திருவெட்கா கோவில்
Page 1 of 1
திருவெட்கா கோவில்
ஸ்தல வரலாறு.......
காஞ்சீபுரம் ரங்கசாமி குளத்திற்கு வடக்கே நான்கு ஏக்கர் நிலப்பரப்பளவில் ஐந்து நிலை ராஜ கோபுரத்துடன் இரண்டு பிராகாரங்களுடன் உள்ள கோவில்தான் திருவெட்கா. மூவர் ஸ்ரீ சொன்ன வண்ணஞ் செய்த பெருமாள் புஜங்க சயனத்தில் திருக்கோலம்.
பாதத்தின் அருகில் சரஸ்வதிதேவி, தாயார் கோமளவல்லித் தாயார். பிரம்மதேவன் செய்யும் யாகத்தை அழிக்க சரஸ்வதிதேவி வேகவதியாக மாறி படு பயங்கரமாக வரும் பொழுது பிரம்மா திருமாலை வேண்டினார். திருமாலும் உதவி செய்ய ஆசைப்பட்டு வேகவதியின் வெள்ளத்தைத் தடுக்க, வேகவதியாற்றின் குறுக்கே அணை போல் சயனித்தார்.
இதனால் சரஸ்வதிதேவி தான் செய்த செயலுக்காக வெட்கமற்று தலை குனிந்தாள். அதனால் இந்த ஸ்தலத்திற்கு திருவெஃகா என்று பெயர் வழங்கலாயிற்று. தன்னுடைய சீடன் கணிகண்ணன் என்பவனுக்காக திருமழிசை ஆழ்வார் இந்த ஊரை விட்டே புறப்பட நேர்ந்தது.
அப்பொழுது இந்த தலத்தில்பள்ளி கொண்டிருந்த பெருமாளையும் தன்னுடன் அழைக்க, பெருமாளும் பாம்பணையைச் சுருட்டிக் கொண்டு கிளம்பினார். இதனால் இந்நகரம் பின்னர் பல்வேறு இயற்கைச் சோதனைகளுக்கு உள்ளாயிற்று யாரும் முன்வந்து காப்பாற்றவில்லை.
இதையறிந்த காஞ்சி மன்னன், திருமழிசை ஆழ்வாரையும் கணிக் கண்ணனையும் தேடிக் கண்டுபிடித்து மீண்டும் காஞ்சீபுரத்திற்கே வரும்படி வேண்ட மன்னனின் கோரிக்கையை ஏற்று அவர்களும் காஞ்சீபுரத்திற்கு திரும்பினர். பக்தனே மீண்டும் காஞ்சீபுரத்திற்கு திரும்பும் பொழுது பகவான் திருமாலும் அவர்களுடன் மீண்டும் திரும்பினார்.
சொன்னதை செய்ததால் இந்த ஊர் பெருமாளுக்கு சொன்னவண்ணம் செய்த பெருமாள் என்ற பெயரும் உண்டு. பொய்கை, பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருமங்கையாழ்வார் நம்மாழ்வார் இந்தப் பெருமாளுக்கு மங்களா சாசனம் செய்திருக்கிறார்கள்.
இங்கு இராமர் கருடன், ஆழ்வார்கள் ஆகியோர் சந்நிதிகள் உள்ளன. முதலாழ்வார்கள் மூவருள் ஒருவரான பொய்கை யாழ்வார் இத்தலத்தில் உள்ள பொய்கைப் புஷ்கரணியில் திருவோண நட்சத்திரத்தில் திருமாலின் பாஞ்ச சன்னியம் என்னும் திருச்சங்கின் அம்சமாக ஒரு தாமரை மலரில் அவதாரம் செய்தார். வேண்டிய வரம் எல்லாம் தரும் ஒப்பற்ற தலம் இது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» திருவெட்கா கோவில்(காஞ்சீபுரம்)
» சகஸ்ரலட்சுமீஸ்வரர் கோவில்
» பெருமாள் கோவில் தீர்த்தமும், சிவன் கோவில் விபூதியும்
» திருவேங்கடமுடையான் கோவில்
» விக்கிரபாண்டீசுவரர் கோவில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum