சொல்ல சொல்ல இனிக்கும்
Page 1 of 1
சொல்ல சொல்ல இனிக்கும்
காதல் போயினும் இன்னொரு காதல்தான்… இந்த கருத்தை அழுத்தமாக சொல்லும் நவ்தீப்பின் காதல் கிராஃப்தான் இந்த சொல்ல சொல்ல இனிக்கும். தனது வாழ்வில் கிராஸ் ஆன காதல்கள் எல்லாமே தோல்வியில் முடிய, கொஞ்சமும் பதறாமல் அடுத்த காதலை தேடிப் போகிற இளைஞர்தான் நவ்தீப். தன்னை காதலிக்கும் ஒருத்தியை இவர் ஏற்றுக் கொண்டாரா என்பது ஒரு பக்கம். தனது முன்னாள் காதலியை தனது நண்பனே காதலித்து ஏமாற்றுகிற போது பொறுக்கமாட்டாமல் இருவரையும் சேர்த்து வைக்கிறார். இது இன்னொரு பக்கம். நடுவில் அட்டகாசமான ஸ்டைலில் பிரகாஷ்ராஜ் எபிசோட் ஒன்று. போதாதா? வெந்தும் வேகாமல் இருந்தாலும் சுவையான மீல்ஸ் ரெடி.
நண்பர்கள் அபிநய், சத்யனுடன் வெட்டி அரட்டை அடிக்கும் நவ்தீப், பார்க்கிற பெண்களை எல்லாம் கனவில் பிக்கப் பண்ணுவதும் தனது லட்சியமே ஒரு காதலிதான் என்று திரிவதும் இளமை திருவிழா. ஆனால் சொல்லி வைத்த மாதிரி அத்தனை பேரும் கடுக்காய் கொடுக்கிறார்கள். பெண்கள் விஷயத்தில் எல்லா கணக்கும் தப்பு என்பதை ஒடுகிற ஓட்டத்தில் சொல்லிவிடுகிறார் டைரக்டர். அதுவும் மதுமிதா மேட்டர் நமக்கே ஷாக். முதலில் தன்னை விரட்டி விரட்டி காதலிக்கும் அபிநய் மீது கடும் கோபம் கொள்ளும் இவர், நவ்தீப்பை வரச்சொல்லி கண்டிக்க சொல்வார் என்று பார்த்தால், அபிநயை காதலிக்கிறேன் என்கிறாரே, ஷாக் அடிக்கிறது நமக்கு(ம்)
சுஜாவெல்லாம் ஒரு கதாநாயகி? பாவம் பட்ஜெட் உதைத்திருக்கும் போல… எப்படியோ மல்லிகா கபூரிடம் ஐ லவ் யூ சொல்ல வைத்த சந்தோஷத்தில் இருக்கும் போது அதையும் கெடுக்கிறார் மதுமிதா. அங்கேதான் கொஞ்சம் நிமிர வைக்கிறார் டைரக்டர்.
நவ்தீப்புக்கு நடிப்பும், டான்சும் அமர்க்களமாக வருகிறது. திடீர் வில்லனாகிவிடும் அபிநய், திருந்துகிற வரைக்கும் செய்யும் வில்லத்தனங்களால் பிரகாஷ்ராஜ் என்ட்ரி. “அவன் மொதல்ல மாலையை போட்டுட்டானேடா…” உதவி செய்ய இந்த ஒரு காரணத்தை பிடித்துக் கொள்கிற அவரது ஸ்டைல் அமர்க்களம். யார் வந்து மாலை போட்டாலும் இவர் நீதி நேர்மை பார்க்காமல் சப்போர்ட் பண்ணுவார் என்பது சுவாரஸ்யமான கற்பனை.
சத்யனின் நகைச்சுவையில் கடி ஓவர். ஒரு ஃப்ரண்ட்லியான அப்பா எப்படியிருப்பார்? லிவிங்ஸ்டனின் கேரக்டர் முழுமை.
ஆர்தர் வில்சனின் ஒளிப்பதிவு பளிச். பரத்வாஜ் இசையில் காதல் ஒரு பள்ளிக்கூடம், முள்ளே முள்ளே திரும்ப திரும்ப முணுமுணுக்கலாம்.
திரைக்கதையில் கொஞ்சம் ஸ்பீடா மீட்டரை கட்டியிருந்தால், சொல்ல சொல்ல இனித்திருக்கும்!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மீண்டும் “நினைத்தாலே இனிக்கும்”!?
» படிப்பும் இனிக்கும்
» இனிக்கும் இலக்கியம்
» இனிக்கும் புதிர்க் கணக்குகள்
» புத்தம் புதுப் பொலிவுடன் மீண்டும் ‘நினைத்தாலே இனிக்கும்’…!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum