அசோகா அல்வா
Page 1 of 1
அசோகா அல்வா
தேவையான பொருட்கள்:
- பயத்தம் பருப்பு: 250 கிராம்
- கோதுமை மாவு : 250 கிராம்
- சீனி (சர்க்கரை ) :400 கிராம்
- நெய்: 100 கிராம்
- முந்திரி பருப்பு: 10
- ஏலக்காய் : 4
- கேசரி பவுடர்: தேவையான அளவு
செய்முறை
- முதலில் பயத்தம் பருப்பை குக்கரில் நன்கு வேக வைத்து தனியே எடுத்து வைத்து கொள்ளவும்.
- ஒரு வாணலியில் சிறிது நெய் ஊற்றி முந்திரி பருப்பை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
- அதே நெய்யில் கோதுமை மாவை நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும்.
- பின்னர் கோதுமை மாவு நன்கு மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்
- கோதுமை மாவு நன்கு வெந்ததும், வேக வைத்த பயத்தம் பருப்பு, நெய் கலந்து இந்த கலவை நன்கு சுருண்டு வரும் வரை கிண்டி கொண்டே இருக்கவும்.
- இதன் மேல் சர்க்கரை கலக்கவும்
- ஒரு சிறிய கரண்டி பாலில் தேவையான அளவு கேசரி பவுடர் கலந்து வைத்துக்கொள்ளவும்.
- அசோகா கலவை நல்ல பதத்திற்கு வந்தவுடன் கேசரி பவுடர் கலந்த பாலை ஊற்றி நன்கு கிளறி விடவும்.
- வறுத்த முந்திரி பருப்பு ஏலக்காய் தூவி இறக்கி விடவும்.
அசோகா அல்வா தமிழ் நாட்டில் தஞ்சாவூர் வட்டாரத்தில் மிகவும்
பிரசித்தம். எல்லா நல்ல காரியங்களுக்கும் நடக்கும் விருந்தில் கண்டிப்பாக
பரிமாறப்படும். ஒரு வாரம் ஆனாலும் கெடாது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum