தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

செல்வம் சேர்ந்திட ஸ்ரீலட்சுமி குபேர பூஜை

Go down

செல்வம் சேர்ந்திட ஸ்ரீலட்சுமி குபேர பூஜை Empty செல்வம் சேர்ந்திட ஸ்ரீலட்சுமி குபேர பூஜை

Post  birundha Sun May 26, 2013 3:47 pm


தீபாவளிக்கு மறுநாள் ஸ்ரீலட்சுமி குபேரனை பூஜை செய்வது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஏராளமானவர்கள் இந்த பூஜை செய்து பலன் அடைந்தவர்கள் பற்பலர். அதுவும் வட இந்தியாவில், இந்த பூஜை மிக விமரிசையாகவும் விசேஷமாகவும் அனுஷ்டிக்கப்படுகிறது. குபேரன் யட்சர்களின் தலைவர்.

இவர் ராவணனுக்கும், சூர்பனகைக்கும் சகோதரர். சிறந்த சிவபக்தர். மிக சாந்த குணம் உடையவர். ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரியின் பஞ்சத்தீ மந்திரத்தை எப்போதும் ஜபித்துக் கொண்டிருப்பவர். ஒரு முறை இவர் கைலாயம் சென்ற பொழுது, பார்வதி தேவியின் பேரழகில் பிரமித்து "ஆகா, இப்படி ஒரு தேவியை நாம் இதுவரை பூஜித்ததில்லையே'' என்றென்னி ஒரு கண்ணை மூடிக் கொண்டு விட்டார்.

இதனைக் கவனித்த பார்வதி, குபேரனை தவறாக எண்ணி "ஒரு கண் வெடித்துப் போகட்டும்'' என சபித்து விட்டாள். குபேரனோ, "தாயே, என்னைத் தவறாகப் புரிந்து கொண்டாயே' என மனமுருகி மன்றாடினார். சிவனும், பார்வதியும் அவரை மன்னித்து விட்டனர். வெடித்த கண் மறுபடியும் உயிர் பெற்றது.

ஆனால் சின்னதாகவே இருந்தது. அதனால்தான் குபேரனின் ஒரு கண் சின்னது. மற்றது பெரியது. பின்பு பரமேஸ்வரன், குபேரன் மேல் கருணை கொண்டு, வடக்கு திசைக்கு அதிபதியாக்கி சங்கநிதி, பத்மநிதியைக் காக்கும் பொறுப்பை இவரிடம் ஒப்படைத்தார். பின் என்ன, திருப்பதி ஏழுமலையானுக்கே, கடன் கொடுத்தாரே கல்யாணத்தின் போது !

குபேரபட்டினமான அழகாபுரியில் அத்தாணி மண்டபத்தில் தாமரை மலர் மெத்தை, மீனாசனம் ஆகியவைகளின் மீது அமர்ந்து ஒரு கை அபயமுத்திரை, கிரீடம் முதலிய தங்க ஆபரணங்களுடன் முத்துக் குடையின் கீழ் சிம்மாசனத்தில் தனது தர்ம பத்திரியுடன் சேவை சாதிக்கிறார்.

சங்கநிதி பத்மநிதியை தன் பக்கத்திலே இருக்க அமர்ந்துள்ளார்.
தனத்திற்கும், வீரத்திற்கும் ராஜா, ஸ்ரீகுபேரனே. இவரை பூஜித்தால் ஸ்ரீமகா லட்சுமியின் கிருபையால், செல்வமும், வீரமும் இணைந்து கிடைக்கும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum