தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பெண்கள் தவறாகவே பயன்படுத்தப்படும் சட்ட விழிப்புணர்வு

Go down

பெண்கள் தவறாகவே பயன்படுத்தப்படும் சட்ட விழிப்புணர்வு Empty பெண்கள் தவறாகவே பயன்படுத்தப்படும் சட்ட விழிப்புணர்வு

Post  meenu Mon Jan 21, 2013 5:07 pm

சட்ட விழிப்புணர்வு இன்னமும் மக்களிடையே போதாத நிலை நீடித்துக் கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம், மக்களிடையே இருந்து வரும் தாழ்வு நிலை. நடுத்தர மற்றும் ஏழை மக்கள் தவிர்க்க முடியாத கட்டத்தில் கோர்ட்டுக்கு வரநேர்ந்தால், தங்கள் பக்கம் வக்கீல் வைத்து வாதாட தடுமாறுவார்கள். இவர்கள் கோர்ட்டுகளில் உள்ள இலவச சட்ட உதவி மையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

நீதி கேட்டு வந்த எவருக்கும் சட்டஉதவி கிடைக்காமல் போய் விடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த இலவச உதவி மையம் ஏற்படுத்தினார்கள். உங்களுக்கு இலவசமாக வாதாடி நீதியை நிலை நாட்டும் வழக்கறிஞர்களுக்கு அரசாங்கமே சம்பளம் கொடுத்து விடுகிறது. அதனால் இது விஷயத்தில் யாரும் தயங்காமல் இலவச சட்ட உதவியை பெற்றுக் கொள்ளலாம்.

பெண்களுக்கு ஆதரவாக உருவாக்கப்பட்ட சட்டம் இப்போது பல பெண்களால் தவறாகவே பயன்படுத்தப்படுகிறது. இது வேதனைக்குரியது. பெண்கள் குழந்தைகளுக்கு ஆதரவாகவே நமது அரசியல் அமைப்புச் சட்டம் இருக்கிறது. குறிப்பாக 498-ஏ என்பது பெண்கள் மீது அக்கறையான சட்டம். பெண்களுக்கு முற்றிலும் சாதகமான இந்த சட்டத்தை பல பெண்கள் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்பது வருத்தமான உண்மை.

படித்த பெண்கள், நல்ல சம்பளத்தில் வேலை பார்ப்பவர்கள், ஐ.டி. போன்ற தொழில் நுட்ப பணியில் இருக்கும் பெண்கள் இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்தி தங்கள் கணவரிடம் இருந்து சுலபத்தில் விவாகரத்துப் பெற்று விடுகிறார்கள். கணவரை விடவும் அதிகமாக சம்பாதிக்கும் பெண்கள் தான் இந்த மாதிரி சட்ட சலுகையை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

ஏதோ கடையில் வாங்கிய சாக்லெட்டை `வேண்டாம்' என்று திருப்பிக் கொடுக்கிற மாதிரி திருமண பந்தம் என்பது இவர்களுக்கு சர்வ சாதாரணமாகி விட்டது. இதில் அடுத்த கட்ட வேதனை, மிடில்கிளாஸ் பெண்களும் இப்போது இந்த ரூட்டில் பயணிக்கத் தொடங்கி விட்டது தான்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum