தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கமல் உருவப் பொம்மைகளை கொளுத்துவோம் - புதிய பூச்சாண்டி

Go down

கமல் உருவப் பொம்மைகளை கொளுத்துவோம் - புதிய பூச்சாண்டி Empty கமல் உருவப் பொம்மைகளை கொளுத்துவோம் - புதிய பூச்சாண்டி

Post  ishwarya Mon Apr 29, 2013 11:57 am


என்டர்டெயின்மெண்ட் கட்சியான இந்து மக்கள் கட்சி தனது பருப்பு வேகாத

விஜய் தொலைக்காட்சியில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல்ஹாசன், சில ரசிகைகளை அவர்களின் விருப்பத்தின் பே‌ரில் கட்டிப் பிடித்து முத்தம் தந்தார். அனேகமாக எல்லோரும் மறந்துவிட்ட இந்த நிகழ்ச்சியை தோண்டி துருவிய என்டர்டெ‌யின்மெண்ட் கட்சியினர் வழக்கம் போல தங்களின் கீறல் விழுந்த 'கலாச்சாரம் கெட்டுப்போச்சி' ‌ரிக்கார்டுடன் கமிஷனர் அலுவலகத்தில் கமல்ஹாசன் மீது புகார் தந்தனர். அந்தப் புகா‌ரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படப் போவதில்லை என்பது கமிஷனரைவிட புகார் தந்தவர்களுக்கு நன்றாக தெ‌ரியும் (அப்புறம் ஏன் புகார் தந்தார்கள் என்கிறீர்களா? எல்லாம் ஒரு என்டர்டெயின்மெண்ட்தான்).

இந்த முத்த விவகாரத்தில் தமிழக மக்கள் சொல்லிக் கொள்கிற அளவு என்டர்டெயின்மெண்ட் ஆகாததாலும், அடுத்த கலாச்சார அழிப்பு கிடைக்காததாலும், திண்டுக்கல்லில் இன்று இதே விஷயத்தை இந்து மக்கள் கட்சியின் தலைவர் மீண்டும் பேச வேண்டியதாயிற்று. கமல் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனில் ஊர் ஊராக கமலின் உருவப்பொம்மைகளை எ‌ரித்து அடுத்தடுத்த போராட்டத்தை நடத்துவோம் என்று எச்ச‌ரித்திருக்கிறார்.

ம்ஹும்... இந்தமுறையும் தமிழக ஜனங்கள் இவர்களின் கிச்சு கிச்சுக்கு சி‌ரிப்பதாக இல்லை. காமெடியை மாத்துங்க பாஸ்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum