திருச்சி சிறையில் 'காந்திய சிந்தனை' புத்தகம் படிக்கும் டாக்டர் ராமதாஸ்
Page 1 of 1

மரக்காணம் கலவரத்தை கண்டித்து விழுப்புரத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்பட 531 பேர் கைது செய்யப்பட்டனர். முதுகுவலி காரணமாக டாக்டர் ராமதாஸ் மாஜிஸ்தி ரேட்டிடம் சிறப்பு அனுமதி பெற்று தனது சொந்த காரில் சிறைக்கு வந்தார். பகலில் கைது செய்யப்பட்ட ராமதாஸ் நேற்று காலை 4.30 மணியளவில்தான் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். இரவு முழுவதும் காரிலேயே பயணம் செய்ததால் மிகவும் களைப்புடன் காணப்பட்டார்.
அவருக்கு சர்க்கரை வியாதி இருப்பதால் மருத்துவ குழுவினர் அவரது உடல் நிலையை கண்காணித்து வருகிறார்கள். சர்க்கரை வியாதிக்காக டாக்டர்கள் “இன்சுலின்” ஊசி போட்டனர். வெளியில் இருந்து ராமதாசுக்கு உணவு வழங்க சிறை நிர்வாகம் அனுமதிக்கவில்லை. காலையில் 2 சப்பாத்தி குருமா வழங்கப்பட்டது. மதியம் சாம்பார் சாதமும், தயிர் சாதமும் வழங்கப்பட்டது. அவ்வப்போது அவர் வைத்திருந்த பிஸ்கட்டுகளை சாப்பிட்டார். தற்போது திருச்சியில் கோடை வெயில் 107 டிகி ரியை எட்டியுள்ளது. சிறையில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டதால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
அவ்வப்போது மின் சாரம் தடை படுவதால் மின்விசிறியும் பயன் படுத்த முடியாத நிலையும் இருந்து வருகிறது. இதனால் புழுக்கத்தில் அவதிப்படுகிறார். அவர் இதுவரை முதல் வகுப்பு வேண்டும் என்று கோரவில்லை. சிறையில் ராமதாஸ் காந்திய சிந்தனகைள் புத்தகத்தை படித்து பொழுது போக்குகிறார். திருச்சி சிறையில் ஏற்கனவே 1,700-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வழக்கமாக காவிரி குடிநீர் வழங்கப்படும். தற்போது கூடுதலாக பா.ம.க. வினர் அடைக்கப்பட்டு உள்ளதால் மாநகராட்சியில் இருந்து லாரிகளில் குடிநீர் கொண்டு வரப்பட்டு வசதி செய்யப்பட்டுள்ளது.
வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய 3 நாட்கள் மட்டும் சிறைக்குள் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். நேற்று (புதன்) மே தினம் விடுமுறை என்பதால் பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்பட வில்லை. நாளை அனுமதிக்கப்படுவார்கள் என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
டாக்டர் ராமதாசுடன் மாநில தலைவர் ஜி.கே.மணி, கணேஷ்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. தன்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. செந்தமிழ்செல்வன், அனந்தராமன் ஆகியோரும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் கணேஷ்குமார் எம்.எல்.ஏ.வாக இருப்பதால் அவருக்கு முதல் வகுப்பு வழங்கப்பட்டுள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» டாக்டர் ராமதாஸ் கைது: அறவழியில் பா.ம.க. போராட்டம் தொடரும்-அன்புமணி ராமதாஸ் அறிக்கை
» டாக்டர் ராமதாஸ் கைதை கண்டித்து அரசு பஸ் தீ வைத்து எரிப்பு: ஆயிரக்கணக்கானவர்கள் கைது
» டாக்டர் ராமதாஸ் கைது: 15 நாள் காவலில் வைக்க கோர்ட் உத்தரவு
» விழுப்புரத்தில் இன்று தடையை மீறி ஆர்ப்பாட்டம்: டாக்டர் ராமதாஸ் கைது
» மண் சரிந்து இறந்த 4 பெண்களின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நஷ்டஈடு: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum