இந்திய – இங்கிலாந்து போட்டி: வெறிச்சோடிய திரையரங்குகள்!
Page 1 of 1

திரையுலக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த ஞாயிறன்று தமிழகத்தின் திரையரங்குகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
காரணம், இந்தியா – இங்கிலாந்து இடையே நடந்த பரபரப்பான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி.
கடந்த வாரமே உலகக் கோப்பைப் போட்டி தொடங்கினாலும், இந்தியா – இங்கிலாந்து போட்டிக்குப் பிறகுதான் பெரிய அளவு விறுவிறுப்பை அடைந்துள்ளது.
இந்தப் போட்டி நடந்த ஞாயிற்றுக்கிழமை காலைக் காட்சிக்கு 50 சதவீத கூட்டமும், பிற்பகல் காட்சிக்கு 20 சதவீத கூட்டமும் வந்துள்ளது. வழக்கமாக ஞாயிறு மாலைக் காட்சி அரங்கு நிறைந்துவிடும், சுமாரான படமாக இருந்தாலும். ஆனால் இந்த ஞாயிறன்று கிட்டத்தட்ட 90 சதவீத திரையரங்குகள் வெறிச்சோடிவிட்டன.
சென்னையின் பரபரப்பான மல்டிப்ளெக்ஸ் எனப்படும் மாயாஜால், சத்யம் வளாகங்கள் கூட இதற்குத் தப்பவில்லை.
இதுகுறித்து மாயாஜால் மேலாளர் மீனாட்சி சுந்தரம் கூறுகையில், ” உண்மைதான். கடந்த ஞாயிற்றுக்கிழமையளவுக்கு மோசமான வசூல் எப்போதும் இருந்ததில்லை. பொதுவாக இந்த மாதிரி போட்டிகளின் போது 35 முதல் 40 சதவீத பாதிப்பு இருக்கும் என எதிர்ப்பார்ப்போம். ஆனால் இந்த முறை மிக மோசமாகிவிட்டது நிலைமை. இதற்கு ரசிகர்களைக் குறைசொல்ல முடியாது” என்றார்.
கோவையில் ஒரு காம்ப்ளெக்ஸில் காலைக் காட்சிக்குப் பிறகு கூட்டம் வராததால், மற்ற மூன்று காட்சிகளையும் ரத்து செய்துள்ளனர்! இன்னொரு காம்ப்ளெக்ஸில் மாலைக் காட்சிக்கு மொத்தமே 50 பேர்தான் வந்தார்களாம். இதனால் அன்றைய காட்சியை ரத்து செய்துள்ளது நிர்வாகம். தமிழகத்தின் முக்கிய நகரங்களான மதுரை மற்றும் திருச்சியிலும் இதே நிலை.
“மாற்றுப் பொழுதுபோக்குகள் நிறைய வந்துடுச்சிங்க… இந்த நிலைமையைப் புரிந்து கொண்டு நல்ல கதைகள், பொழுதுபோக்கும் அம்சங்களுடன் படங்களைத் தர வேணடும் இயக்குநர்கள். இல்லாவிட்டால் ரொம்ப ரொம்ப கஷ்டம்” என்கிறார் சென்னையின் முக்கிய மல்டிப்ளெக்ஸ் மேலாளர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வெறிச்சோடிய திரையரங்குகள்… விரட்டப்பட்ட கடல்!
» நீயா நானா? இந்திய - சீன வல்லரசுப் போட்டி
» இந்திய கிரிக்கெட் வீரர் வீரட் கோலிக்கு போட்டி ஊதியத்தின் 50 சதவீதம் அபராதம்
» கும்கிக்கு அதிக திரையரங்குகள்
» விஸ்வரூபம் - கமலுக்கு ஆதரவாக திரையரங்குகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum