தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மகா சிவராத்திரி : பாவங்களை பொசுக்கும் பரமேஸ்வரன்

Go down

  மகா சிவராத்திரி : பாவங்களை பொசுக்கும் பரமேஸ்வரன் Empty மகா சிவராத்திரி : பாவங்களை பொசுக்கும் பரமேஸ்வரன்

Post  ishwarya Thu May 23, 2013 5:49 pm

இந்து மத கலாசாரம், பண்பாடு, சுபவிசேஷங்கள், வழிபாடுகள் எல்லாமே ஜோதிட, ஆன்மிக வழிகாட்டுதலின்படி காலம் காலமாக நடக்கின்றன. நாள்,
நட்சத்திரம், திதி போன்றவற்றை அடிப்படையாக வைத்து விரதங்களை நம் முன்னோர்கள் வகைப்படுத்தியுள்ளனர். அந்த வகையில் சிவனுக்கு உகந்த நாட்களாக சிலவற்றை கூறுவார்கள்.

அதில் மிகவும் பிரசித்தி பெற்ற விரதமாக சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை சதுர்த்தசி இரவு சிவராத்திரி. இந்த விரதத்தை சிவ பக்தர்கள் மாதம்தோறும் தவறாமல் கடைபிடிப்பார்கள். இதில் தனிச் சிறப்பாக மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி இரவே மகிமை மிக்க மகா சிவராத்திரி எனப்படுகிறது.

பஞ்ச ராத்திரிகள்

நித்ய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி என சிவராத்திரிகள் ஐந்து வகைப்படும். தை மாத தேய்பிறை சதுர்த்தசி பட்ச சிவராத்திரி. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி அன்று வருவது மாத சிவராத்திரி. சோம வாரமான திங்கள்கிழமை சிவராத்திரி வந்தால் யோக சிவராத்திரி. மாசி மாதத்தில் வருவது மகா சிவராத்திரி.

மகா சிவராத்திரியின் சிறப்பு

புராணங்களில் சிவபெருமானின் திருவிளையாடல்கள் பலவிதமாக சொல்லப்பட்டுள்ளது. சிவனின் கண்களை பார்வதி தேவி மூடியதால் ஈரேழு உலகங்களும் இருளில் மூழ்கின. அந்த நாளே சிவராத்திரி என்பார்கள்.

ஆலகால விஷத்தை உண்ட சிவபெருமான் ‘நீலகண்டன்’ என பெயர் பெற்றார். அன்றைய தினம் இரவு முழுவதும் தேவர்கள் சிவனை வணங்கி துதித்தனர். அந்நாளே சிவராத்திரி என்பர்.

மார்க்கண்டேயன் உயிரை காக்க எமதர்மனை சிவபெருமான் காலால் உதைத்தார். எமன் மயங்கி விழுகிறார். எமனை உயிர்ப்பிக்குமாறு தேவர்கள் வேண்டினர். அந்நாளே சிவராத்திரி என்போரும் உண்டு.

அடிமுடி தேடி காண முடியாமல் நின்ற திருமாலுக்கும், பிரம்மாவுக்கும் அண்ணாமலையாராக, லிங்கோற்பவ மூர்த்தியாக சிவபெருமான் காட்சி தந்த தினம் சிவராத்திரி எனவும் கருதப்படுகிறது.

அம்பாள், சிவனை நோக்கி கடுந்தவம் இருந்து சிவபெருமானின் இடப்பாகத்தில் இடம் பெற்று உமையொரு பாகனானது சிவராத்திரி அன்றுதான் என பல்வேறு சிறப்புகள் சிவராத்திரிக்கு உண்டு.

சிவராத்திரி விரதம் சற்று கடினமானது. நம் முன்னோர்கள் அதை முறையாக கடைபிடித்தனர். சிவராத்திரியன்று சூரிய உதயத்துக்கு முன்பு நீராடி அன்று
முழுவதும் உண்ணா நோன்பு இருக்க வேண்டும். பகல் முழுவதும் உறங்காமல் சிவமந்திரம், சிவ அஷ்டோத்திரம், சிவபுராணம், சிவன் திருவிளையாடல்
கதைகள் போன்றவற்றை படிக்க வேண்டும். மாலையில் சிவன் கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும். இரவு முழுவதும் கண் விழித்திருந்து நான்குகால பூஜைகளிலும் கலந்து கொண்டால் மிகவும் விசேஷம். முடியாதவர்கள் இரவு 11.30 மணிக்கு மேல் 1 மணி வரை நடக்கும் லிங்கோற்பவ கால பூஜையில் கலந்து கொள்வது புண்ணியமாகும்.

சிறப்புமிக்க பதினோரு பெயர்கள்

சிவனுக்கு ஏராளமான நாமங்கள் (பெயர்கள்) இருந்தாலும், சில பெயர்கள் மிகவும் சிறப்பு மிக்கவை. சிவ தரிசனத்தின்போதும், விரத காலங்களிலும் இந்த பெயர்களை உச்சரிப்பதன் மூலம் நம் பாவ வினைகள் நீங்குவதாக சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. சிவனுக்கு 11 சிறப்பு பெயர்கள் உள்ளன. இந்த பெயர்களை சிவராத்திரி தினத்தன்று சிவனை வழிபடும் நேரத்தில் பயபக்தியுடன் சொன்னால் நம் தீவினைகள் அகலும் என்பது நம்பிக்கை. சக்தி மிகுந்த 11 பெயர்கள்:

பவன், ருத்திரன், மிருடன், ஈசானன், தாணு, சம்பு, சருவன், உக்கிரன், பர்க்கன், பரமேஸ்வரன், மகாதேவன் ஆகியவையே அந்த 11 பெயர்கள் ஆகும். ‘பவன் என்னை ஆட்கொண்டு அருள்வாய்.. ருத்திரன் என்னை ஆட்கொண்டு அருள்வாய்..’ என ஒவ்வொரு பெயராக உச்சரித்து மனமுருக வேண்டினால், நம் பாவ வினைகள், தீவினைகள் அனைத்தும் நீங்கி நல்வாழ்வு கிடைக்கும்.

நோய்களை தீர்க்கும் கரும்புச்சாறு

சிவராத்திரியன்று அனைத்து சிவன் கோயில்களிலும் அபிஷேக, ஆராதனைகள் மிக சிறப்பாக, விமரிசையாக நடக்கும். சிவன் அபிஷேக பிரியன். அவருக்கு தினமும் அபிஷேகம் நடந்தாலும் சிவராத்திரி அபிஷேகத்துக்கு தனி மகத்துவம் உண்டு. இந்த அபிஷேகத்தில் கலந்துகொள்வதுடன், அபிஷேகத்துக்கு தேவையான பால், தயிர், சந்தனம், பழங்கள், பச்சைக் கற்பூரம், தேன், பன்னீர், வில்வ இலை போன்றவற்றை வாங்கித் தரலாம். இன்றைய தினம் கரும்புச்சாறு அபிஷேகம் மிக முக்கியமானதும், சிறப்பானதும் ஆகும். அபிஷேகத்துக்கு கரும்புச்சாறு வாங்கித் தந்தால் தடைகள், தோஷங்கள், உடல் உபாதைகள் நீங்கும் என்பது ஐதீகம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum