அறுகம் புல்லின் மகத்துவம்
Page 1 of 1
அறுகம் புல்லின் மகத்துவம்
விநாயகருக்கு மிகவும் பிரியமான வைகளில் அறுகம்புல்லும் ஒன்றாகும். அதற்கு ஒரு வரலாறு கூறப்படுகிறது. எமனின் மகனான அனலாசுரன் என்ற அரக்கன் இந்திரன் முதலான தேவர்களை விழுங்கி விட வந்தான். தேவர்கள் பயந்து நடுங்கி விநாயகப் பெருமானிடம் முறையிட்டார்கள். விநாயகர் அனலாசுரனுடன் போரிட்டார்.
கடைசியில் அவனை அப்படியே எடுத்து தான் விழுங்கி விட்டார். அதனால் ஜோதியே வடிவான அவருடைய உடல் பெரும் வெப்பத்தால் தகித்தது. விநாயகப் பெருமானுக்குள் எழுந்த அந்த வெப்பத்தைப் போக்க சந்திரன் தம் அமுத கிரணங்களால் அமுத மூற்றினான். சித்தியும் புத்தியும் தம் குளிர் மேனியால் ஓத்தடம் கொடுத்தார்கள்.
திருமால் தாமரை மலர்களால் அர்ச்சித்தார். வருணன் மழை பொழிந்து விநாயகரை நன்னீரால் அபிஷேகம் செய்தான். இவ்வாறாக பலரும் பல விதமாக பணிவிடைகள் செய்தும் வெப்பம் அகலவில்லை. கடைசியாக மகரிஷிகளும் முனிவர்களும் வந்து கூடி அறுகம்புலை கட்டுகட்டாக விநாயகர் மேல் சாற்றி, அறுகு ஊறிய மூலிகை நீரை அவர் மேல் ஊற்றி நீராட்டினார்கள்.
பின்பு இரண்டிரண்டு அறுகாக எடுத்து விநாயகரை நாமாவளி கூறி அர்ச்சனை செய்தார்கள். அதனால் விநாயகரின் உடலில் ஏற்பட்டிருந்த வெப்பம் தணிந்தது. அன்று முதல் அறுகம்புல் விநாயகருக்கு பிரியமானதாக மாறிவிட்டது.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» புல்லின் வேர் வகை
» புல்லின் கிழங்கு வகை
» கோரை புல்லின் மருத்துவ குணங்கள்
» மன்னிப்பின் மகத்துவம்
» துளசியின் மகத்துவம்
» புல்லின் கிழங்கு வகை
» கோரை புல்லின் மருத்துவ குணங்கள்
» மன்னிப்பின் மகத்துவம்
» துளசியின் மகத்துவம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum