தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குறுந்தகவல் மோசடிகள்! அரசாங்க நடவடிக்கை அவசியமாகிறது!பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்

Go down

குறுந்தகவல் மோசடிகள்! அரசாங்க நடவடிக்கை அவசியமாகிறது!பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள் Empty குறுந்தகவல் மோசடிகள்! அரசாங்க நடவடிக்கை அவசியமாகிறது!பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்

Post  ishwarya Mon May 06, 2013 5:41 pm

குறுந்தகவல்கள் மோசடிகள் குறித்து பயனீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுப்பதோடு நின்று விடாமல் அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும் பொறுப்பையும் அரசாங்கப் கொண்டிருக்க வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்க தலைவர் எஸ்.எம். முகம்மது இத்ரிஸ் கேட்டு கொண்டார்.

அண்மையில் வியாபார தந்திர அடிப்படையில் அனுப்பட்ட ஒரு குறுந்தகவலினால் ஒரு பயனீட்டாளர் பாதிக்கப்பட்டிருந்தார். இப்போஸ் (EPPOS) எனப்படும் பயனீட்டாளர்கள் சொந்தமாக தங்கள் கட்டணங்களை (உதா மின்கட்டணம், தொலைபேசி கட்டணம்) செலுத்தும் இயந்திரத்தில் முதலீடு செய்ய கோரும் மோசடி தந்திரம் அது. பயனீட்டாளர்களின் வசதிக்காக இந்த இயந்திரங்கள் பேரங்காடிக் கடைகள், உணவகங்களில் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த இயந்திரத்தின் மீது முதலீடு செய்பவர்கள் மாதம் மவெ1000 வருமானமாக பெறலாம் என்று கூறிக்கொள்ளப்படுகிறது. முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு வங்கி கடனும் ஏற்பாடு செய்து தரப்படும் என்றும் உறுதிக் கூறப்படுகிறது.

இந்த இயந்திரத்தின் விலை மவெ19,888 என்றும் அதனை கிரெடிட் அட்டை மூலமாகவும் வாங்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இதற்கான முழுக்கட்டணத்தைச் செலுத்தியப் பிறகு, மாதாந்திர வருமானமும் கிடைப்பதில்லை, அந்த நிறுவனமும் அதன் பின்பு தொடர்பு கொள்வதில்லை.

இத்தகைய ஏமாற்று மோசடிகளை முறியடிப்பதற்கு அரசாங்கம் இருவிதமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இத்ரிஸ் கேட்டு கொண்டார்.

முதலில், பயனீட்டாளர்களுக்கு எப்படி இப்படி தேவையில்லாத குறுந்தகவல்கள் வருகின்றன என்பதை ஆராய வேண்டும். பெரும்பாலும் பயனீட்டாளர் தங்களைப் பற்றி கொடுக்கும் தனிப்பட்ட தகவல்களிலிருந்தே இவை எடுக்கப்படுகின்றன. (உதாரணத்திற்கு மனு பாரங்களிலிருந்து பெறப்படுகிறது) அதாவது இத்தகைய தகவல்களைப் பெறும் நிறுவனங்கள் இத்தகவல்களைத் தவறுதலாக பயன்படுத்துகின்றார்கள் அல்லது அத்தகவல்ககளைப் பாதுகாப்பற்ற முறையில் கையாளப்படும் போது அவை அடுத்தவர் கையில் கிடைப்பதற்கு ஏதுவாகி விடுகிறது.

ஒரு தனிநபர் பற்றிய சொந்த விவரங்கள் அவரது அனுமதி இல்லாமல் மற்றுவர்களுக்கு கொடுக்கப்படக்கூடாது.

இப்படி ஒருவரின் தனிப்பட்ட தகவல்கள் தவறான முறையில் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கும், அதற்கு தக்க தண்டனை வழங்குவதற்கும் நமக்கு தனிநபர் பாதுகாப்பு சட்டம் தேவையாக இருக்கிறது.
இரண்டாவதாக, ஒப்பந்த விதிகளை மீறும் கிரேடிட் அட்டை நிறுவனங்கள் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். பிரிட்டனின் பயனீட்டாளர் கிரேடிட் சட்டம் 1974 பிரிவு 75ன் கீழ் இம்முறை பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்தச் சட்டத்தின் கீழ் ஒரு பொருளின் ரொக்க விலை 100 பவுனிலிருந்து 30,000 பவுனுக்குள் இருந்தால் (மவெ527லிருந்து மவெ158,222குள்) அவருக்குரிய கடன் 25இ000 பவுனை (மவெ131இ852) தாண்டக்கூடாது. கார்டு உரிமையாளர்கள் தனது அட்டையைப் பயன்படுத்தி வாங்கப்பட்ட பொருள் அல்லது பெறப்பட்ட சேவை பிரச்னைக்குரியதாக இருந்தால் கிரேடிட் அட்டை நிறுவனத்தில் அதற்குரிய கோரிக்கையை அவர்கள் பெறலாம்.

பயனீட்டாளர்களைப் பாதுகாக்கும் வகையில், கிரேடிட் அட்டை நிறுவனங்கள் தங்கள் ஒப்பந்தத்தை மீறி நடக்கும் போது அதற்குரிய முழு பொறுப்பை ஏற்கும் முறை இங்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்று இத்ரிஸ் கேட்டு கொண்டார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  இரசாயன உரம் உணவை நஞ்சாக்குகிறது இயற்கை வேளாண்மைக்குத் திரும்புங்கள் - பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்
» தீபாவளிக்கு மாமிச விளம்பரங்கள் வேண்டாம் - பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்!
» கணித மேதை ஜாதகம் பார்ப்பது ஏன்? ஆலோசனை வழங்காமல் பணம் வசூலிப்பது ஏன்? பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேள்வி
»  மக்கள் தொலைக்காட்சி மீதான தடை! பினாங்கு பயனீட்டாளர் சங்கள் கவலை.
»  புதிய அத்தியாயம் தேவை - ஆடிய ஆட்டமும், தின்று குவிந்த விருந்து உபசரிப்பும் போதும் - எளிமையான வாழ்க்கைக்கு திரும்புங்கள் - பினாங்கு பயனீட்டாளர் சங்கம

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum