ஐ.பி.எல். கோப்பையை சென்னை அணி வெல்லும் : கெவின் பீட்டர்சன் நம்பிக்கை
Page 1 of 1

டெல்லியில் நடைபெற்ற தனியார் நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்சன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தற்போது நடைபெற்று வரும் 6-வது ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. அந்த அணி சிறந்த கேப்டன் டோனியை பெற்றுள்ளது. அஸ்வின், ரவீந்திர ஜடேஜா போன்ற சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் சென்னை அணியில் உள்ளனர். பந்துகள் நன்கு திரும்பக்கூடிய சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தின் ஆடுகளம், இந்த வீரர்களுக்கு சாதகமாக இருக்கும்.
சென்னை அணியின் சூப்பர் ஸ்டாராக மைக் ஹசி திகழ்கிறார். எனவே, இந்த ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வெல்லும் என்று பந்தயம் கட்டுவேன்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட, நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆட்டம் இந்த ஆண்டு ஏமாற்றம் அளிக்கிறது. சென்னை மற்றும் ஈடன் கார்டன் ஆடுகளங்கள் ஒரே மாதிரியானவை. ஆனால், கொல்கத்தா அணியில் திறமையான பல வீரர்கள் இருந்தும் புள்ளி பட்டியலில் முன்னேறவில்லை.
இந்த ஆண்டு டெல்லி அணிக்கு மோசமாக தொடக்கமாக அமைந்துள்ளது. ஜெஸ்சி ரைடரும், நானும் இந்த தொடர் முழுவதும் இடம்பெறவில்லை. காயம் குணமடைந்த சேவாக் தற்போது ஆடி வருகிறார். சில வெற்றிகளை மட்டுமே பெற்றிருந்தாலும், சரியான நேரத்தில் அணி எழுச்சி பெறும். ரிக்கி பாண்டிங் போன்ற மூத்த வீரர்களுக்கு ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுவது கடினமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அயர்லாந்து கிரிக்கெட் அணிக்கு உபதலைவராக கெவின் ஓ பிறையன்
» கால்பந்தாட்டம்: ஆப்பிரிக்க கோப்பையை நைஜீரியா வென்றது
» இந்தியாவுக்கே எதிரியானார் ஆர்யா! உலக கோப்பையை பாக்., கைப்பற்றுமாம்!!
» டி20: இலங்கையை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றது மேற்கிந்தியத் தீவுகள்
» கோப்பையை இந்தியா வென்றால் நிர்வாண கோலத்தில் தரிசனம் – பூனம் பாண்டே

Permissions in this forum:
You cannot reply to topics in this forum