திருமணத் தடை நீக்கும் திருநீர்மலை வாசன்
Page 1 of 1
திருமணத் தடை நீக்கும் திருநீர்மலை வாசன்
ஆழ்வார்கள் பாடிய 108 திவ்ய தேசங்களில் திருநீர்மலை கோயிலும் ஒன்று. இருந்தான் (நரசிம்மர்), கிடந்தான் (ரங்கநாதர்), நின்றான் (நீர்வண்ணர்), நடந்தான் (உலகளந்த பெருமாள்), என நான்கு நிலைகளிலும் பெருமாளை தரிசிப்பது இக்கோயிலின் சிறப்பம்சம். மலைக்கோயிலின் அடிவாரத்தில் தாழக்கோயில் உள்ளது. இக்கோயிலில் திருமால் நான்கு அர்ச்சாவதார திவ்ய மூர்த்தங்களாக எழுந்தருளி அருள் பாலிக்கிறார். கிழக்கு திசை நோக்கி இருக்கும் இக்கோயிலின் வடபுறத்தில் நீர் வண்ணப் பெருமாள் காட்சியளிக்கிறார்.
அவருடன் மலைமேல் இருக்கும் ரங்கநாதப் பெருமானின் உற்சவத் திருமேனியும் உள்ளது. இக்கோயிலின் பிரதான மூர்த்தி ரங்கநாதர். எனினும் ஸ்தலமூர்த்தி நீர்வண்ணப்பெருமாளே ஆவார். நீர்வண்ணப் பெருமாள் ராமாயணம் எழுதிய வால்மீகி முனிவருக்கு காட்சி தந்து அருளியவர் என புராணங்கள் விளக்குகின்றன. முன்பொரு சமயம் ராமபக்தி கொண்டிருந்த வால்மீகி முனிவர், ராமாவதாரம் முடிந்த பின்பும் ராமபிரானை மீண்டும் தரிசனம் செய்ய ஆவல் கொண்டார். இதற்காக திருநீர்மலையில் தியானத்தில் ஆழ்ந்தார்.
முதலில், மலைமீதிருக்கும் ரங்கநாதப்பெருமாளாக சயனக்கோல காட்சி அவருக்கு கிட்டியதாக வரலாறு கூறுகிறது. நீர்வண்ணப்பெருமாள் தாமரைமலர் பீடத்தில் அபய ஹஸ்த முத்திரைகளுடன் மார்பில் சாளக்ராம மாலை புரள, ராஜ கம்பீரத்துடன் நின்றருள்கிறார். இதையடுத்து இக்கோயிலில் கல்யாண மங்களங்களுடன் ராமர் அன்னை ஜானகியுடன் எழுந்தருளியிருக்கிறார். மேலும் இக்கோயிலில் அணிமாமலர் மங்கைக்கு என தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. காண்டவ வனத்தின் தோயாத்ரி வனவாசல் என்று குறிப்பிடப்படும், அலங்கார வளைவைக் கடந்து மலை மீது ஏறி 250 படிகளைக் கடந்து சென்றால், மலைக்கோயிலை அடையலாம்.
மலையேறும் பாதையில் வாயு மைந்தன் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இக்கோயிலில் உள்ள பெருமாளை தரிசனம் செய்தால் தீராத நோய்கள் நிவர்த்தியாகும். திருமணத் தடை நீங்கும். குழந்தை வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. எப்படி போகணும்: பல்லாவரத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» திருமணத் தடை நீக்கும் திருக்கோயில்கள்
» திருமணத் தடை நீக்கும் திருத்தலங்கள்
» திருநீர்மலை திருநீர்மலை
» குழந்தைத் திருமணத் தடைச் சட்டம்
» குழந்தைத் திருமணத் தடைச் சட்டம்
» திருமணத் தடை நீக்கும் திருத்தலங்கள்
» திருநீர்மலை திருநீர்மலை
» குழந்தைத் திருமணத் தடைச் சட்டம்
» குழந்தைத் திருமணத் தடைச் சட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum