தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திரைப்பட விழா: குஷ்பு குளறுபடி

Go down

திரைப்பட விழா: குஷ்பு குளறுபடி Empty திரைப்பட விழா: குஷ்பு குளறுபடி

Post  ishwarya Sat Apr 27, 2013 2:39 pm

தமிழக அரசின் திரைப்பட விருது வழங்கும் விழாவில் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கிய குஷ்புவால் குளறுபடி ஏற்பட்டது.தமிழக அரசின் 2007 மற்றும் 2008ம் ஆண்டுக்கான திரைப்பட கலைஞர்களுக்கான விருது வழங்கும் விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.
.
இதில் சிறந்த நடிகர்களாக தேர்வு செய்யப்பட்ட நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் உள்ளிட்ட சினிமா கலைஞர்களுக்கு முதல்வர் கருணாநிதி விருதுகளை வழங்கினார்.முன்னதாக, சினிமா பின்னணி பாடகர்கள் சீனிவாசன், கார்த்திக், பெல்லிராஜ், சின்மயி, மகதி ஆகியோரின் திரைஇசை பாடல்களுடன் நிகழ்ச்சி தொடங்கியது.

நடிகைகள் மும்தாஜ், நமீதா, மீனாட்சி ஆகியோரின் குத்தாட்டம் நடனமும், சிரிப்பு நடிகர் வடிவேலு முதல்வரை பாராட்டி பாடிய துதி பாடலும், எம்.எஸ்.பாஸ்கரின் பழைய பாடல் நிகழ்ச்சியும் பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.நடிகை குஷ்பு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். அவர் தமிழில் பேசிய விதம் பார்வையாளர்களை முகம் சுழிக்க வைத்தது.

ஒரு கட்டத்தில், முதல்வருக்கு சிறந்த உரையாடல் ஆசிரியருக்கான விருதை அறிவிக்கும் சமயத்தில் செய்தி துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, குஷ்புவுக்கு பதிலாக நிகழ்ச்சி தொகுப்பாளராக மாறினார். அந்த அளவிற்கு நடிகை குஷ்பு தமிழில் புகுந்து விளையாடினார்.

2007ம் ஆண்டிற்கான சிறந்த நடிகர் விருதினை ரஜினிக்கு வழங்குவது குறித்து நடிகை குஷ்பு அறிவித்தார். ஆனால் அந்த சமயத்தில் சிறந்த நடிகைக்கான விருதினை நடிகை ஜோதிகா பெற்றுக் கொண்டிருந்தார்.இதனை நேரில் பார்த்தவர்களுக்கும், வெளியே அகண்ட திரையில் பார்த்த ரசிகர்கள் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னர் ரஜினிக்கு விருது வழங்கப்பட்டது. கடைசி வரை, நடிகை ஜோதிகாவின் பெயர் அறிவிக்கப்படவில்லை.

விழாவில் நடிகர் ரஜினி, கமல் ஏற்புரை வழங்கினர். எந்திரன் படத்தை விரைவில் முடித்து வெளியிட வேண்டும் என்று நடிகர் ரஜினிக்கு விழாவில் பேசிய கமல் வேண்டுகோள் விடுத்தார்.முதல்வருக்கு விருது கொடுத்ததை மிகப்பெரும் பாக்கியமாக தான் கருதுவதாக நடிகர் ரஜினி கூறினார். அவர் பேசும் போது, முதல்வரால் அரவணைக்கப்படுபவர்களும், தள்ளி வைக்கப்படுபவர்களும் பெரியவர் களாகி விடுகின்றனர் என்று குறிப்பிட்டார்.

இவ்விழாவில் வாழ்த்துரை வழங்கிய முதல்வர், தனக்கு உடல்நலம் குன்றினாலும், அதற்கு டாக்டர்கள் என்ன மருந்து கொடுத்தாலும் அதைவிட சிறந்த மருந்தாக இந்த விழாவும், கலைஞர்களின் நிகழ்ச்சியும், அருமருந்தாக அமைந்தது என்று குறிப்பிட்டார்.குஷ்பு பேசிய பிறகும் தமிழ் அழியவில்லை என்றால், தமிழின் வல்லமையை நாம் உணர முடியும், அத்தகைய சக்தி தமிழுக்கு உள்ளது என்று முதல்வர் இடித்துரைத்து பேசினார்.

மொழி உறவுகளை வளர்க்கும் கருவியாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, விரோதம், பகை உணர்ச்சிகளை ஏற்படுத்துவதாக இருக்க கூடாது என்று குறிப்பிட்ட முதல்வர், கலையுலகினர் தனக்கு வழங்கிய விருதினை யாருக்கும் கொடுக்கப் போவதில்லை என்று கூறினார்.

இவ்விழாவில், செய்தி விளம்பரத் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி வரவேற்புரை நிகழ்த்தினார். துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, நெப்போலியன், சபாநாயகர் ஆவுடையப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் செய்தித்துறை செயலர் டி.முத்துசாமி நன்றி கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னையில் ஐரோப்பிய திரைப்பட விழா 10 நாட்கள் நடக்கிறது ஐரோப்பிய திரைப்பட விழா, சென்னையில் 10 நாட்கள் நடக்கிறது. சென்னையில் உள்ள பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் தூதரகங்களும், இந்திய திரைப்பட திறனாய்வு கழகமும் இணைந்து சென்னையில் 18–வது ஐரோப்பிய திரைப்பட விழாவை ந
» சென்னையில் உலக திரைப்பட விழா !
» சென்னையில் உலக திரைப்பட விழா !
» சுவிட்சர்லாந்தில் தென்னிந்திய திரைப்பட விழா
» குழந்தைகள் உலக திரைப்பட விழா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum