இளம் பெண் - வயதான ஆண் பொருந்தாத திருமணம்
Page 1 of 1

முதிய ஆணும்- இளம் பெண்ணும் சேர்ந்து `புதிய வாழ்க்கை' நடத்துவது இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதற்கு முதியோர் திருமணம் என்று பெயர் வைத்திருந்தாலும், பாதிக்கப்படுவது அந்த முதியோர்களுக்கு வாழ்க்கைப்படும் இளம் பெண்கள்தான். முதியோர் திருமணம் என்பது பெரும்பாலும் வறுமையின் மறுபக்கமாகவே இருக்கிறது.
அதனால் அது முரண்பாடாகவே கருதப்படுகிறது. இந்த திருமணங்கள் பெரும்பாலும் ஒரு மட்டரகமான வியாபாரமாகவே உள்ளது. முதியவருக்கு, இளம் பெண் ஒருத்தியை மணமுடித்து வைப்பதற்கு காலத்தின் கட்டாயமோ, குடும்பத்தின் சூழலோ காரணமாக இருக்கிறது. ஆனால் இது ஒரு கொலைக்கு சமம் என்று கூறப்படுகிறது.
அறியா பருவ சிறுமி ஒருத்தியை 60 வயது பணக்காரர் ஒருவர் மணந்து கொள்கிறார். அந்த முதியவர் கொடுக்கும் பணத்தால், அவளுடைய குடும்ப வறுமை தீருகிறது. ஆனால் அந்த பெண்ணின் எதிர்காலம் தீயிலிடப்படுகிறது. ஒரு பெண்ணை காப்பாற்ற வேண்டிய பெற்றோரே அவளை பலியிட முற்படுவது இப்போது இந்தியாவிலும் நடக்கும் கொடுமை.
இந்தியாவில் இன்னும் நீடிக்கும் ஏழ்மையை புரிந்துகொண்ட வெளிநாட்டுக்காரர்கள், முதியோர் திருமணத்தில் ஆசைகொண்டு இந்தியாவிற்கு படையெடுத்து வருகிறார்கள். அதற்கென்று இருக்கும் புரோக்கர்களை தேடிப் பிடித்து, ஏழைக் குடும்பங்களை குறிவைத்து காய் நகர்த்துகிறார்கள். அவர்களுக்கு பணத்தாசை காண்பித்து, அந்த குடும்பத்து இளம் பெண்களை திருமணம் செய்துகொள்கிறார்கள்.
சில மாதங்கள் இங்கே தங்கியிருந்து அவர்களோடு `வாழ்ந்து' விட்டு, பின்பு விட்டுச் சென்று விடுகிறார்கள். சிலர் அழைத்துச் சென்றுவிடுகிறார்கள். அதன் பிறகு அந்த பெண்ணின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடுகிறது. இந்தியாவில் உள்ள வசதிபடைத்த முதியவர்களும் இப்போது இளம் பெண்களை திருமணம் செய்துகொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். பல கிராமங்களில் இன்றும் பணம் படைத்தவர்கள் ஏழை பெண்களை விலைக்கு வாங்கி, `திருமணம்' செய்து கொள்கிறார்கள்.
அதற்கு அந்த பெண்ணின் பெற்றோரும் உடந்தையாக இருக்கிறார்கள். முதியவரை ஒரு பெண் திருமணம் செய்துகொண்டால், ஒருபோதும் அவள் வாழ்க்கை முழுமை பெறுவதில்லை. மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அவள் காயப்படுத்தப்படுகிறாள். இத்தகைய வாழ்க்கைக்கு உள்ளான பல பெண்கள் மனநோயாளிகளாகவும் மாறி இருக்கிறார்கள். திருமணம் என்பது பொருத்தமானதாக இருந்தால் அது புனிதமானதாக இருக்கும்.
பொருந்தாததாக இருந்தால் அது கொடூரமானதாகிவிடும். இருமனம் இணையும் திருமண வாழ்வில் தர்மமும், நியாயமும் இருக்கும். முதியோர் திருமணத்தில் வன்மமும், வக்கிரமும் தான் இருக்கும். ஒருவரின் ஏழ்மையை, இயலாமையை தனக்கு சாதகமாக கொண்டு ஒரு இளம்பெண்ணின் வாழ்வை அபகரிக்க நினைப்பது மிகப்பெரிய சமூக துரோகமாகும்.
பெண்கள் பலவிதங்களில் தடம்மாறி செல்லவும் இந்த திருமணம் வழிவகுக்கிறது. ஐந்தறிவு பிராணிகள் கூட தங்கள் மனம் போல வாழ்க்கையை அமைத்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறது. அந்த சுதந்திரம் கூட ஒரு பெண்ணிற்கு ஏழையாக பிறந்த காரணத்தால் மறுக்கப்படுகிறது. இப்படி கிடைக்கும் பணத்தில் ஏழ்மை தீரலாம். ஆனால் அதன் பிறகு வாழும் வாழ்க்கை, வாழ்க்கையாக இருக்குமா? பெற்ற மகளுக்கு இழைத்த கொடுமையை எண்ணி மீதமுள்ள நாட்களை மன உளைச்சலோடுதான் கழிப்பார்கள்.
திருமணம் எப்போது வியாபாரம் ஆக்கப்படுமோ, அப்போதே அது அதன் மகத்துவத்தை இழந்துவிடும். திருமணம், வியாபாரம் ஆகும்போது நஷ்டமும், மன உளைச்சலும் தான் மிஞ்சும். பணத்தால் எதையும் சாதித்து விடலாம் என்று நினைப்பவர்கள் மனிதாபிமானத்தை கொன்றுவிடுகிறார்கள். வெளிநாடுகளில் முதியோர் திருமணங்கள் சகஜமாகி விட்டன. ஆனால் அது பணத்தை மையமாக வைத்து நடைபெறுவதில்லை.
யாரும் யாரையும் அடிமைப்படுத்தும் நோக்கமும் அதில் இல்லை. இருவரும் விருப்பப்பட்டே அந்த திருமணத்தை செய்துகொள்கிறார்கள். அங்கேயும், அதிலும் குறை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் குறையை பெண் எப்போது உணருகிறாளோ அப்போதே அவளால் அதில் இருந்து விடுபட்டுவிட முடியும். அதனால் அங்குள்ள முதியோர் திருமணங்கள் சமூக அவலமாகவோ, வியாபாரமாகவோ மாறுவதில்லை.
இந்தியாவில் அப்படியல்ல. இங்கே திருமணம் என்பது ஒரு சமூக கட்டமைப்பு. அதிலிருந்து மீண்டு வருவது அத்தனை சுலபமல்ல. அதனால் முதியோர்களுக்கு வாழ்க்கைப் படும் பெண்கள் நரகத்தில் நாட்களை நகர்த்தும் நிலை ஏற்பட்டுவிடுகிறது. இதுபற்றி மன நல நிபுணர் தேவசங்கர் கூறுகிறார்..
"முதியோருக்கு வாழ்க்கைப்பட்டு திருமண வாழ்வில் தோல்வி அடைந்த பெண்கள் மனநல பாதிப்பிற்கு உள்ளாகுகிறார்கள். பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பல்வேறு இழப்புகளை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்கிறார்கள். ஆனால் முதியோரை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை இழப்பதை அவர்கள் மற்றவர்களிடம் கூறத்தயங்குகிறார்கள்.
அதனால் அவர்கள் மனஅழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். பெண்ணுக்கு மன அழுத்தம் ஏற்படும் அதே நேரத்தில் ஆணுக்கு குற்ற உணர்வு ஏற்படுகிறது. தன்னால் ஒரு பெண்ணின் வாழ்க்கை சீரழிந்துவிட்டதே என்று அவர்களும் மன அழுத்தத்திற்கு உள்ளாகுகிறார்கள். இதை எல்லாம் தவிர்க்க பொருந்தாத திருமணங்களை தவிர்க்க வேண்டும்.
வீட்டில் வளர்க்கும் நாய், பூனையிடம் கூட பிரியமாக இருக்கும் மனிதர்கள் ஒரு பெண்ணின் உணர்வுகளுக்கு மரியாதை கொடுக்க மறுக்கக்கூடாது. பெண் வாழ்க்கையை பணத்தால் விலைபேசுவது போக்கப்படவேண்டும்''

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இளவரசியாக நடிக்க பொருந்தாத ஹீரோயின்கள்? : பெண் இயக்குனர் பேட்டி.
» இளவரசியாக நடிக்க பொருந்தாத ஹீரோயின்கள்? : பெண் இயக்குனர் பேட்டி
» டெல்லியில் ஓடும் காரில் இளம் பெண் கற்பழிப்பு
» இளம் பெண் தொழிலாளி மீது பாலியல் வல்லுறவு!
» பாலியல் பலாத்காரத்துக்கு உடன்பட மறுத்த இளம் பெண் சுட்டுக் கொலை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum