தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மருத்துவ காப்பீடு பெற்ற நோயாளிகளுக்கு பணமற்ற மருத்துவ வசதி 449 மருத்துவமனைகளில் ஏற்பாடு: மத்திய அரசு

Go down

  மருத்துவ காப்பீடு பெற்ற நோயாளிகளுக்கு பணமற்ற மருத்துவ வசதி 449 மருத்துவமனைகளில் ஏற்பாடு: மத்திய அரசு   Empty மருத்துவ காப்பீடு பெற்ற நோயாளிகளுக்கு பணமற்ற மருத்துவ வசதி 449 மருத்துவமனைகளில் ஏற்பாடு: மத்திய அரசு

Post  ishwarya Fri May 03, 2013 12:46 pm

மருத்துவக் காப்பீட்டுடன் வரும் நோயாளிகளிடம் தாறுமாறாக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளின் கொள்ளையத் தடுக்க, பணமற்ற மருத்துவ வசதிக்கு (Cashless Medical Facility) இந்தியாவின் நான்கு முதன்மை நகரங்களிலுள்ள 449 மருத்துவமனைகள் ஒப்புக்கொண்டுள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மருத்துவ காப்பீட்டுடன் சிகிச்சை பெறச் செல்லும் நோயாளிகளிடம் தனியார் மருத்துவமனைகள் ஒன்றுக்குப் பத்து மடங்கு மருத்துவ கட்டணங்கள் வசூலிப்பதாகவும், நோயாளிகள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள் என்றும் கூறி, அதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் பாஜக, திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தனர்.

இத்தீர்மானத்தின் மீது பேசிய பாஜக உறுப்பினர் எஸ் எஸ்.அலுவாலியா, மருத்துவமனைகளின் கருணைப் பிடியில் நோயாகிகளை அரசு விட்டுவிட்டது என்று குற்றம் சாற்றினார்.

பணத்தைப் பெறாமல் சிகிச்சையை அளிக்கும் வசதியை எல்லா மருத்துவமனைகளிலும் ஏற்படுத்த வேண்டும் என்று திமுக உறுப்பினர் டி.சிவா கூறினார்.

இதே கருத்தை உறுப்பினர்கள் சையது அஜிஸ் பாஷா, சுதர்சன நாச்சியப்பன், மொய்னுல் ஹாசன் ஆகியோரும் தெரிவித்தனர்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய நிதித்துறை துணை அமைச்சர் நமோ நாராயண் மீனா, மருத்துவ காப்பீட்டுடன் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் பணம் பெறாமல் சிகிச்சை அளிக்கும் வசதியைத் தர சென்னை, மும்பை, டெல்லி, கொல்கட்டா ஆகிய நான்கு நகரங்களில் இயங்கிவரும் 449 மருத்துவமனைகள் ஒப்புக்கொண்டுள்ளன என்று கூறினார்.

அதுமட்டுமின்றி, மருத்துவக் காப்பீடு இல்லாத நோயாளிகளுக்கு என்ன கட்டணம் வசூலிக்கப்படுகிறதோ அதையே காப்பீடு உள்ள நோயாளிகளுக்கும் வசூலிக்க அவைகள் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்தியாவின் 4 முதன்மை நகரங்களிலும் இயங்கும் மருத்துவமனைகள் காப்பீட்டுடன் வரும் நோயாளிகளிடம் வசூலிக்கும் அதீத கட்டணங்களினால் பொதுத் துறை காப்பீடு நிறுவனங்களான நியூ இந்தியா இன்சூரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ், நியூ இண்டியா அஸ்ஸூரன்ஸ், ஒரியண்டல் இன்சூரன்ஸ், யுனைடெட் இண்டியா இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு ஆண்டு ஒன்றிற்கு ரூ.2,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதே நிலை நீடித்தால் பொதுத் துறை காப்பீடு நிறுவனங்கள் நட்டத்தில் மூழ்கி மூடிவிட வேண்டிய நிலை ஏற்படும் என்று கூறிய அமைச்சர், மருத்துவக் காப்பீடு மூலம் பெறும் பீரியம் தொகையோடு ஒப்பிடுகையில் 140 விழுக்காடு செலவுகளுக்கு தர வேண்டிய நிலை உள்ளதாகத் தெரிவித்தார்.

மருத்துவக் காப்பீடு பெற்றுவரும் நோயாளிகளிடம் எந்த அளவிற்கு தனியார் மருத்துவமனைகள் கொள்ளை அடிக்கின்றன என்பதற்கு ஒரு உதாரணத்தையும் அமைச்சர் கூறினார். சிசேரியன் செய்து குழந்தை பிறப்பிற்கு அரசு மருத்துவமனைகளில் ரூ.15,000 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் இதற்கு ரூ.55,000 வசூலிக்கப்படுகிறது. அதே சிசேரியன் செய்ய மருத்துவ காப்பீடு பெற்ற ஒருவர் செல்லும் போது அவரிடம் ரூ.1,35,000 வசூலிக்கப்படுகிறது என்று கூறினார்.

மருத்துவமனைக்குச் செல்லும்போது பணம் கட்டாமல் மருத்துவம் பார்ப்பதற்கு மருத்துவக் காப்பீடு உறுதியளிப்பதில்லை என்று கூறிய அமைச்சர், பணம் வாங்காமல் சிகிச்சை அளிக்கும் வசதியை அளிக்குமாறு தனியார் மருத்துவமனைகளோடு பொதுத் துறை காப்பீடு நிறுவனங்கள் பேசியுள்ளன என்றும், அதன் அடிப்படையில் 449 மருத்துவமனைகள் அப்படிப்பட்ட சிகிச்சை தர ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

காப்பீட்டுடன் சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் இப்படி மோசடியாக பில் போட்டு கொள்ளையடிக்கும் மருத்துவமனைகளில் 50 விழுக்காடு சென்னை உள்ளிட்ட இந்தியா முதன்மை 4 நகரங்களிலேயே உள்ளன என்ற தகவலையும் அமைச்சர் வெளியிட்டார்.

மருத்துவக் காப்பீடு பெற்றவர்கள் தனியார் மருத்துவமனைகளிடம் சிக்கி திணறுவதை காப்பீடு நிறுவனங்கள் வேடிக்கை பார்க்கக் கூடாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் எச்சரித்தப் பிறகுதான் மத்திய அரசின் காப்பீடு நிறுவனங்கள் மருத்துவமனைகளுடன் பேசி பணமற்ற மருத்துவ வசதியை ஏற்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மண்எண்ணெய் ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்ததை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு
» அசினுக்கு ‘Z’ பிரிவு பாதுகாப்பு: ராஜபக்சே அரசு ஏற்பாடு!!
» விஸ்வரூபம் மீதான தடை சரியல்ல – மத்திய அரசு மறைமுக கருத்து
» புற்றுநோய் முன் கண்டறியும் சோதனை திட்டம்: மத்திய அரசு அறிவிப்பு
» செல்பேசி மின்காந்த ஒலிக்கதிர் வீச்சு அளவு அதிகரித்தால் அபராதம்: மத்திய அரசு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum