மழைக்காலம்: மீனை நன்றாக சமைத்துச் சாப்பிடுங்க!
Page 1 of 1
மழைக்காலம்: மீனை நன்றாக சமைத்துச் சாப்பிடுங்க!
அசைவ உணவுப் பிரியர்கள், மீன் – இறைச்சி – கோழி ஆகியவற்றை நன்றாகச் சமைத்துச் சாப்பிடுவது அவசியம். குறிப்பாக மீன் பிரியர்கள் மழைக் காலத்தில் அதை நன்றாகச் சமைத்துச் சாப்பிட வேண்டும். ஏனெனில் நன்றாகச் சமைத்துச் சாப்பிடாத நிலையில் வயிற்றுப் போக்கு – காலராவுக்கான தொற்றுநோய்க் கிருமி உடலுக்குள் செல்ல வாய்ப்பு உண்டு.
பழங்களிலும் கவனம் தேவை:-
இதே போன்று தோல் உறுதியாக உள்ள – உரித்துச் சாப்பிடும் வகையில் உள்ள வாழைப்பழம், சாத்துக்குடி, ஆகியவற்றை மழைக் காலத்தில் சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால் ஆப்பிள் – கொய்யா போன்ற மெலிதான தோல் கொண்ட பழங்களில் தொற்று நோய்க் கிருமிகள் இருக்க வாய்ப்பு உண்டு என்பதை மறந்து விடாதீர்கள்.
எப்போதும் சூடாகச் சாப்பிடுங்கள்:-
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், எப்போதும் உணவை சூடாகச் சாப்பிடுங்கள். காலையில் சமைத்த உணவை இரவில் சாப்பிடும் நிலையில், மீண்டும் சூடு செய்து சாப்பிடுங்கள். காய்ச்சி ஆற வைத்த குடிநீரையே குடியுங்கள். வயிற்றுப் போக்கு ஏற்படும் நிலையில் கஞ்சி, மோர் போன்ற திரவ உணவை அடிக்கடி சாப்பிடுங்கள்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மழைக்காலம் – திரைவிமர்சனம்
» மனம் தேடும் மழைக்காலம்
» மழைக்காலம் வந்தாச்சு : சருமத்தை கவனிங்க !
» மழைக்காலம் நெருங்குகிறது மலேரியா தாக்கும் அபாயம்
» முடி நன்றாக வளர
» மனம் தேடும் மழைக்காலம்
» மழைக்காலம் வந்தாச்சு : சருமத்தை கவனிங்க !
» மழைக்காலம் நெருங்குகிறது மலேரியா தாக்கும் அபாயம்
» முடி நன்றாக வளர
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum