டெல்லி அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி வீழ்த்தியது
Page 1 of 1

ஐ.பி.எல். தொடரின் 14-வது லீக் ஆட்டம் இன்று டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இதில் உள்ளூர் அணியான டெல்லி டேர்டெவில்ஸ் அணி, ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. இந்த தொடரில் முதல் முறையாக சேவாக் களமிறங்கினார். அவருடன் வார்னர் மற்றொரு துவக்க வீரராக இணைந்தார்.
ஆனால் ஸ்டெயின் வீசிய முதல் ஓவரில் 4 பந்துகளை எதிர்கொண்ட வார்னர், ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சேவாக், கேப்டன் ஜெயவர்தனே ஆகியோரும் தலா 12 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், இஷாந்த் சர்மாவின் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டை இழந்தனர்.
இதையடுத்து ஜூனேஜா-போத்தா இருவரும் விக்கெட்டை காப்பாற்றும் முயற்சியாக நிதானமாக ஆடினர். ஆனால், போத்தா 14 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். எனவே, 11-வது ஓவரில்தான் டெல்லி அணி, 50 ரன்னைத் தொட்டது. அதன்பின்னரும் டெல்லி பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க திணறினர்.
ஸ்கோர் 65 ஆக இருந்தபோது, ஜூனேஜா 15 ரன்களிலும், ஆறுதல் அளித்த இர்பான் பதான் 23 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். மார்கல், நதீம் ஆகியோர் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். ஒருபுறம் விக்கெட் விழுந்தாலும், மறுமுனையில் பொறுப்புடன் ஆடிய ஜாதவ் 20 பந்துகளில் 30 ரன்கள் (நாட் அவுட்) விளாசினார். இதனால் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்திருந்தது. சன் ரைசர்ஸ் தரப்பில் ஸ்டெயின், இஷாந்த் சர்மா, பெரேரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
இதையடுத்து 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன் ரைசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரெட்டி மற்றும் பட்டேல் களம் இறங்கினார்கள்.
ரெட்டி 1 ரன் எடுத்து ரன் அவுட் ஆனார். அடுத்து சங்கக்காரா களம் இறங்கினார். பட்டேல் நிதானமாக விளையாடி 4 பவுண்டரிகள் அடித்து 19 ரன்னில் அவுட் ஆனார்.
அதன்பின் விஹரி, சங்கக்காராவுடன் ஜோடி சேர்ந்தார். 28 ரன்கள் எடுத்த நிலையில் சங்கக்காரா அவுட் ஆனார். விஹரி 17 ரன்னில் அவுட் ஆனார்.
அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இறுதியில் சன் ரைசர்ஸ் அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் எடுத்து டெல்லி அணியை வீழ்த்தியது.
டெல்லி அணி தரப்பில் மோர்கல் மற்றும் நதீம் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். பதான் மற்றும் பொதா தலா 1 விக்கெட் எடுத்தனர்.
ஆட்ட நாயகன் விருது மிஸ்ராவுக்கு வழங்கப்பட்டது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» 5 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தியது சென்னை
» 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்
» கிங்ஸ் லெவன் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வீழ்த்தியது
» டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது
» 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தியது கொல்கத்தா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum