தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

செல்வம் தரும் சிவராத்திரி

Go down

செல்வம் தரும் சிவராத்திரி Empty செல்வம் தரும் சிவராத்திரி

Post  gandhimathi Mon Jan 21, 2013 5:28 pm

சிவராத்திரி என்ற விரதத்தை நம்மை கடைபிடிக்க வைத்து நம்மைப் புனிதப் படுத்துபவர் `சிவன்'. பிரம்மாவும் விஷ்ணுவும் சிவனது அடிமுடி காணத் தேடிச் சென்ற போது ஜோதியான் நின்ற சிவபெருமானை தேவர்கள் பூஜித்த காலம் சிவராத்திரி காலம் ஆகும். ஆல கால விஷத்தை உண்ட சிவன் மயக்கம் தெளிந்து எழுந்த நேரமும், சிவராத்திரி நேரம் ஆகும்.

சக்தி தேவியாருக்கு சிவன் வேத உபதேசம் செய்த தினம் சிவராத்திரி தினம் ஆகும். தேவி திருவிளையாட்டாய் ஈசனின் கண்களை மூட உலகங்கள் இருண்டு போன நேரத்தில் தேவர்கள் அனைவரும் உலகிற்கு ஒளி வேண்டி ஈசனை போற்றித் துதித்த நேரமும் சிவராத்திரி நேரமாகும்.

மனுயுகம் முடிந்து அண்டங்கள் அனைத்தும் இருண்ட நேரத்தில் பதினோரு ருத்திரர்கள் தோன்றி உலகை முன் போல் ஒளி வீச சிவனை திருவிடைமருதூரில் பூஜித்த காலமும் சிவராத்திரி நேரம் ஆகும். இவ்வாறாக சிவராத்திரிக்கு பல பெருமைகள் இருந்தாலும் பிரம்மாவும் விஷ்ணுவும் சிவராத்திரி விரதம் இருந்து சரஸ்வதியையும், லெட்சுமியையும் பெற்றோர்கள் என்றும், சக்தி தேவி நான்கு கால சிவபூஜை சிவராத்திரி அன்று செய்து வேதங்களை சிவனிடம் கேட்டு மக்களுக்கு அருள் தந்த நேரமும் சிவராத்திரி எனப்படுகின்றது.

சிவம் என்றால் மங்களம் என்று பொருள். எனவே மங்கள ராத்திரியை சிவராத்திரி என அழைக்கின்றோம். சிறப்புகள் பல தரும் சிவராத்திரி விரத காலம் ஐந்து பிரிவுகளாக உள்ளது. "யோகசிவராத்திரி'' நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி என்று ஐந்து பிரிவுகளாக சிவனை வழிபடுதல் அனைத்து பாவங்களையும் போக்கி யோகங்களைத் தரவல்லது.

ஒவ்வொரு மாதங்களிலும் வரும் சதுர்த்தசி திதியில் சிவபூஜை செய்து ஒரு வருஷத்தில் 24 சிவராத்திரி பூஜை செய்வது நித்ய சிவராத்திரி ஆகும். தை மாதம் கிருஷ்ணபட்ச பிரதமை திதி முதல் 13 நாட்கள் ஒரு பொழுது உணவு உண்டு சதுர்தசியில் செய்யும் சிவபூஜை பட்ச சிவராத்திரி ஆகும்.

மாசி மாத கிருஷ்ணபட்ச சதுர்தசி, பங்குனி மாத முதல் திருதிகை, சித்திரை தேய்பிறை அஷ்டமி, வைகாசி மாத முதல் அஷ்டமி, ஆடி மாத தேய்பிறை பஞ்சமி, ஆவணி மாத வளர்பிறை அஷ்டமி, புரட்டாசி மாதத்தின் முதல் திரயோதசி, ஐப்பசி மாத வளர்பிறை துவாதசி திதி, கார்த்திகை மாதத்தின் முதல் சப்தமி, மார்கழியின் இரு சதுர்தசிகள் தை மாத வளர்பிறை திருதிகை இவை அனைத்தும் மாத சிவராத்திரிகள் ஆகும்.

அமாவாசையும் திங்கட்கிழமையும் கூடும் நாள் யோக சிவராத்திரி ஆகும். மாசி மாதம் தேய்பிறை என்றழைக்கப்படும் கிருஷ்ண பட்ச சதுர்தசியின் இரவு மகா சிவராத்திரி புண்ணிய காலம் எனப் படுகிறது. அனைத்து சிவராத்திரியிலும் சிவபூஜை செய்ய முடியாது போய் இருந்தாலும் மகா சிவராத்திரியில் செய்யும் சிவ பூஜை கேட்டவை அனைத்தும் தரும் யோக சிவராத்திரி ஆகிறது என்கிறார் விஜய்சுவாமிஜி

வில்வ அர்ச்சனை........

வீட்டில் சிவபூஜை செய்ய விரும்புபவர்கள் பஞ்சகவ்யத்தால் சிவனுக்கு அபிசேகம் செய்து சிவப்பு வஸ்திரம் அணிவித்து, வில்வம், தாமரை, அலரியால் அர்ச்சித்து ஓம்ஸ்ரீம் பவாய நமஹ என அரிசியை அட்சதையாக கொண்டு வீட்டில் உள்ள தங்க நகைகளை இறைவனுக்கு அணிவித்து வில்வப்பழம், பால் அன்னம் நிவேதனம் செய்து பச்சை கற்பூர சூடம் போட்டு வணங்க சகல பாவங்களும் போய் நிம்மதியும் ஐஸ்வர்யமும் நிலைக்கும்.

சிவனுக்கு பிடித்த நேரம்.......

சிவராத்திரி நாளின் இரவு பிற்பகுதி பதிநான்கு நாழிகை சிவனுக்கு மிகவும் பிடித்த சிவராத்திரி காலமாகும். அதாவது இரவு 12.30 முதல் 6 மணி வரை அம்பாளின் வேண்டுதலை ஏற்றுக் கொண்ட மூன்றாம் கால பூஜை நேரமும் (இரவு 1.30 முதல் 3.45 வரை) உபதேசம் பெற்ற நான்காம் கால பூஜையும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை (இரவு 3.50 முதல் 5.50 வரை) நான்கு வேதங்களின் உட்பொருளை சிவன் அம்பிகைக்கு உபதேசித்ததின் மூலம் பெண்களும் வேதம் கற்கலாம் என்ற முன்னுதாரணத்தை ஏற்படுத்திய விரதம் சிவராத்திரி விரதம் ஆகும்.

கணவன்-மனைவி புரிந்து கொள்ளுதல் என்ற நிலையையும் விளக்கும் விரதமாக சிவராத்திரி விரதம் அமைந்து நமக்கு உணர்த்துகிறது. சிவராத்திரி பூஜை காலம் இரவு இரண்டாம் ஜாமத்தில் முதல் கால பூஜை அதாவது இரவு 9 மணி, இரண்டாம் கால பூஜை இரவு 11.15, மூன்றாம் கால பூஜை இரவு 1.30, நான்காம் கால பூஜை அதிகாலை 4.30 மணிக்கு. இதில் 1.30 மணி பூஜையில் உங்களது எண்ணங்களை இறைவனிடம் சொல்லுங்கள், அடுத்த கால பூஜையில் அவன் உங்களுக்கு இல்லை என்று சொல்லாமல் தந்தருள்வான்.

பூஜை முறை.....

இரண்டாம் கால பூஜை:- பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து மஞ்சள் வஸ்திரம் சாத்த வேண்டும். அட்சதை கோதுமை, வில்வம், துளசி, சண்பகம், தாமரை மலர்கள் கொண்டு அலங்கரித்து நட்சத்திர வடிவ கோலம் போட்டு நடுவில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். பச்சை ரத்தின ஆபரணம் சாத்துதல் சிறப்பு.

சாம்பிராணி தூபம் போட்டு பலாப்பழம், அன்னப் பாயாசம், லட்டு நிவேதனம் செய்ய பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். பிறக்கும் குழந்தைகளும் மேதையாக பிறப்பர். மூன்றாம் காலத்தில் தேனால் அபிசேஷகம் செய்து வெள்ளை ஆடை சாத்தி வில்வம், வெள் அருகு, அத்திப்பூ, பிச்சிப் பூவால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

சிவப்பு நிற ரத்தினங்கள் சாத்தி, மாதுளம் பழம், பாயாசம் நிவேதனம் செய்து தாபத்தில் கஸ்தூரி, சந்தனம், பச்சைக் கற்பூரம் பொடி செய்து தூவி சாம்பிராணி காண்பித்து கோதுமையை அட்சதையாக சிவ சோஸ்திரம் செய்ய வேண்டும்.

நான்காம் கால பூஜையில் கரும்புச் சாறால் அபிசேகம் செய்து, நீல வஸ்திரம் அணிவித்து வில்வத்தை பரப்பி அதன் மத்தியில் தீபம் ஏற்றி முத்து ஆபரணம் அணிவித்து விளா மர இலை, நந்தியா வட்டை, நீ லோற்பலம் அவற்றால் அர்ச்சித்து சகல பழங்களையும், வெண்சாதம், கோதுமை அல்வா முதலியவற்றை நிவேதனமாக செய்து சந்தனம், குங்குமப்பூ சாம்பிராணியுடன் கலந்து தூபம் போட வேண்டும்.

அட்சதையாக அரிசி, கோதுமை, உளுந்து, கடலை, மொச்சை, துவரை, பச்சைப்பயறு இவைகளை மஞ்சளில் கலந்து (மஞ்சள் தூள் கலந்த இவைகளை) ஓம் நமசிவாய என சொல்லி இறைவனை அர்ச்சிக்க வேண்டும். மறுநாள் காலையில் துணிமணிகள் வைத்து ஏழைகளுக்கு தானமாக தர வேண்டும்.

வீட்டில் அருசுவை உணவு கொடுத்து ஒவ்வொரு கால பூஜையிலும் ஏழைகளுக்கு தானம் தருவது சிறப்பு. மேலும் மண்பாண்டம் செய்பவர்கள். செருப்பு தைப்பவர்கள், துணி வெளுப்பவர்கள், ஊனமுற்றவர்கள், கண் பார்வை அற்றவர்களுக்கு இன்று துணி மணி தானம் செய்தால் இந் திர வாழ்வு அமையும். தலா ஒருவருக்கோ அல்லது வசதிக்கேற்ப பலருக்கு தரலாம். சுமங்களிப் பெண்களுக்கு சேலை ஜாக்கெட்டுடன் பழங்களை தானமாக தர குடும்ப ஒற்றுமை ஓங்கும்.

குடும்ப ஒற்றுமை....

பெண்ணுக்கு பெருமை சேர்த்த ஈசன் (ஸ்தலம்) சிவராத்திரி விரதம் கடைப்பிடிக்கும் அன்பர்கள் ஒரு முறை திருவாரூர் அருகில் உள்ள திருத்துறைப்பூண்டி ஆதி வில்வபுரீஸ்வரரின் ஆலயம் சென்று தரிசித்து வர மிகவும் சிறப்புகள் பெறுவீர்கள். சிவராத்திரி விரதத்தை இவ்வூர் சிவன் இடம் இருப்பது சஷ்டிக்கு திருச்செந்தூர் செல்வது போன்ற சிறப்பு பெற்ற ஸ்தலம். பெண்களின் கற்பு நெறியை பறை சாற்றிய சிவன் இவர் என வேதங்கள் வர்ணிக்கின்றது.

வித்வஜிக்ம மகரிஷியும் வசுமதியும் போல வாழ இறைவன் நடத்திய திருவிளையாடல் பெண்களின் கற்பை உலகம் உணரச் செய்த ஸ்தலம். கணவன் மனைவி அன்பு பெருகும். வம்சா வழியினர் அனைவரும் ஒற்றுமையாக இருப்பர். ஒருமுறை மாத சிவராத்திரி நாளிலாவது சென்று வாருங்கள் என்கிறார் ஈரோடு மாவட்டம் அவல்பூந் துறையைச் சேர்ந்த விஜய்சுவாமிஜி.
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum