தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வெஜிடபிள் சூப்

Go down

வெஜிடபிள் சூப் Empty வெஜிடபிள் சூப்

Post  ishwarya Fri May 10, 2013 5:25 pm

தேவையான பொருட்கள்

வெங்காயம் (நறுக்கியது) – 1 கப்
பூண்டு – 1 டீஸ்பூன்
கோஸ், கேரட், பீன்ஸ், காலிபிளவர் (நறுக்கியது) – ஒரு கப்
பச்சைப் பட்டாணி – 2 டேபிள் ஸ்பூன்
கறுப்பு மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு எண்ணை – 2 டீஸ்பூன்
வெண்ணை – 1 டேபிள் ஸ்பூன்

ஒயிட் சாஸ் தயாரிக்க

பால் – 1 கப்
மைதாமாவு – 2 டீஸ்பூன்
சோளமாவு – 1 டீஸ்பூன்
வெண்ணை – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை

* சிறிய பிரஷர் குக்கரில் 1 டேபிள் ஸ்பூன் வெண்ணை போட்டு பொடியாக அரிந்த வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.

* பிறகு பொடியாக அரிந்த மற்ற காய்கள், பச்சைப் பட்டாணி சேர்த்து மேலும் சிறிது வதக்கி 5 கப் தண்ணீர் ஊற்றி கறுப்பு மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து குக்கரை மூடி கொதிக்கவிட்டு 2 விசில் விட்டதும் அணைக்கவும்.

* விசில் அடங்கியவுடன் குக்கரை திறந்து வெந்த காய்களுடன் கூடிய தண்ணீரை ஒரு உலோக வடிகட்டியில் போட்டு வடிகட்டவும்.

* பிறகு உலோக வடிகட்டியில் தங்கியுள்ள காய்களை ஒரு மிக்சியில் 1 கப் தண்ணீருடன் நன்கு அரைத்து மீண்டும் உலோக வடிகட்டியில் போட்டு கசக்கி வடிகட்டவும்.

* குக்கரில் 2 டேபிள் ஸ்பூன் வெண்ணை போட்டு மைதாமாவு சேர்த்து மிதமான தீயில் சிறிது வதக்கவும்.

* சோள மாவை 2 டேபிள் ஸ்பூன் நீரில் நன்கு கரைத்து வதங்கும் மைதா மாவுடன் சேர்த்து மிதமான சூட்டுடன் கூடிய பாலை ஊற்றி கட்டி தட்டாமல் நன்கு கலந்து ஒரு கொதி கொதிக்கவிடவும். இதுவே ஒயிட் சாஸ் ஆகும்.

* ஒயிட் சாசுடன் காய்கறிகளை வேகவிட்டு வடிகட்டிய நீரைச் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கினால் சூடான சூப் ரெடி.

ஆரோக்கியக் குறிப்பு

* டயட்டில் இருப்போர் வெண்ணைக்கு பதில் சிறிது எண்ணை சேர்த்து 2 கப் வெஜிடபிள் சூப்பை முழு உணவாகவே உட்கொள்ளலாம்.

சுவைக்கான குறிப்பு

* சிறு குழந்தைகள் மற்றும் உடல் எடை அதிகரிக்க விரும்புவோர் சாப்பிடுவதற்கு முன் சூப்பில் சிறிது வெண்ணை மற்றும் எண்ணையில் பொரித்த பிரட் துண்டுகளைச் சேர்த்தால் சுவை கூடும். கிரீம் சேர்த்தாலும் சுவை அதிகரிக்கும்.

* சுவையும் சத்தும் நிறைந்து, சுலபமாக செய்யத்தக்க வெஜிடபிள் சூப் சூப்பரானது என்றால்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum