சனிப்பெயர்ச்சி வாஸ்து பலன்கள்
Page 1 of 1
சனிப்பெயர்ச்சி வாஸ்து பலன்கள்
`சனி' என்றாலே அனைவருக்கும் பயம் ஏற்படுகின்றது. நளமகாராஜனும் சனியும் என்று படித்த நாம் விநாயகரும் சனியும் என்பதையும் படித்தோம். ஆனால் விநாயகர் யார் என்பதையும் உணர்ந்தால் சனியின் துன்பம் நம்மை ஒன்றும் செய்து விடாது. மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்து கணங்களுக்கு அதிபதியான பஞ்சபூத நாயகனான விநாயகர், வீட்டில் வாஸ்து சாஸ்திரம் என்று சொல்லக்கூடிய ஐம்பூத கட்டுப்பாட்டுக்குள் சிறப்பாக சிரித்தால் சனியின் தொல்லை நம்மை அண்டாது.
நாளை 21-ந் தேதி மார்கழி மாதம் 5-ந் தேதி புதன் கிழமை காலை மணி 7.24 க்கு புதனுடைய வீட்டில் இருந்து, குரு வின் தேதியில், குருவின் மாதத்தில், அசுர குருவான சுக்கிராச்சாரி வீட்டிற்கு தேவகுருவின் பார்வையில் குருவின் லக்கினமான தனுசு லக்கின வேளையில் சந்திர ஓரையில் சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதத்தில் தனது உச்ச வீட்டிற்கு வருகின்றார் சனிபகவான்.
இதுவரை கன்னி வீட்டில் இருந்து மிதுன ராசிக்கு அஷ்டாஷ்டக சனியாக இருந்து வந்த சனி, கடக ராசிக்கு அஷ்டாஷ்ட சனியாக மாறுகின்றார். இதே போல் கும்பராசிக்கு அஷ்டத்து சனியாக இருந்தவர் மீனராசிக்கு அஷ்டமத்து சனியாக மாறுகின்றார். மீன ராசிக்கு கண்டகச் சனியாக இருந்தவர் மேஷராசிக்கு கண்டகச் சனியாக வருகிறார்.
இதே போல் சிம்ம ராசிக்கு மாதச்சனியாக இருந்து 7 சனியின் தாக்கம் தந்தவர் தற்போது சிம்மராசிக்காரர்களை 7 யில் இருந்து விடுவிக்கின்றார். அதே சமயம் கன்னிராசிக்கு 7 சனியின் பாதச் சனியாகவும், துலா ராசிக்கு ஜென்மச் சனியாகவும், விருச்சிக ராசிக்கு தலைச்சனியாகவும் வருவது பலரது வாழ்க்கையில் புதிய ஞானத்தையும் சிலரது வாழ்க்கையில் சிக்கலையும் ஒரு சிலருக்கு கடன், வம்பு வழக்குகள் பொருளாதார விரையம் என்று சொல்லும் அளவுக்கு தரவுள்ளார்.
இருப்பினும், பலரது கனவு இல்லத்தை சிறப்பாக்கி தரப்போவதும் இவரே என்றால் ஆச்சரியம் வரத்தானே செய்யும். ஆம் உங்களது ஆடம்பரமான வீட்டிற்கு அச்சாரம் தரவும் வருகின்றார் சனிபகவான் என்கிறார் வாஸ்து பேராசிரியர் யோகஸ்ரீ மணிபாரதி.
ராசிப்படி வீட்டு யோகம்.....
செவ்வாயின் நட்சத்திரக் காலில் பெயர்ச்சியடையும் சனிபகவான் தனது ஆருயிர் நண்பனான சுக்கிரனின் ஆட்சி வீடான துலா வீட்டில் தனக்கு தரப்பட்டுள்ள உச்சபலன்களை வாரி வழங்க வருகின்றார். இதில் மற்றுமோர் சிறப்பு என்னவென்றால் தனது வீட்டை சனிக்கு உச்ச வீடாக தரும் சுக்கிரன் தன் நண்பரின் வீடான மகரத்தில் நட்புடன் அமர்ந்து பரிவர்த்தனை யோகத்தை பெறுகின்றார். இந்த யோகம் பலரை ஆடம்பர பங்களாக்களை அமைக்கச் செய்யப் போகின்றது.
மேஷம்: சனிபகவான் இது வரை ஆறாம் இடத்தில் இருந்த நிலைநீங்கி ஏழாம் வீட்டிற்கு வருவது மேஷ ராசிக்காரர்களுக்கு தனது பார்வையான 3,7,10ன்படி தனுசு, மேஷ, கடகவீட்டை பார்ப்பதின் மூலம் ஆடம் பரமாக வீட்டினை திருத்தும் யோகத்தை தருகின்றார். வீட்டினை வாஸ்துப்படி இக்கால கட்டத்தில் திருத்துவதன் மூலம் சகோதர உதவிகள் சமுதாய அந்தஸ்து வார்த்தைக்கு அங்கீகாரம் என அனைத்தும் கிடைக்கும்.
ரிஷபம்: ரிஷப ராசிக் காரர்கள் அதிர்ஷ்ட்டக்காரர்கள் சனியின் பார்வையால் ரிசபத்துக்கு 8,12,3 ஆகிய இடத்தை பார்ப்பதன் மூலம் ஏற்கனவே ஐந்தாம் வீட்டில் இருந்தவர் ஆறாவது வீடாக அதுவும் சுக்கிரனின் வீட்டிலேயே இருப்பதால் புதிய வீடு வாங்க, இடம் வாங்க, வீடு கட்ட மிகவும் சிறந்த காலகட்டம். தாய் வழி உதவி கிட்டும், உடல் நலம் மற்றும் பொருளாதார மேன்மை உண்டாகும், கடன் நீங்கும்.
மிதுனம்: மிதுனராசி நேயர்களுக்கு 4-ல் இருந்த சனி ஐந்தாம் வீட்டுக்கு மாறியுள்ளது ஆறுதலான செய்தி. அதிலும் 7,11,2-ம் இடங்களை பார்ப்பதால் வீட்டில் உள்ள சனியின் நான்கு திசை பாகங்களையும் கட்டுப்பாட்டில் இருக்கும்படி செய்வதன் மூலம் ஆதாயம், குடும்ப வாழ்வில் குதூகலம், நிதானமான அணுகுமுறை, பொருளாதார தடைகள் அகலும்.
கடகம்: கடக ராசி நேயர்களுக்கு நான்காவது வீட்டில் அமர்ந்த சனியால் வீட்டு மராமத்து வேலைகள் மூலம் பொருளாதார செலவு உண்டாகும். மேலும் புதிய வாகனயோகத்தை தரும் சனியால் பழைய வாகனங்களை வாங்குவதில் எச்சரிக்கை தேவை. வீட்டின் சனி பகுதி தெருத்தாக்கம் இருந்தால் கண்டுபிடித்து நிவர்த்தி செய்வதன் மூலம் விபத்தினை தவிர்க்கலாம். தாராளமான பணவசதி இருக்கும்.
சிம்மம்: அப்பாடா ஏழரைச் சனியின் பிடியில் இருந்து விடுதலை என சிம்மராசிக்காரர்கள் பெருமூச்சு விடலாம். இரண்டாம் வீட்டில் இருந்து பாதச்சனியின் பாய்ச்சலில் நளனின் கனுக்காலில் புகுந்து அவர் குடும்பத்தில் பிரிவை ஏற்படுத்தி மகிழ்ந்த சனி இதே செயலை சிம்மராசிக்காரர்களுக்கு தந்து வந்த நிலை நீங்கி தாராளமான பொருளாதாரம், பிள்ளைகள் உயர்வு சமுதாய அந்தஸ்தை தருவதுடன் புதிய சொத்து வாங்க வாய்ப்பு தருகின்றார்.
கன்னி: கன்னி ராசி அன்பர்களுக்கு 7ச் சனியின் ஜென்மச்சனியாக இருந்து வந்தவர் பாதச் சனியாக மாறுவது நட்பு வீட்டிற்கு வளுச் சேர்ப்பதாக அமைகிறது. தனது பார்வையால் 4,8,11 இடங்களை பார்ப்பது வீட்டை திருத்தும் எண்ணங்களை தருவார். பெரு முயற்சியுடன் வைராக்கியமாக வீட்டை கட்டிட வேண்டிய காலம் எனவே ஒப்பந்ததாரர்களை கவனமுடன் அமைக்கவும்.
துலாம்: துலாராசி அன்பர்கள் காட்டில் மழை தான் 7சனியின் உச்சத்தன்மையுடன் ஜென்மச் சனியாக வரும் சனி சுக்கிரனின் கருணை வீடான இவ்வீட்டில் அமர்ந்து புகழ், சாஸ்திரம், தொழில் ஸ்தானங்களைப் பார்ப்பது, புகழ், பெருமை, அந்தஸ்து தருவதுடன் புதிய வீடு வாங்க, கட்ட பலருக்கு அனுமதி தருகின்றார். துணிந்து வீடு கட்டலாம் செய்யும் செலவை கட்டிடம், இடம் முதலிய வற்றில் முதலீடு செய்வதன் மூலம் லாபமும் நிம்மதியும் பெறலாம்.
விருச்சிகம்: விருச்சிக ராசி அன்பர்கள் பழைய வீட்டை திருத்துவதன் மூலம் சுக்கிரனின் ஆடம்பரத்தன்மையை அடைவீர்கள். வீட்டின் தெற்கு மற்றும் கிழக்கு பாக தவறுகளைகளை நீக்கினால் பிள்ளைகள் வகையிலும், உடல் ஆரோக்கிய வகையிலும் முன்னேற்றம் ஏற்படும். கண் சம்பந்தமான பிரச்சினைகள் வராது காக்கும்.
தனுசு: தனுசு ராசி நேயர்களுக்கு ராசியையும், 5,8ம் இடங்களையும் சனி பார்ப்பது வீடு வாகன வகை செலவுகள் அதிகரித்தாலும் திட்டமிட்டபடி கட்டிட வேலைகள் பூர்த்தியாகும். பூர்வீக சொத்தினால் ஆதாயம் அதிகரிக்கும். புதிய வீடு கட்டி முடிப்பதன் மூலம் எதிரிகளும் வியப்படைவர். எதிரிகள் இல்லாமல் போவார். நண்பர்களின் உதவி உங்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும்.
மகரம்: மகரராசி நேயர்களுக்கு ஒன்பதாம் இடத்தில் இருந்து பத்தாமிடம் வந்த சனி யால் 12,4,7-ம் இடங்களை பார்ப்பதன் மூலம் வசதி குறைந்த வீட்டினை திருத்தும் முயற்சி ஏற்படும். கடன் பெற்று அல்லது இருப்பில் இருந்து வீட்டை திருத்துவதன் மூலம் தாய்வழியில் இருந்து வந்த பிணக் குகள் அகலும், தாய் மாமன் வகையில் முன் னேற்றம் ஏற்படும், எதிரிகள் ஓடி ஒளிவர்.
கும்பம்: ம்ப ராசி நேயர்களுக்கு இதுவரை அஸ்டமச் சனியாக இருந்தவர் ஒன்பதாம் இடத்துக்கு வருவதும் 11,3,6ம் இடங்களை பார்ப்பதும் வீட்டு வகை பராமரிப்பு, திருத்துவது, உயர்த்துவது முதலானவற்றால் செலவு அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு ஆதாயம் அதிகரிக்கும்.
மீனம்: மீன ராசி நேயர்களுக்கு 7-ம் இடத்தில் இருந்து 8-ம் இடத்திற்கு சென்றுள்ள சனியால் 10,2,5 ம் இடங்களான வேலை, செல்வ வரவு, பூர்வ புண்ணிய ஸ்தானங்களை பெற முடியும். ஏனென்றால் தென் மேற்கு தவறு சிலரால் ஏமாற்றம் தரும் அமைப்பை ஏற்படுத்தக் கூடியது.
வீட்டில் உறுதியானவர் ஒருவரது ஜாதகத்தில் சனியின் பலனை சனியுடன் சேர்ந்த கிரகம், பார்த்த கிரகம், சனி நின்ற வீடு, அவ்வீட்டின் அதிபதி, திசை, திசையில் சனியின் புத்தி தனியாக சனி நிற்பதால் உண்டாகும் பலன். குரு பார்ப்பதால் ஏற்படும் சிறப்பு என ஜோதிடம் பலவாறாக சேர்த்தும் தனித்தும் பலனை ஒப்பிடும். ஆனால் வீட்டில் அமர்ந்த சனியால் உறுதியான ஒரே செயல் மட்டும் தான் செய்யப்படும்.
நன்றாக இருந்தால் ஒற்றுமை, உயர்வு, சனி பாகம் பாதிக்கப்பட்டிருந்தால் விபத்து, கடன், உடல் ஊனம், மனம் ஊனம் என தந்து விடுகின்றார். எனவே நாமும் உறுதியுடன் சனிபாக குறை ஏற்படாமல் கவனித்து சனியின் ஆசியையும் கருணையையும் பெற்று வாழ்வாங்குவாழ்வோம்.
4-ம் வீட்டு சனி....
ஒவ்வொரு ஜாதகத்தில் நான்காம் வீடு என்பது கட்டிடத்தையும், இடத்தையும், தாய் மற்றும் வாகனத்தை குறிக்கும் ஆனால் வாஸ்துவை பொருத்த மட்டில் சனி பகவான் 4-ம் வீட்டை பார்த்தாலோ அல்லது அவ்வீட்டில் தனித்து நின்றாலோ வீட்டை இடித்து திருத்தும் பணியை செய்ய ஆரம்பிப்பார்.
அவ்வாறு செய்யும் போது, ராகு, கேது, சனிபாகம் மற்றும் தென்மேற்கு, வடமேற்கின் வடக்கு, தென்கிழக்கின் கிழக்கு பாகத்தை நன்னு ஆராய்ந்து அமைத்தால் துன்பங்கள் துவண்டு ஓடிவிடும். வீடு கட்ட வேண்டுமா? சனியின் பிடியில் இருந்து தப்பிக்க நாம் வீட்டில் உள்ள சனியுடன் சரணாகதி அடைவதுடன் சனியின் குவியம் பெற்ற திருநள்ளார் சென்று வந்தால் அங்குள்ள காந்த அணுக்கள் நமக்கு வீட்டினை திருத்தவும், ஆடம்பர வாழ்க்கை தரவும் உதவும்.
வீட்டை திருத்த நினைப்பவர்களும், வீட்டை கட்ட நினைப்பவர்களும் வெள்ளிக்கிழமை நாளில் சனீஸ்வரரை வணங்கி வெள்ளிக்கிழமை காலை மணி 6.15ல் இருந்து 6.55 மணிக்குள் காகத்திற்கு சாதம் வைத்து வழிபடுங்கள் என்கிறார் வாஸ்து பேராசிரியர் யோக ஸ்ரீமணிபாரதி.

gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி பலன்கள்
» சனிப்பெயர்ச்சி விவரம்
» வாஸ்து வாஸ்து
» வாஸ்து வாஸ்து வாஸ்து
» வாஸ்து- வாஸ்து- வாஸ்து-
» சனிப்பெயர்ச்சி விவரம்
» வாஸ்து வாஸ்து
» வாஸ்து வாஸ்து வாஸ்து
» வாஸ்து- வாஸ்து- வாஸ்து-
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum