தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மறைந்த தொ.மு.சா. தலைவர் செ.குப்புசாமி உருவ படத்தை கருணாநிதி திறந்து வைத்தார்

Go down

மறைந்த தொ.மு.சா. தலைவர் செ.குப்புசாமி உருவ படத்தை கருணாநிதி திறந்து வைத்தார் Empty மறைந்த தொ.மு.சா. தலைவர் செ.குப்புசாமி உருவ படத்தை கருணாநிதி திறந்து வைத்தார்

Post  ishwarya Thu May 02, 2013 5:06 pm

தொ.மு.ச. பேரவை முன்னாள் தலைவர் செ.குப்புசாமி உருவபட திறப்பு சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. தி.மு.க. தலைவர் கருணாநிதி பங்கேற்று குப்புசாமி உருவப்படத்தை திறந்து வைத்து பேசியதாவது:-

ஏறத்தாழ 90 வயதை நெருங்கிக் கொண்டிருக்கின்ற நான் இந்தக்கால கட்டத்தில் எவ்வளவு நண்பர்களைப் பெற்றிருந்தேன், எவ்வளவு நண்பர்களை இழந்திருப்பேன் என்பதையெல்லாம் எண்ணிப் பார்த்தால், எனக்கு இருக்கிற ஒரேயொரு நம்பிக்கை, எத்தனை பேர் நம்மை விட்டுப் பிரிந்தாலும், எத்தனை பேர் நம்மை விட்டு மறைந்தாலும் அவர்கள் உருவாக்கி வைத்துவிட்டுப் போயிருக்கின்ற கழகம் என்ற இந்த உருவத்தை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்ற நம்பிக்கையைத்தான் ஏற்படுத்துகின்றது.

எந்தப் போராட்டம் திராவிட இயக்கம் தோன்றிய காலத்திலே நடைபெற்றாலும், அந்தப் போராட்டங்களில் எல்லாம் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த நாங்கள் சென்று பணியாற்றி, ஈடுபட்டு, வெற்றி தேடிக் கொடுத்திருக்கிறோம்.

அப்படி வெற்றி தேடிக்கொடுப்பதற்கு எங்களுக்கு உறுதுணையாக இருந்தவர்களில் முக்கியமானவர்தான் மறைந்த நம்முடைய குப்புசாமி என்று சொன்னால் அது மிகையாகாது. தொழிலாளர் பிரச்சினைக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் உள்ள தொடர்புகளை நான் மற்றவர்களுக்கு விளக்க இன்னும் சொல்லப்போனால் அன்றைய சட்டப் பேரவையில் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தால் அப்போது தாராளமாகப் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கும்.

அப்படி பேசுவதற்குக் கிடைக்கின்ற வாய்ப்புக்களில், தொழிலாளர்களைப் பற்றி ஏதாவது பேசவேண்டுமென்ற நிலை ஏற்பட்டால், நான் மறைந்த நம்முடைய அருமை நண்பர் குப்புசாமி அவர்களை அழைத்துத்தான் அவரிடம் புள்ளி விவரங்களைப் பெற்றுத்தான் நான் பேசியிருக்கிறேன்.

காரணம் அந்த அளவிற்கு தொழிலாளர்களைப் பற்றி ஆழ்ந்த அறிவும், ஆழ்ந்த சிந்தனையும், அனுபவமும் உள்ளவர் நம்முடைய குப்புசாமி. அவர் இன்றைக்கு நம்மிடம் விட்டுச் சென்றிருப்பது அவர் வளர்த்த அவர் வாடிநந்த தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவை மாத்திரமல்ல தொழிலாளர்களுடைய உணர்வையும் நம்மிடையே அவர் விட்டுச் சென்றிருக்கிறார்.

அவர் விட்டுச் சென்றிருக்கின்ற பணிகளை நாம் விடாமல் தொடர்ந்து நிறைவேற்றுவதுதான் நாம் அவருக்கு ஆற்றுகின்ற கடமை காட்டுகின்ற நன்றி என்பதை இன்றைக்கு தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையிலே இடம் பெற்றிருக்கின்ற நண்பர்கள் எல்லாம் உணர்ந்து, அதன்படி நடந்து கொள்ள வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

பட்டம் பதவிகள் இன்றைக்கு வரும், நாளைக்குப் போய் விடும், ஆனால் மனிதன் தான் நிரந்தரமாக நாம் உருவாக்கியிருக்கின்ற சுயமரியாதை, பகுத்தறிவு கொள்கைகள் எல்லாம் நிரந்தரமாக இருக்கக் கூடியவை. அந்தக் கொள்கைகளுக்கு மாசு வராமல் காப்பாற்ற உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். குப்புசாமியின் திருவுருவப் படத்திற்கு முன்னால் அமர்ந்திருக்கின்ற நீங்கள் இந்த உறுதியை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு கருணாநிதி பேசினார்.

நிகழ்ச்சியில் பேராசிரியர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரும் பேசினார்கள். முன்னாள் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், சற்குணபாண்டியன், ரகுமான்கான், தா.மோ.அன்பரசன், நடிகை குஷ்பு உள்பட பலர் பங்கேற்றனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கல்லடி புதிய பாலத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச திறந்து வைத்தார்.
» பதவிக்கு வந்த பின் முதல் சினிமா நிகழ்ச்சி: பிலிம்சேம்பர் கட்டிடத்தை திறந்து வைத்தார் ஜெயலலிதா!
» ஸ்டாலின் திமுக தலைவர் ஆவதையே விரும்புகிறேன்: கருணாநிதி
» பேரன் உதயநிதி நடித்த ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தை பார்த்த கருணாநிதி
» மறைந்த மோதிரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum