷா, ரொம்ப நேர்மையான நடிகை. யாரிடத்திலும் எந்த வம்பு தும்புக்கும் போகமாட்டார். கொடுத்த வேலையை சரியாக செய்து கொடுப்பார்.

குறிப்பாக திகதி சொதப்பல் என்பது அவரிடம் இருந்ததே இல்லை. அவரைப் போன்ற ஒரு நடிகை தொடர்ந்து எங்களுடன் நடிக்காதது வருத்தமான விடயம்தான் என்று த்ரிஷாவின் நன்னடத்தை குறித்து சான்றிதழ் வாசிக்கிறார்களாம்.

ஆனால், இந்த தகவல் த்ரிஷாவின் காதில் விழுந்தபோது, இப்படி சொல்கிறவர்களுக்கு என் மீது நிஜமாலுமே அக்கறை இருந்தால் நல்ல படமாக சொல்லலாமே.

பெருமையாக மட்டும் பேசி யாருக்கு என்ன புண்ணியம் என்று தன் கருத்தை சொல்லிக் கொண்டிருக்கிறாராம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum