தை அமாவாசை திருவிழா திருக்கடையூர் அபிராமி அம்மனுக்கு ரூ.5 கோடி ரத்தின அங்கி சாத்தல்
Page 1 of 1

தரங்கம்பாடி : திருக்கடையூர் அபிராமி அம்மனுக்கு பக்தர்களின் காணிக்கை ரூ.5 கோடி மதிப்பில் செய்யப்பட்ட நவரத்தின அங்கி அணிவிக்கப்பட்டது.
நாகை மாவட்டம் திருக்கடையூரில் அபிராமி அம்பாள் சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் நாயன்மார்களால் பாடல் பெற்ற தலம். மார்க்கண்டேயருக்காக காலனை சம்ஹாரம் செய்து அட்டவீரட்ட தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.
தீவிர பக்தரான பட்டருக்காக அபிராமி அம்மன் தனது தோடை கழற்றி வானத்தில் வீசி முழுமதி தோன்றச் செய்தார் என்பது புராண வரலாறு. இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை அன்று தருமபுரம் மடாதிபதி முன்னிலையில் ஓதுவா மூர்த்திகள் அபிராமி அந்தாதியை ஒவ்வொரு பாடலாக பாட சிவாச்சாரியார் ஒவ்வொரு பாடலுக்கும் நிவேதனத்துடன் தீபாராதனை சிறப்பாக நடைபெற்று வருகிறது.
தை அமாவாசையையொட்டி அபிராமி அம்மனுக்கு பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த பணம் ரூ.5 கோடியில் செய்யப்பட்ட நவரத்ன அங்கி நேற்று முன்தினம் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டது. தருமபுரம் குருமகா சன்னிதானம், திருவாடுதுறை குருமகா சன்னிதானம், திருப்பனந்தாள் மடாதிபதி ஆகியோர் முன்னிலையில் விழா நடைபெற்றது.
நவரத்தின அங்கி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. விழாவில், அபிராமி பட்டர் பாடிய 76வது பாடல் பாடும்போது விளக்குகள் அணைக்கப்பட்டு மின் விளக்கால் அமைக்கப்பட்ட முழு நிலவு காட்டப்பட்டது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி (மூலமும் தெளிவுரையும்)

» தங்க அங்கி தரிசனம்
» அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி
» அம்மனுக்கு உகந்த ஆடி மாதம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum