தாய்பாலின் ரகசியம்
Page 1 of 1
தாய்பாலின் ரகசியம்
வேலைக்குச் செல்லும் தாய் மார்கள் தங்களுக்கு கிடைக்கும் மருத்துவ விடுப்பில் முழுமையாக குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதையே முக்கிய பணியாகக் கருத வேண்டும். குழந்தை அழும்போதெல்லாம் அதற்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
அடிக்கடி பாலூட்டும் போது தான் போதுமான அளவு பால் சுரக்க வழி ஏற்படுகிறது. பேறு கால மருத்துவ விடுப்பு முடிந்து குழந்தையை வீட்டில் விட்டு விட்டு மீண்டும் வேலைக்குச் செல்லும் நிலையிலும் தாய்ப்பால் கொடுக்க முடியும்.
காலையில் வேலைக்கு புறப்படும் முன்பு, எத்தனை முறை தாய்ப்பால் கொடுக்க முடியுமோ அத்தனை முறை கொடுக்கலாம். வேலைக்குக் கிளம்புவதற்கு சற்று நேரத்திற்கு முன்பு, தாய்ப் பாலை ஒரு கிண்ணத்தில் சேகரித்து வைத்து வீட்டில் உள்ளோல் மூலம் பாலாடை மூலம் அதை கொடுக்கலாம்.
அதற்கு தாய்ப் பாலை தனியாக சுத்தமான கிண்ணத்தில் எடுத்து வைத்து வீட்டில் உள்ளோரிடம் அதனைக் குழந்தைக்கு முறைப்படி கொடுக்கச் சொல்லி விட்டு பணிக்குச் செல்லவும்.
சாதாரண வெப்ப நிலையில் 12 மணி நேரமும், குளிர் சாதனப் பெட்டியில் வைத்திருந்தால் 24 மணி நேரமும் தாய்ப்பால் கெடாமல் இருக்கும் பணியில் இருந்து வீட்டிற்கு திரும்பியவுடன் மறுபடியும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை இரவு, பகல் பாராமல் தொடர வேண்டும்.
அத்துடன் மார்பகக் காம்பில் விரிசல் ஏற்பட்டு தாய்க்கு வலி ஏற்பட்டால் அப்பொழுது தாய்ப்பாலை கறந்து கிண்ணத்தில் வைத்து தேக்கரண்டி அல்லது பாலாடை மூலம் குழந்தைக்குப் புகட்ட வேண்டும். பிறந்த குழந்தைகளுக்கு திரவ உணவுகளிலேயே தலை சிறந்ததும், ஈடு இணையற்றதும் தாயின் பாலாகும்.
இதை பாமரத் தாய்மார்கள் முதல், படித்த தாய்மார் வரை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். கர்ப்பத்தில் தாய்க்கும் சேய்க்கு உள்ள தொப்புள் கொடி உறவைத் தொடர்ந்து தாய்ப்பால் ஊட்டுவதன் மூலமாக தாய்க்கும், குழந்தைக்கும் உள்ள உறவு இன்னும் நெருக்கமாக்கப்படுவதாக பெரியவர்கள் கூறுவார்கள்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum