தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பெண்களின் பெரும்பாடு

Go down

பெண்களின் பெரும்பாடு Empty பெண்களின் பெரும்பாடு

Post  meenu Wed Jan 23, 2013 1:45 pm


பெண்கள் படும்பாட்டில் தலையானது மாதவிடாய் கோளாறுகள். ஆரோக்கியமான பெண்ணின் அடையாளம் ஒழுங்காக குறிப்பிட்ட நாட்களில் நிகழும் “மூன்று நாட்கள்” மாத விலக்கு சரிவர நிகழ வேண்டும். மருத்துவம் முன்னேறிய இந்த நாட்களிலும் ஒரு தற்காலத்திய நவீன பெண்கள் இந்த மாத சுழற்சி கோளாறுகளுக்கு, பழங்கால கிராமத்துப் பெண்களை விட அதிகம் ஆளாகிறார்கள். அந்த காலத்திய அமைதியான வாழ்க்கையும் இந்த கால பரபரப்பு வாழ்க்கையும் காரணமாகலாம்.

* மாதச் சுழற்சி சரியான நாள்களில் ஏற்படும். ஆனால் உதிரப்போக்கு அதிகமாக இருக்கும். இதை மெனோராகியா என்பார்கள். இது சராசரி உதிரப்போக்கை விட அதிகமாக போகிறது என்று எப்படி தெரிந்து கொள்வது நீங்கள் ‘சாணிடரி பேடுகளை’/ நாப்கின் பயன்படுத்துவராக இருந்தால் எவ்வப்போது மாற்றுகீர்கள், அடிக்கடி மாற்றும் படி நேர்கிறதா? என்பதை கவனித்தாலே தெரிந்து விடும். இந்த உதிரப்போக்கு ஒரு வாரம் வரை இருந்தாலும் அணிந்த ஒரு மணி நேரத்துக்குள் நேப்கின் முழுவதும் ரத்தக் கசிவு இருந்தால் அபரிமித ரத்தப்போக்கு எனலாம்.

* இது வலி, வேதனையுடன் கூடிய உதிரப்போக்கை குறிக்கும். முதல் கட்டத்தில்அடிவயிற்றில் இனந்தெரியாத வலி. இது மாதவிடாய் ஆரம்பிக்கும் முன் தோன்றலாம். இல்லை மாதவிடாயுடன் வரலாம். கூடவே தலைசுற்றல், வாந்தி, தலைவலி, மயக்கம், மலச்சிக்கல் இல்லை எதிர்மாறாக பேதி இவைகள் உண்டாகும். இதன் காரணம் சரியாக தெரியவில்லை. அதிகமான (கர்பப்பை சுருங்கி விரிய காரணமான ஹார்மோன்) சுரப்பினால் ஏற்படும் என்று கருதப்படுகிறது.

இரண்டாம் நிலையில் வயதானவர்களை பாதிக்கும். அடிவயிறு இறுக்கம், வலி, இடுப்பு, மூட்டுவலிகள், மாதவிடாய்க்கு 2-3 நாட்கள் முன்பே தோன்றும் 2 வாரங்கள் வரை கூட இந்த வலிகள் இருக்கும். காரணம் – இடுப்பு எலும்புகளின் நோய் கர்பப்பை, ஓவரீஸ் இவற்றின் திசுக்கள் வியாதிப்படுதல், கட்டிகள், கர்பப்பை சிதைவு போன்றவை. மாதவிடாய் கால விளைவுகள் இவைகளும் மாதவிடாய் காலங்களில் வேதனையை உண்டாக்கும்.

* மாதவிலக்கு நார்மலாக வரும் சமயங்களில் வராமல் வேறு நாட்களில், அடிக்கடி, இடைவெளிகள் சரியாக இல்லாமல் ஏற்படும் உதிரப்போக்கை மெட்ரோராகியா என்பார்கள்.

* மாதவிலக்கு 21 நாட்களுக்குள் ஏற்பட்டால் அது ‘பாலி மெனோரியா’ எனப்படும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum