பாடை கட்டும் திருவிழா
Page 1 of 1
பாடை கட்டும் திருவிழா
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் வலங்கைமானில் காதக் கவுண்டர் கோவிந்தம்மாள் என்ற தம்பதி வாழ்ந்து வந்தனர். இறைவனை மறவாது வணங்கும் சிறந்த பக்தியாளர்களாக அவர்கள் திகழ்ந்தனர். கணவனுக்கு ஏற்ற மனைவியாக விளங்கிய கோவிந் தம்மாள், தின்பண்டங்கள் செய்து அவற்றை பக்கத்தில் உள்ள புங்கஞ்சேரி கிராமத்திற்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து வந்தார்.
அப்படி ஒருநாள் விற்பனை செய்த போது வழக்கத்திற்கு மாறாக ஏராளமான நெல்லும், காசுகளும் கிடைத்தன. வியாபாரத்திற்காகச் சுற்றிய களைப்பு தீர, அந்தக் கிரா மத்தில் உள்ள அய்யனார் கோவிலை ஒட்டிய குளத்தில் குளிக்கச் சென்றார். குளித்து முடித்து விட்டு கரைக்கு வந்த போது அய்யனார் கோவிலில் அனாதையாக அழுது கொண்டிருந்த ஒரு குழந்தையை கண்டார்.
அந்த குழந்தையை தானே வளர்க்க ஆசைப்பட்டார். ஆனால் ஊர் மக்களோ, குழந்தையை நாட்டாண்மைக்காரர் வளர்க்க வேண்டும் என்று கூறி விட்டனர். அடுத்த சில நாட்களில் அந்த ஊரிலும், சுற்றுப்புற ஊர்களிலும் அம்மை நோயும், வேறு தொற்று நோய்களும் திடீரெனப் பரவின. எங்கும் வறட்சி வந்தது. இது கண்டு மக்கள் எல்லோரும், `இது ஏதோ தெய்வக்குற்றம் தான் தான் வந்திருக்க வேண்டும்' என்று கருதினர்.
அப்போது அந்த ஊர் மணி யக்காரரின் கனவிலே அம்பாள் தோன்றினாள். `அடைக்கலம் காத்த அய்யனார் கோவிலில் கிடைக்கப் பெற்ற பெண் குழந்தையை அதைக் கண்டெடுத்த கோவிந்தம்மாளிடமே ஒப்படைத்தால் நோய்கள் விலகும், பஞ்சம் தீரும் என்றாள். அவ்வாறே ஊர் மக்கள் காதக் கவுண்டர்-கோவிந்தம்மாள் வீட்டுக்குச்சென்று குழந்தையைக் கொடுத்தனர். அடுத்த நாள் முதல் ஊரெங்கும் அம்மை நோய் குறைந்தது.
மழை பெய்தது. குளம், குட்டைகள் நிறைந்தன. இவையெல்லாம் அந்த தெய்வக் குழந்தையின் செயல் தான் என்று மக்கள் நினைத்தனர். பின்னர் அற்புதங்களையும், அதிசயங்களையும் அந்த குழந்தை நிகழ்த்தி காட்டினாள். அந்த சிறுமிக்கு ஏழரை வயதான போது, திடீரென மரணம் அடைந்து விட்டாள். காதக் கவுண்டரும், கோவிந்தம்மாளும், கிராமத் தாரும் அம்பாளே குழந்தை வடிவில் வந்து அவர்கள் மத்தியிலே வாழ்ந்து மறைந்ததாக நினைத்தார்கள்.
கவுண்டரின் தோட்டத்திலேயே அந்தக் குழந்தையை அடக்கம் செய்து சமாதி எழுப்பி வழிபட்டனர். அதுவே இன்றைய பாடை கட்டி மாரியம்மன் திருக்கோவில் ஆகியது. ஒரு ஜமீன்தாரை சர்ப்பக் காவடி எடுக்க வைத்தது, வாய் பேசாத ஊமையைப் பேச வைத்தது, திரு விழாவை நிறுத்திய ஒரு காவல்துறை ஆய்வாளரின் கண்பார்வையை மறைத்து, பின்னர் அவரே முன் னின்று திருவிழாவை நடத்தி மீண்டும் பார்வை பெற்றது.
அந்த திருவிழாவை இன்றளவும் காவலர்கள் நடத்துவது, பாடைக் காவடியைப் பழித்த ஒருவருக்கு அருள் புரிந்து அவரையே பாடைக்காவடி எடுத்துவரச் செய்தது. அமெரிக்காவில் வாழ்ந்த ஒரு டாக்டர் பெண் மணியின் கனவில் தரிசனமளித்து கோவிலுக்கு அழைத்து வந்தது எனப் பலப்பல அதிசயங்களையும், அற்புதங்களையும் இந்தப் பாடை கட்டி மாரியம்மன் இப்போதும் நடத்தி வருகின்றாள். வருடந்தோறும் பங்குனி ஞாயிற்றுக்கிழமைகளில் மிகச் சிறப்பான திருவிழா நடைபெற்று வருகின்ற

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பாடை கட்டும் திருவிழா
» பாலக்காடு: கேரள மாநிலம் குருவாயூரில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோயில் திருவிழா ஆண்டு தோறும் மாசி மாதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி மாலை 3 மணிக்கு தேவஸ்தானத்திற்கு சொந்தமான 32 யானைகள் பங
» கேட்டை கோட்டை கட்டும்
» இமயமலையில் ரஜினி கட்டும் ஆசிரமம்
» கவர்ச்சியில் கல்லா கட்டும் மோனிகா!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum