வெஜிடபிள் கொத்சு
Page 1 of 1
வெஜிடபிள் கொத்சு
பொரியல், வறுவல் போன்ற வழக்கமான துணைக்கறிக்கு பதிலாக கொத்சு தயாரித்துப் பாருங்கள். சாதத்திற்கு மட்டுமல்லாது சப்பாத்தி, பூரி வகையறாவிற்கும் தொட்டுக்கொள்ள ஏற்றது. செய்து பார்த்து சுவைப்போமா..!
தேவையான பொருட்கள்:
கேரட் – 2
நூல்கோல் – 1 (சிறியது)
பச்சைப்பட்டாணி – 1 கப்
உருளைக்கிழங்கு – 2
பீன்ஸ் – 10
சவ்சவ் – பாதி
தேங்காய் – ஒரு மூடி
பொட்டுக்கடலை – 1 கைப்பிடி
வர மிளகாய் – 4
தனியா – 1 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – சிறிதளவு
வெங்காயம் – 1
உப்பு – தேவையானஅளவு
புளி – அரை எலுமிச்சம்பழ அளவு
வெல்லம் – சிறிதளவு
கடுகு – தாளிக்கத் தேவையான அளவு
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
காய்கறிகளை பொடியாக நறுக்கி திட்டமாக தண்ணீர் விட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வரமிளகாய், மல்லி, சீரகம், பெருங்காயத்தூள் போட்டு வறுத்துக் கொள்ளவும். மிக்சியில் வறுத்த மசால், தேங்காய்த்துருவல், பொட்டுக்கடலை போட்டு நைசாக அரைக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். அத்துடன் வெந்த காய்கறிகள், அரைத்த மசால் சேர்த்து கிளறி புளியை கெட்டியாக கரைத்து ஊற்றி உப்பு, வெல்லம் சேர்க்கவும். தண்ணீர் அதிகம் சேர்க்காமல் கெட்டியாக கொத்சு பதத்தில் இருக்க வேண்டும். இப்போது வெஜிடபிள் கொத்சு ரெடி.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கத்தரிக்காய் கொத்சு
» பீர்க்கங்காய் கொத்சு
» வெண் பொங்கல் – கத்திரிக்காய் கொத்சு
» தக்காளி கொத்சு (பொங்கலுக்கு தொட்டுக் கொள்ள)
» வெஜிடபிள் சாலட்
» பீர்க்கங்காய் கொத்சு
» வெண் பொங்கல் – கத்திரிக்காய் கொத்சு
» தக்காளி கொத்சு (பொங்கலுக்கு தொட்டுக் கொள்ள)
» வெஜிடபிள் சாலட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum