உட்கட்சி தேர்தலில் தகராறு: குமரி மாவட்ட தி.மு.க. அலுவலகம் மீது கல்வீச்சு
Page 1 of 1

குமரி மாவட்டத்தில் உள்ள 9 ஒன்றியங்கள், 4 நகரங்களுக்கு நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதற்கு பார்வையாளர்களாகவும், தேர்தல் நடத்தும் ஆணையாளராகவும் கட்சி மேலிட நிர்வாகிகள் குமரி மாவட்டத்திற்கு வந்தனர்.
அவர்கள் முன்னிலையில் தி.மு.க.வினர் ஓட்டுப்போட்டு நிர்வாகிகளை தேர்ந்தெடுத்தனர். இதில், ராஜாக்கமங்கலம் ஒன்றியம், நாகர்கோவில் நகர பகுதி நிர்வாகிகள் தேர்வு செய்வதில் இரு தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இது பின்னர் கோஷ்டி மோதலாக மாறியது.
பிரச்சினை ஏற்பட்ட பகுதிகளில் நடக்கும் தேர்தலை தேர்தல் ஆணையாளர் உத்தரவுப்படி நிர்வாகிகள் நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் உள்ள கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நடத்தினர். அப்போது அங்கேயும் தொண்டர்கள் இடையே தகராறு மூண்டது. அவர்களை மூத்த நிர்வாகிகள் சமரசம் செய்தனர். இருந்தாலும் பிரச்சினை நீறுபூத்த நெருப்பாக புகைந்து கொண்டே இருந்தது.
நேற்று மாலை 4.30 மணிக்கு திடீரென சிலர் நாகர்கோவிலில் உள்ள தி.மு.க. மாவட்ட அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது அலுவலகத்தில் சில தொண்டர்களும் அலுவலக ஊழியர் முருகனும் இருந்தனர். அவர்களை அலுவலகத்திற்கு வந்தவர்கள் திடீரென தாக்கினர். மேலும் அலுவலக மேஜை. நாற்காலிகளை உடைத்ததோடு மின்விளக்குகளையும் சேதப்படுத்தினர். சிலர் அலுவலக கண்ணாடி களை கல்வீசி உடைத்தனர். இதனால் அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.
இந்த தாக்குதலில் அலுவலக ஊழியர் முருகன் படுகாயம் அடைந்தார். ரத்தக்காயங்களுடன் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் சேர்ந்து அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதற்குள் அலுவலகத்தை தாக்கிய நபர்கள் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகி விட்டனர்.
இந்த சம்பவம் பற்றி போலீசில் யாரும் புகார் செய்யவில்லை. இதுபற்றி தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சுரேஷ்ராஜனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-
தி.மு.க.வின் உட்கட்சி தேர்தல் குமரி மாவட்டத்தில் சுமூகமாக நடந்தது. அனைத்து ஒன்றியங்கள் மற்றும் நகர் பகுதிகளில் தேர்வுகள் முடிந்து விட்டன. இதில், தங்களுக்கு வெற்றி கிடைக்காதோ என்று கருதிய சிலர் இதுபோன்ற விரும்பத்தகாத செயலில் ஈடுபட்டதாக எனக்கு தெரிய வந்தது.
இப்பிரச்சினையை தேர்தலை நடத்த இங்கு வந்த ஆணையாளரும் அறிவார். அவர் இதுபற்றி கட்சி மேலிடத்துக்கு தகவல் கொடுப்பார். அலுவலகத்தை சேதப்படுத்தியவர்கள் மீது மேலிடம் நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» குமரி மாவட்ட மக்களை இழிவுப்படுத்தும் காட்சிகள்: கரண், அஞ்சலி படத்தை வெளியிடக்கூடாது – கலெக்டரிடம் மனு
» நடிகை குஷ்பு வீடு மீது கல்வீச்சு
» குஷ்பு மீது கல்வீச்சு: வீடும் தாக்கப்பட்டது
» உதயன் அலுவலகம் மீது அதிகாலையில் தாக்குதல்
» திருக்கழுக்குன்றம் அருகே கோஷ்டி மோதல்: போலீஸ் ஜீப் மீது கல்வீச்சு-50 பேர் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum