எந்தக் காய்கறியில் என்ன சத்து.உங்களுக்காக பகுதி 1
Page 1 of 1

வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை வாங்கி வந்தவுடன், நன்றாகக் கழுவி சுத்தம் செய்த பிறகுதான் ஃப்ரிட்ஜில் அடுக்க வேண்டும். காய்களை நறுக்கிய பிறகு கழுவக் கூடாது. சிலர் காய்களை வேகவைத்த நீரை வடித்துக் கொட்டிவிடுவது உண்டு. இது கூடாது. அளவாய்த் தண்ணீரைக் கொதிக்கவைத்து, நறுக்கிய காய்கறிகளை அந்தத் தண்ணீரிலேயே கொட்டி மூடி போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்தாலே, சில நொடிகளில் வெந்துவிடும். பிறகு அடுப்பை அணைத்தவுடன் உடனே, திறக்காமல் அப்படியே வைத்திருந்தால் காய்கறிகள் சுவையாக இருக்கும். பச்சையாகச் சாப்பிடும் போது காய்கறிகளை நன்றாகக் கழுவி, லேசாக வெந்நீரில் போட்டு எடுத்த பிறகு சாப்பிடுவது நல்லது.
கேரட்
பீட்டா கரோட்டின், நார்ச்சத்து, பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் இதில் நிறைய இருக்கின்றன. பொட்டாஷியம், ஃபோலிக் அமிலம், கோலின், கால்சியம், கார்போஹைட்ரேட், வைட்டமின் சி ஆகியவை ஓரளவும், மிகக் குறைந்த அளவு இரும்புச் சத்தும் இதில் உண்டு. கண், தோல் மற்றும் எலும்பு உறுதிபடவும், ரத்த விருத்திக்கும் மிகவும் நல்லது.
குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், வயோதிகர்கள் எல்லோரும் சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் அளவோடு சாப்பிட வேண்டும். துருவியும் சாப்பிடலாம். வெதுவெதுப்பான நீரில் போட்டு எடுத்து அப்படியே சாப்பிடலாம்.
பீன்ஸ்
வைட்டமின் – சி, ஃபோலிக் அமிலம் மற்றும் நார்ச்சத்து நிறைந்தது. ஓரளவு பொட்டாஷியம், துத்தநாகம், மிகக் குறைந்த அளவு கலோரி ஆகியவை இதில் இருக்கின்றன. அதிக நேரம் வேகவைத்தால் சத்துக்கள் குறைந்துவிடுவதால், மூடி போட்டு அரை வேக்காட்டில் வேகவைத்துச் சாப்பிடுவது நல்லது. ரத்தவிருத்திக்கு நல்லது. கர்ப்பிணிப் பெண்கள் தினமும் பொரியல் செய்து சாப்பிடலாம். மலச் சிக்கல் பிரச்னைக்குத் தீர்வு தரும். சிறுநீரகக் கல்லடைப்பு இருப்பவர்கள் சாப்பிட வேண்டாம்.
வெள்ளரிக்காய்
நீர்ச்சத்து நிறைந்தது. மிகக் குறைந்த அளவு கலோரி, ஓரளவு ஃபோலிக் அமிலம், பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் இருக்கின்றன. பிஞ்சு வெள்ளரிக்காயைப் பச்சையாகவும் தடிமனான வெள்ளரியைக் கூட்டு செய்தும் சாப்பிடலாம். தாகத்தைத் தணிக்கும். சருமப் பிரச்னைகள் நீங்கும். உடல் குளுமைக்காகவும் தினமும் பச்சடி, சாலட் செய்து சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
வெண்டைக்காய்
அதிக அளவு ஃபோலிக் அமிலம், வைட்டமின் சி, பொட்டாஷியம் ஓரளவும், மாவுச்சத்து, புரதச்சத்து, இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின் குறைந்த அளவும் இருக்கின்றன.
உடல் செயல்பாடு நல்லபடியாக இருக்கவும், ரத்த விருத்திக்கும் உதவும். எல்லோருக்கும் ஏற்ற காய். கர்ப்பிணிப் பெண்கள் தினமும் சாப்பிடலாம். வதக்காமல், மூடி போட்டு அரை வேக்காட்டில் வேகவைத்துச் சாப்பிட வேண்டும்.
பாகற்காய்
கலோரி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, புரதம் போன்றவை குறைந்த அளவே இருந்தாலும் உடம்புக்கு நல்ல எதிர்ப்பு சக்தியைத் தரும்.
பசியைத் தூண்டும். நோய் எதிர்ப்பு சக்தி குறிப்பாக புற்றுநோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், தொற்று நோய்கள் வராமலும் தடுக்கும். உடம்பில் சர்க்கரையின் அளவைக் குறைப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. வயிற்றில் பூச்சித் தொல்லையை விரட்டி அடிக்கும். எல்லோருக்கும் ஏற்றது. கூட்டு, பொரியல் செய்து சாப்பிடலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» காய்கறியில் என்ன இருக்கு?
» காய்கறியில் என்ன இருக்கு?
» காய்கறியில் என்ன இருக்கு?
» காய்கறியில் என்ன இருக்கு?
» காய்கறியில் என்ன இருக்கு?
» காய்கறியில் என்ன இருக்கு?
» காய்கறியில் என்ன இருக்கு?
» காய்கறியில் என்ன இருக்கு?
» காய்கறியில் என்ன இருக்கு?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum