முள்ளங்கியில் உள்ள ஊட்டச்சத்து
Page 1 of 1
முள்ளங்கியில் உள்ள ஊட்டச்சத்து
கிழங்கு வகைகளில் ஊட்டச்சத்து மிக்கது முள்ளங்கி. 'காரசாரமான முள்ளங்கி உணவும், சூடான டீயும் சாப்பிட்டு வந்தால் மருத்துவர்களுக்கு வேலை யில்லாமல் செய்துவிடலாம்' என்பது சீனத்து வழக்குமொழி. அவ்வளவு ஊட்டச்சத்தும், நோய் எதிர்ப்புத் தன்மையும் நிறைந்தது முள்ளங்கி. அதன் அருமை பெருமைகளை அறிந்து கொள்வோம்...
* வேர் வகை காய்கறிகளில் மிகவும் குறைந்த ஆற்றல் வழங்கும் காய்கறி முள்ளங்கி. புதிதாக பறித்த 100 கிராம் முள்ளங்கியில் 16 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது.
* முள்ளங்கியில் ஏராளமான ஆன்டி-ஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளது. சல்பராபேன் எனும் நோய் எதிர்ப்பொருள் குறிப்பிடத்தக்கது. இது மார்பகப் புற்றுநோய்,குடற் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் என பலவிதமான புற்றுநோய் செல்கள் வளரவிடாமல் தடுத்து நிறுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு.
* புதிதாய் பறித்த புத்துணர்ச்சி நிறைந்த முள்ளங்கியில் வைட்டமின் சி, அதிக அளவில் இருக்கும். 100 கிராம் முள்ளங்கியில் 15 மில்லிகிராம் 'வைட்டமின்சி' உள்ளது. இது அன்றாடம் உடலில் சேர்க்கப்பட வேண்டிய டி. ஆர்.ஐ. அளவில் 25 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. இது தண்ணீரில் கரைந்து செயலாற்றும் திறன்மிக்க நோய் எதிர்ப்பொருளாகும்.
* உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை உடலைவிட்டு விரட்டும் பணியில் 'வைட்டமின் சி' பங்கு வகிக்கும். புற்றுநோய் வராமல் தடுப்பதிலும், நோய் எதிர்ப்புத்திறனை உடலுக்கு வழங்குவதிலும், உடல் எரிச்சல் வராமல் காப்பதிலும் 'வைட்டமின் சி' உதவுகிறது.
* போதுமான அளவில் போலேட், வைட்டமின் பி-6, ரிபோபிளேவின், தயமின் நிறைந்துள்ளது. இரும்பு, மக்னீசியம், தாமிரம், கால்சியம் போன்ற அத்தியாவசிய தாது உப்புக்களும் முள்ளங்கியில் அடங்கியிருக்கிறது.
* பீட்டா கரோட்டின், லுட்டின், ஸி-சாந்தின் போன்ற புளோவனாய்டு ஆன்டி-ஆக்சிடென்டுகள் உள்ளன. இவை தீவிரமான நோய் எதிர்ப்பொருட்களாக செயல்படும். ஆக்சிஜன் பிரீ ரேடிக்கல்கள் உடலில் சேராமல்காக்கும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஊட்டச்சத்து பெற
» ஊட்டச்சத்து நிறைந்த திராட்சை
» ஊட்டச்சத்து நிபுணர் யோசனை கேட்கணும்
» ஊட்டச்சத்து நிபுணர் யோசனை கேட்கணும்
» ஊட்டச்சத்து நிபுணர் யோசனை கேட்கணும்
» ஊட்டச்சத்து நிறைந்த திராட்சை
» ஊட்டச்சத்து நிபுணர் யோசனை கேட்கணும்
» ஊட்டச்சத்து நிபுணர் யோசனை கேட்கணும்
» ஊட்டச்சத்து நிபுணர் யோசனை கேட்கணும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum