நேரம் போதவில்லை… புதுப்படம் எதுவும் ஒப்புக்கொள்ளவில்லை! – ஏஆர் ரஹ்மான்
Page 1 of 1
நேரம் போதவில்லை… புதுப்படம் எதுவும் ஒப்புக்கொள்ளவில்லை! – ஏஆர் ரஹ்மான்
உலகம் முழுக்க இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக அடுத்த 5 மாதங்கள் வெளிநாடுகளிலேயே தங்கியிருக்க முடிவு செய்துள்ளார் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்த ஆண்டு எனக்கு மிக முக்கியமானது. உலகம் முழுக்க இசைக் கச்சேரி நடத்த ஒப்புக் கொண்டுள்ளேன்.
இதற்காக முதல்முறையாக வெளிநாடுகளிலேயே 5 மாதங்களைக் கழிக்க உள்ளேன். ஐரோப்பிய நாடுகள், தென் அமெரிக்கா மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்துகிறேன்.
இவ்வளவு நீண்ட காலம் நான் வெளிநாட்டில் இருப்பது இதுவே முதல்முறை.
தமிழ்ப் படங்களுக்கு இப்போது இசையமைக்க போதிய நேரமில்லை. இப்போது எந்த புதுப்படமும் ஒப்புக் கொள்ளவில்லை. ஒன்றை முடிக்காமல் அடுத்ததை ஒப்புக் கொள்வது முட்டாள்தனமாகிவிடும். மணிரத்னத்தின் ராவண் முக்கியமான படம். அடுத்து சேகர் கபூர் படத்துக்கு இசையமைக்கிறேன்.
நேரத்தை நிர்வாகம் செய்வது உண்மையில் கடினமான பணிதான். இசைக்காக நேரம் ஒதுக்குவது போல, ஆன்மிகம், குடும்பத்துக்கும் அதிக நேரம் ஒதுக்க முயற்சிக்கறேன்.
எப்போதும் எனது குடும்பம் எப்போதும் என்னுடன் இருப்பதையே விரும்புகிறேன். இல்லையென்றால் வெளிநாட்டுக்கு சென்று வந்து பார்க்கும்போது குழந்தைகள் என்னை அங்கிள் என அழைக்கும் நிலை வரலாம். வாழ்க்கை நிரந்தரமானதில்லை என்பது எனக்கும் புரிகிறது.
இப்போது எனக்கு 43 வயதாகிறது. நானும் வயதானவன் ஆகிவிட்டேன். அதையும் நல்லதாகவே உணர்கிறேன்.
இப்போதெல்லாம் எதைச் செய்ய விரும்புகிறேனோ அதை மட்டும் செய்கிறேன். நாளை பற்றி யோசிப்பதில்லை. நல்லவற்றை நிறைவேற்றுவதிலேயே கவனம் செலுத்துகிறேன்…” என்றார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மீண்டும் ஆஸ்கர்! – ஏஆர் ரஹ்மான் நம்பிக்கை
» ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஏஆர் ரஹ்மான் இசை!
» ஆன்லைன் மியூசிக் ஷாப் – தொடங்கினார் ஏஆர்.ரஹ்மான்
» ஏஆர் ரஹ்மான் ஒப்புக் கொண்ட ஆறு தமிழ்ப் படங்கள்!
» தனுஷிற்காக இணையும் ஏஆர் ரஹ்மான்- யுவன் சங்கர் ராஜா.
» ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஏஆர் ரஹ்மான் இசை!
» ஆன்லைன் மியூசிக் ஷாப் – தொடங்கினார் ஏஆர்.ரஹ்மான்
» ஏஆர் ரஹ்மான் ஒப்புக் கொண்ட ஆறு தமிழ்ப் படங்கள்!
» தனுஷிற்காக இணையும் ஏஆர் ரஹ்மான்- யுவன் சங்கர் ராஜா.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum