கடத்தல், தாக்குதல் சம்பவங்கள்: நமீதா, அஞ்சலி அதிர்ச்சி; பாதுகாப்பு அளிக்க வற்புறுத்தல்
Page 1 of 1

நமீதாவை கடத்த முயற்சி, நடிகை அஞ்சலி பங்கேற்ற படப்பிடிப்பில் புகுந்து தாக்குதல் போன்ற சம்பவங்கள் சக நடிகைகளை அதிர்ச்சியாக்கி உள்ளது. படப்பிடிப்புகளில் பயத்தோடு பங்கேற்கின்றனர்.
நமீதா ஏற்கனவே பல தடவை ரசிகர்கள் கூட்டங்களில் சிக்கி தப்பியுள்ளார். அவரை கையை பிடித்து இழுத்து காயம் ஏற்படுத்திய நிகழ்வுகளும் நடந்துள்ளன.
இதனால் இப்போது அதையும் தாண்டி ரசிகர் ஒருவரால் காரில் கடத்தப் பட்டு மீட்கப்பட்டுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் இது நடந்துள்ளது.
கரூரில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்க சென்ற அவரை உங்களை அழைத்து செல்ல என்னை அனுப்பியிருக்கிறார்கள் என்று சொல்லிக்கொண்டு ஆசாமி ஒருவர் வந்தார். அதை நம்பி காரில் ஏறிய நமீதாவை அவர் கடத்தினார். கார் மின்னல் வேகத்தில் செல்வதை கண்டு நமீதா திகைத்தார். நிஜமாகவே நமீதாவை அழைத்து வர அனுப்பப்பட்ட கார் டிரைவர் இதனை பார்த்து பின்னாலேயே விரட்டினார்.
விழாக் குழுவினருக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தார். ஐந்தாறு கார்கள் நமீதா காரை பின் தொடர்ந்து விரைந்தன. குறிப்பிட்ட இடத்தில் நமீதாவை கடத்திய காரை சுற்றி வளைத்து மடக்கினர். கடத்தல் ஆசாமியை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரித்தபோது தனது பெயர் பெரியசாமி என்றும் நமீதா மேல் ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாக காரில் அழைத்து சென்றதாக கூறினார். அந்த அதிர்ச்சியில் இருந்து நமீதா மீளாமல் இருக்கிறார்.
இதுபோல் அஞ்சலியும் தாக்குதலில் மாட்டினார். அவரும் கரணும் ஜோடியாக நடிக்கும் “தம்பி வெட்டோத்தி சுந்தரம்” படப்பிடிப்பு குமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள மங்கலம் பகுதியில் நடந்தது. நேற்று பகல் அஞ்சலி தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன.
அப்போது 7 பேர் அடங்கிய கும்பல ஆட்டோவில் வந்து இறங்கி குமரி மாவட்டத்தை மையமாக வைத்து எப்படி சினிமா படம் எடுக்கலாம் என கேட்டு இயக்குனர் வடிவுடையானை அடித்து உதைத்தது. சட்டை கிழிக்கப் பட்டது. கார் உடைக்கப்பட்டது. படப்பிடிப்பு சாதனங்கள் உடைக்கப்பட்டன.
அஞ்சலியையும் தாக்க தேடினார்கள். உதவி இயக்குனர்கள் போர்வையால் போர்த்தி ஒரு வீட்டுக்குள் ஒளித்து வைத்தனர். இதர துணை நடிகர், நடிகைகள் அலறியடித்து ஓடினார்கள். அந்த கும்பல் கையில் கிடைத்து இருந்தால் நான் என்ன ஆகி இருப்பேன் என்று பயமாக இருக்கிறது என்று அஞ்சலி பின்னர் நிருபரிடம் கூறினார்.
படப்பிடிப்புகளுக்கும் நடிகர், நடிகைகள் பங்கேற்கும் விழாக்களுக்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என நமீதாவும், அஞ்சலியும் வற்புறுத்தியுள்ளனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அஞ்சலி வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவு: போலீஸ் கமிஷனர் 2 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும்
» பாதுகாப்பு வளையத்தில் அஞ்சலி
» பாதுகாப்பு வளையத்தில் அஞ்சலி
» தனுசின் ’3′ படத்தில் சோகமான முடிவு: கிளைமாக்சை மாற்ற ரஜினி வற்புறுத்தல்?
» கேரளாவில் போராட்டம்: மலையாள நடிகர்களுக்கு தடை விதிக்க வேண்டும்: இந்து மக்கள் கட்சி வற்புறுத்தல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum