தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கிரகங்களும் எண்களும்

Go down

கிரகங்களும் எண்களும் Empty கிரகங்களும் எண்களும்

Post  birundha Sun May 26, 2013 4:15 pm


எண்-1: இது சூரியனைக் குறிக்கும் எண். சூரியனை அதிபதியாகக் கொண்ட எண்களில் பிறந்தவர்கள் தங்களுடைய சுய புத்தியைக் கொண்டுதான் செயல்படுவார்கள். இவர்களது அறிவாற்றலை யாராவது குறை கூறினால் இவர்களுக்கு கோபம் மிகும்.சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடப்பவர்கள் தன்னம்பிக்கை கொண்டவர்கள். தன்னுடைய காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பவர்கள். யாருக்கும் பணிந்து போக மாட்டார்கள். இவர்களிடம் ஆராய்ச்சி குணம் இருக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு இருந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்கள். தன்னைப் பற்றிய எந்த ஒரு விபரத்தையும் வெளியில் சொல்ல மாட்டார்கள்.

எண்-2: இந்த எண் சந்திரனைக் குறிக்கும். சந்திரனை அதிபதியாகக் கொண்ட எண்களில் பிறந்தவர்கள் இளகிய மனம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் பழக்கத்திற்கு அடிமையானவர்களாக இருப்பார்கள். அதிகமான சிந்தனைக் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் எந்த ஒரு செயலிலும் எளிதாக முடிவுக்கு வரமாட்டார்கள். பிறரிடம் அதிகம் பழக மாட்டார்கள். இவர்கள் எளிதாக மனம் மயங்கி விடுவார்கள். சூதுவாது தெரியாதவர்கள்.

எண்-3: இந்த எண் குருவைக் குறிக்கும். குருவை அதிபதியாகக் கொண்ட எண்களில் பிறந்தவர்கள் பேச்சுத் திறன் மிக்கவர்களாக இருப்பார்கள். பிறருக்கு கட்டளையிடவும், பிறரை அடக்கி ஆள்வதிலும் வல்லவர்கள். மிக்க தன்னம்பிக்கை உடையவர்களாக இருப்பார்கள். பல்வேறு துறைகளில் புகழ் பெறுவார்கள். பிறரைக் கவரும் தோற்றம் உடையவர்கள். இவர்களின் பேச்சில் உறுதி இருக்கும். குழப்பம் இருக்காது. இவர்கள் யாரிடமும் எளிதில் ஏமாற மாட்டார்கள். இவர்களுக்கு வெளியில் இருக்கும் பெயரும், புகழும் வீட்டில் உள்ளவர்களிடம் கிடைக்காது. கலைஞர், இளையராஜா, ஹென்றி போர்டு ஆகியோர் இந்த எண்ணில் பிறந்தவர்கள்.

எண்-4: இந்த எண் ராகுவைக் குறிக்கும். ராகுவை அதிபதியாகக் கொண்ட எண்களில் பிறந்தவர்கள் பிறர் பேச்சை கேட்டு நடக்காதவர்கள். எப்பொழுதும் பரபரப்பாக இருப்பார்கள். வீண் சண்டைக்குப் போகமாட்டார்கள். வந்த சண்டையை விட மாட்டார்கள். தான் எடுத்த காரியத்தை எப்பாடுபட்டாயினும் முடிக்கும் திறன் கொண்டவர்கள்.அதிக வேகத்தில் பணம் சம்பாதித்து அதே வேகத்தில் சேமித்த பணத்தைச் செலவு செய்து விட்டு வருந்துவார்கள்.

எண்-5: இந்த எண் புதனைக் குறிக்கும். இந்த எண்ணை அதிபதியாய் கொண்ட எண்களில் பிறந்தவர்கள் திட்டம் போட்டு செயலாற்றுவதில் வல்லவர்கள். எல்லோரிடமும் கலகலப்பாக பழகுகிறவர்கள். கவுரவமான போக்கைக் கொண்ட இவர்கள் எதையும் எளிதில் புரிந்த கொள்வார்கள். ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதில் கண்டிப்பானவர்கள். வேகவேகமாகப் பேசுவார்கள். பேசும் வார்த்தை சில நேரங்களில் கேட்பவருக்குப் புரியாது. சிந்தனை வேகத்தில் பேச்சு இருக்கும். இளம் வயதில் துன்பங்கள் அனுபவித்து பின்னர் வாழ்க்கையில் உயர்ந்தவர்களாகி இருப்பார்கள். இவர்கள் பிரச்சினைகளைக் கண்டு பயப்படாமல் எதிர் கொள்வார்கள்.

எண்-6: இந்த எண் சுக்கிரனைக் குறிக்கும். சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட எண்களில் பிறந்தவர்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ்வார்கள். அன்புடைய மனமும் எல்லோரையும் ஆதரிக்கும் எண்ணமும் வாழ்வில் எது கிடைத்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவமும் கொண்டவர்கள். இவர்களுக்கு நிறைய நண்பர்கள் இருப்பார்கள். இவர்கள் புகழுக்கு மயங்குகிறவர்கள். ஆனால் மனதில் பட்டத்தை அப்படியே கூறிவிடுவார்கள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதவர்கள். ஆன்மீக ஈடுபாடு அதிகம் உள்ளவர்கள். கலையுணர்வும், ரசிப்புத்தன்மையும் மிக்கவர்கள் எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் அதில் வெற்றி பெற வேண்டும் என்ற தீவிர உறுதிமிக்கவர்கள் அப்படியே வெற்றியும் பெறுவர்.

எண்-7: இந்த எண் கேதுவைக் குறிக்கும். கேதுவை அதிபதியாகக் கொண்ட எண்களில் பிறந்தவர்கள் ஆன்மீகத்தில் அதிகம் ஈடுபட்டாலும் அதை மனதிற்குள்ளேயே வைத்திருப்பவர்கள். கேள்வி ஞானம் உடையவர்களாக இருப்பார்கள். எளிமையான வாழ்வினை விரும்புவார்கள். பிறருக்கு உதவுவதில் சளைக்காதவர்கள். இரக்க குணம் மிக்கவர்கள். மிகக் கடுமையான உழைப்பாளிகள்.

எண்-8: இந்த எண் சனியைக் குறிக்கும். சனியை அதிபதியாகக் கொண்ட எண்களில் பிறந்தவர்களுக்கு தங்களுடைய சொந்தங்களே எதிரிகளாக மாறுவார்கள். திறமைசாலிகளாக இருப்பார்கள். தான தர்மம் அதிகம் செய்பவர்கள், பிறருக்கு உதவும் குணம் கொண்டவர்கள். உழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

எண்-9: இந்த எண் செவ்வாயைக் குறிக்கும். செவ்வாயை அதிபதியாகக் கொண்ட எண்களில் பிறந்தவர்கள் கடுமையான உழைப்பு, உண்மை பேசுதல், ஆகிய குணங்களால் உயர்வடைவார்கள். கடும் உழைப்பிற்கு இவர்கள் உள்ளமும் உடலும் ஒத்துப்போகும். உறுதி மாறாதவர்கள். பிறருடைய சூழ்ச்சி, சூதுகளை வெல்லும் ஆற்றல் மிக்கவர்கள்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum