கருச்சிதைவு
Page 1 of 1
கருச்சிதைவு
கர்ப்பந்தரித்த எல்லா கர்ப்பங்களும் ஒன்பது மாதங்கள் (40 வாரங்கள்) முடிவுற்று அதன் விளைவாக குழந்தை பிறப்பதில்லை. சில வேளைகளில் கர்ப்பகாலம் ஒன்பது மாதங்கள் நிறைவுபெறாமலேயே இடையிலே தானாக கலைகிறது. இதனை கருச்சிதைவு (அ) தானாக எற்படும் கருச்சிதைவு என்று அழைக்கப்படுகிறது.
கருச்சிதைவு பொதுவாக 26 வாரங்களுக்கு முன்னதாகவே ஏற்படுகிறது. சில வேளைகளில் மகப்பேறு காலங்களை இடையிலேயே அறுவைச்சிகிச்சையின் மூலம் இடையிலேயே முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது. இதனை தூண்டுதலின் பேரில் செய்யப்படும் கருச்சிதைவு என சொல்லப்படுகிறது.
பெரும்பாலும் கருவுற்ற முட்டையில் கோளாறு இருப்பின் கருச்சிதைவு ஏற்படுகிறது, அவ்வாறு குறையுள்ள கருவுற்ற முட்டை தொடர்ந்து வளர்ச்சியடையும் போது உருக்குலைந்த ஊனம் போன்ற குறைபாடுள்ள குழந்தையாக வளர நேரிடுகிறது. எனவே கருச்சிதைவு என்பது மேற்கூறிய குறைபாடுள்ள பிறப்பை தடுக்கும்.
மலேரியா, சிபிலிஸ், கர்ப்பவதி கீழே விழுவதினால், இனப்பெருக்க உறுப்புகளில் உள்ள பிரச்சினை போன்ற காரணங்களினாலும் ஏற்படக்கூடும். சில நேரங்களில், கருப்பையில் வளர வேண்டிய கரு, கருவகத்தின்று கருப்பைக்கு கருமுட்டையினை எடுத்துச் செல்லும் மிருதுவான குழலான பெல்லோப்பியன் டியூப் எனப்படும் பகுதியில் வளர்ச்சியடைவதால் கருச்சிதைவு ஏற்படுகிறது.
அதே போன்று கருப்பை அல்லாத பகுதிகளில் வளர்ச்சியடையும் கருமுட்டையினாலும ஏற்படும் கர்ப்பமானது பாதியிலேயே கருச்சிதைவு அடைகிறது. இம்மாதிரி கருச்சிதைவு ஆபத்தானதும் கூட.
கருச்சிதைவுச் செய்துகொள்ளும் பெண்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய குறைந்த பட்ச தகவல்கள்:-
* கருச்சிதைவு செய்யப்படும் போதும் அதற்கு பின்னரும் என்ன என்ன செய்யப்படும் என்பதனை தெளிவுபடுத்த வேண்டும்.
* கருச்சிதவினால் ஏற்பட்டுள்ள விளைவுகள் உ.ம். மாதவிடாய் காலங்களில் ஏற்படும் சதைபிடிப்பு, வலி மற்றும் இரத்தப்போக்கு கருச்சிதைவு முறை எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ளும்? வலியைக் குறைக்க எம்மாதிரியான முறைகள் கையாளப்படிகின்றன. இம்முறையில் ஏற்படும் ஆபத்து மற்றும் சிக்கல்கள். இம்முறையில் கருச்சிதைவு செய்தபின் எப்பொழுது சாதாரண வேலைகளில் ஈடுபடவேண்டும்.
* பெண்கள் கருச்சிதைவுச் செய்ய முன்வரும் போது, கர்ப்ப காலத்தின் காலஅளவு, பெண்ணின் மருத்துவ ரீதியான உடல்நிலை, எற்படக்கூடிய ஆபத்துகள் மற்றும் எந்த வகையான முறைகளைக் கொண்டு கருச்சிதைவு செய்யப்படும் என்ற அனைத்து விவரங்களை அவளுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
* HIV யினால் பாதிக்கப்பட்ட பெண்கள் கருச்சிதைவு சிகிச்சை பெரும் போது, அவர்களுக்கு சிறப்புத் தகவல்கள் (கருச்சிதைவில் HIV யின் பங்கு) கொடுக்கப்பட வேண்டும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கருச்சிதைவு ஏன் ஏற்படுகிறது?
» கருச்சிதைவு ஏற்படுவது ஏன்?
» கருச்சிதைவு எதனால் ஏற்படுகிறது?
» கருச்சிதைவு எதனால் ஏற்படுகிறது?
» கருச்சிதைவு ஏற்படாமல் தடுக்க
» கருச்சிதைவு ஏற்படுவது ஏன்?
» கருச்சிதைவு எதனால் ஏற்படுகிறது?
» கருச்சிதைவு எதனால் ஏற்படுகிறது?
» கருச்சிதைவு ஏற்படாமல் தடுக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum