மீரா ஜாஸ்மினுக்கு ரூ 25 லட்சம் அபராதம்: நீதிமன்றம் அதிரடி
Page 1 of 1

மீண்டும் சர்ச்சையில் சிக்கி, நீதிமன்ற தண்டனைக்கும் உள்ளாகியுள்ளார் நடிகை மீரா ஜாஸ்மின்.
கேரளாவில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனம் ஆண்டுதோறும் நட்சத்திர கலைவிழா நடத்தி வருகிறது. மலையாள நடிகர்- நடிகைகளுக்கு பெரும் தொகை கொடுத்து கலை விழாவில் கலந்து கொள்ளச் செய்வது அவர்கள் வழக்கம்.
அதன்படி 5 ஆண்டுகளுக்கு முன் இந்த நிறுவனத்தின் கலைவிழாவுக்காக
மீரா ஜாஸ்மினை அழைத்திருந்தார் அதன் உரிமையாளர்.
இதற்காக அவருக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் அட்வான்ஸ் தரப்பட்டது. ஆனால் அந்த விழாவில்மீரா ஜாஸ்மின் கலந்து கொள்ளவில்லை.
அட்வான்ஸ் தொகையை திருப்பித் தரும் வழக்கம் நடிகைகளிடம் பொதுவாகவே இல்லை என்பதால், மீரா ஜாஸ்மினும் கமுக்கமாக இருந்துவிட்டார்.
ஜவுளி நிறுவனம் சில முறை ஜாஸ்மினிடம் பேச முயன்றது. ஆனால் அவரோ போனையே எடுக்கவில்லையாம்.
இதையடுத்து ஜவுளி நிறுவனம் மீராஜாஸ்மினுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. 5 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கு விசாரணையில் இப்போது தீர்ப்பு வெளியாகி உள்ளது.
ஜவுளி நிறுவனத்துக்கு மீராஜாஸ்மின் ரூ.25 லட்சம் அபராதமும், ஏற்கனவே வாங்கிய அட்வான்ஸ் தொகை யையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
தீர்ப்பைக் கேட்டு மிரண்டுபோன மீரா ஜாஸ்மின், சமாதானமாகப் போக வழியிருக்கிறதா என தெரிந்தவர்களிடம் ஆலோசனை கேட்டு வருகிறார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விஜய் படத் தயாரிப்பாளருக்கு ரூ 5 லட்சம் அபராதம்!
» “உன்னை சரண் அடைந்தேன்” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மீரா வாசுதேவன். இந்தி, மலையாள மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். மீரா வாசுதேவனுக்கும் பிரபல சினிமா ஒளிப்பதிவாளர் அசோக்குமார் மகன் விஷாலுக்கும் சில வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. தற்போது கு
» நடிகைகள் சம்பள பட்டியல்: அசின், அனுஷ்கா, ஜெனிலியாவுக்கு ரூ.1 கோடி; தமன்னா ரூ.80 லட்சம், ஹன்சிகா ரூ.30 லட்சம்
» சிம்பு 5 லட்சம் தனுஷ் 8 லட்சம்.
» ராகவா லாரன்ஸுக்கு ரூ.2.5 கோடி அபராதம் விதித்த தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum