எந்த வடிவிலும் புகை பகை தான்
Page 1 of 1
எந்த வடிவிலும் புகை பகை தான்
வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும், `ஹூக்கா' என்ற பழைய பாணி புகைப்பு முறை தற்போது பரவலாகப் பரவிவருகிறது. குறிப்பாக, பெருநகர இளைஞர்களிடம் இம்மோகம் அதிகரித்திருக்கிறது. நெருப்பில் இட்ட, வாசனையூட்டிய புகையிலையின் புகையை ஒரு குழாய் மூலம் உள்ளிழுத்துச் சுவாசிப்பதுதான் `ஹூக்கா'.
சிகரெட்டைப் போல ஹூக்கா அவ்வளவு தீமையானதில்லை என்பது ஒரு சிலரின் `புத்திசாலித்தனமான' வாதம். ஆனால், சிகரெட்டுக்கு இணையாக நுரையீரலுக்கும், சுவாச மண்டலத்துக்கும் தீங்கு பயப்பது ஹூக்கா என்கிறார்கள், ஈரானிய ஆய்வாளர்கள். இது தொடர்பாக அவர்கள் மேற்கொண்ட புதிய ஆய்வு, சமீபத்திய `சுவாசவியல்' இதழில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.
பொதுவாக ஹூக்காவில், புகையிலைப் புகையைச் சுவாசிப்பதற்கு முன் அது குழாய் வழியாகச் செல்வதால் தீய ரசாயனங்கள் வடிகட்டப்படுவதாக ஹூக்காகாரர்கள் கூறுகிறார்கள். எனவே, ஹூக்கா புகைப்பவர்கள், சிகரெட் புகைப்பவர்கள், சிகரெட் புகைக்காதவர்கள் ஆகியோரின் நுரையீரல் செயல்பாட்டை ஆய்வாளர்கள் ஒப்பிட்டார்கள்.
அப்போது, சிகரெட் புகைப்பவர்களுக்கும், ஹூக்கா புகைப்பவர்களுக்கும் சுவாசப் பாதிப்புகளான மூச்சிளைப்பு, இருமல், மார்பு இறுக்கம் போன்றவற்றுக்கான அறிகுறிகள் ஒரே மாதிரியாகக் காணப்பட்டன. சிகரெட்டை தொடாதவர்களுக்கு அந்த அறிகுறிகள் இல்லை. ஆக, புகை எந்த வடிவில் வந்தாலும் பகைதான் என்பதை உணர்வோம்!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» எந்த வடிவிலும் புகை பகை தான்
» பிரபஞ்ச ரகசியம் : எந்த கடவுளை எந்த காரியத்திற்கு வணங்குவது ?
» ஜாதகப்படி எந்த எந்த முறைகளில் எல்லாம் பணம் வரும்?
» புகைபிடித்தால் தோல் நோய் வரும் : ஆய்வு!
» எந்த முகத்திற்கு எந்த வகை தலை அலங்காரம் அழகு.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum