தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இலங்கையில் மீண்டும் யுத்தம் ஏற்படலாம்! அமெரிக்கத்தூதரின் கருத்துக்கு பலத்த கண்டனங்கள்!

Go down

இலங்கையில் மீண்டும் யுத்தம் ஏற்படலாம்! அமெரிக்கத்தூதரின் கருத்துக்கு பலத்த கண்டனங்கள்! Empty இலங்கையில் மீண்டும் யுத்தம் ஏற்படலாம்! அமெரிக்கத்தூதரின் கருத்துக்கு பலத்த கண்டனங்கள்!

Post  ishwarya Tue Apr 30, 2013 2:39 pm

யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இலங்கை ராணுவம் மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்படும் யுத்த குற்றச்செயல்கள் தொடர்பாக உரிய விசாரணை நடாத்தி, சிறுபான்மை தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க, இலங்கை அரசாங்கம் தவறினால், மீணடும் யுத்தமொன்று ஏற்படலாமென, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிஷேல் ஜே. சிசன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தூதுவரின் மேற்படி கருத்துக்கு பலத்த கண்டனங்கள் எழுந்துள்ளது. நாட்டை மீண்டும் பயங்கரவாதத்திற்கு இட்டுச்செல்லும் சர்வதேச சூழ்ச்சி, தூதுவரின் கூற்றிலிருந்து தெளிவாகுவதாகவும் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

மனிதாபிமான நடவடிக்கையின் இறுதிக்கட்டத்தில், மிலேச்சத்தமான எல்ரிரிஈ பயங்கரவாதிகளே, குற்றச்செயல்களை புரிந்தார்கள் என்பது, முழு உலகிற்கு தெரிந்த விடயம். தமது தமிழ் மக்கள் சுதந்திரத்தை தேடிச்சென்றபோது, படுகொலை செய்யப்பட்டதை முழு உலகமும் அறிந்துள்ளது. எனினும் புலி ஆதரவாளர்களான புலம்பெயர் தமிழர்களும், இலங்கைக்கு எதிரான சில தீய சக்திகளும், இலங்கையை பிளவுபடுத்தி, இரண்டு ராச்சியங்களாக மாற்ற வேண்டுமென்ற நோக்கம், அவர்களிடம் காணப்படுகிறது. இதனை பிரபாகரன் 30 ஆண்டுகளாக நாட்டில் இரத்த ஆறு ஓடச்செய்து, மேற்கொண்ட பயங்கரவாத செயற்பாடுகளின் தேவையாகும். எவராலும் அழிக்க முடியாது என கூறப்பட்ட பயங்கரவாதத்தை, பூண்டோடு ஒழித்துக்கட்டி இலங்கை முழு உலகிற்கும் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியுமென்ற பாடத்தை கற்றுக்கொடுத்தது.

இதனை, அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகளுக்கும், சில ஐரோப்பிய நாடுகளுக்கும் ஜீரணிக்க முடியாமல் போயுள்ளது. இலங்கையில் தோல்விகரமான அரசியல் வாதிகளின் உள்ளங்களையும் இது வெகுவாக தொட்டுள்ளது. ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில், இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரேரணை குறித்து, ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் கேள்வி எழுப்பி வருகிறது. ஜெனீவா பிரேரணை தொடர்பாக எந்த நாட்டில் பேச்சுவார்த்தை நடாத்தப்படுமென, ரணில் விக்ரமசிங்க வினவுகின்றார்? எந்த சந்தர்ப்பத்தில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தலையைமிலான நாடுகள் தடை விதிக்குமென, சஜித் பிரேமதாச தருணம் பார்த்துக்கொண்டிருக்கின்றார். ஜே.வி.பி. யின் தேவையேனும், மேற்கு நாட்டின் தலையீட்டிலேனும், அரசாங்கத்தை கவிழ்ப்பதாகும். எனினும் அரசாங்கம் மிக தெளிவான நிலைப்பாட்டில் இருந்து, தமது கொள்கையை உலகிற்கு பறைசாற்றியுள்ளது.

ஜனாதிபதியினதும், அரசாங்கத்தினதும் பொறுப்பு, மேற்கு நாடுகளுக்கும் பதிலளிப்பதன்றி, மக்களுக்கான பொறுப்புகளையும், கடமைகளையும் நிறைவேற்றுவதாகும். ஐக்கிய தேசியக் கட்சியும், ஜே.வி.பி. யும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒரே நிலைப்பாட்டிலிருந்து செயற்படுவதை, அவர்களின் கூற்றுக்களிலிருந்து தெளிவாக உணர்ந்துகொள்ள முடியும். மக்கள் ஆணையினால் கவிழ்க்க முடியாத அரசாங்கத்தை, வெளிநாட்டு சக்திகளை கொண்டேனும் கவிழ்ப்பது, இந்த தோல்விகரமான அரசியல் வாதிகளின் ஒரே நோக்கமாக உள்ளது.

இந்த நோக்கத்;திற்கு துணை போகும் வகையில் அமெரிக்க தூதுவரின் கூற்றும் அமைந்துள்ளது. அமெரிக்கா தலையிட்ட சகல நாடுகளிலும் இறுதிக்கட்டம் பேரழிவாகவே அமைந்திருந்தது. ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா என அந்த நாடுகளை பட்டியலிட்டுக்கொண்டு செல்லலாம். இந்நாடுகளின் நிலைமைகள், இதற்கு சிறந்த உதாரணங்களாகும். தாயகத்திற்கு எதிரான தேசத்துரோகிகளின் நோக்கமும், இலங்கையை அதுபோன்ற நிலைக்கு தள்ளுவதாகும். எனினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நேரடி அரசியல் கொள்கைகள் காரணமாக, நாட்டுக்கு எதிரான சக்திகளின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு, ஒருபோதும் சந்தர்ப்பம் கிடைக்காது என்பது, உறுதியாகும்.

நாட்டுக்கு எதிராக செயற்படும் சர்வதேச சகதிகள் உட்பட தான் பிறந்த நாட்டிலிருந்துகொண்டு தாயகத்திற்கு எதிரான அரசியல் சக்திகள் தொடர்பாகவும், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய தருணம் வந்துள்ளதாக, அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum