அதிமுகவுக்கு விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு ஏன்? – எஸ்ஏ சந்திரசேகரன் விளக்கம்
Page 1 of 1

கன்னியாகுமரி: இந்தத் தேர்தலில் விஜய் பிரச்சாரத்துக்கு வரமாட்டார். அதேபோல, அவர் இப்போதைக்கு அரசியலுக்கும் வரமாட்டார் என இயக்குநர் எஸ் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
விஜய் மக்கள் இயக்க நிறுவனரான சந்திரசேகரன் குமரி மாவட்டத்தில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
இதற்காக கன்னியாகுமரி வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
விஜய் மக்கள் இயக்கம் அ.தி.மு.க. அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. எங்கள் இயக்க தொண்டர்கள் அசுர வேகத்தில் அ.தி.மு.க. அணிக்கு வேலை செய்கிறார்கள்.
ஆனால், தற்போதைக்கு விஜய் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறும் வாய்ப்பு இல்லை. அதேபோல விஜய் அரசியலுக்கு வர மாட்டார். விஜய் அரசியலுக்கு வருவதற்காக அ.தி.மு.க.வுக்கு ஆதரவு கொடுக்கவில்லை. ஒரு மாற்றம் வரவேண்டும் என்பதற்காக தான் விஜய் மக்கள் இயக்கம் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்தத் தேர்தலில் விஜய் நேரடிப் பிரச்சாரம் செய்யவும் வாய்ப்பில்லை. ஆளுங்கட்சி மீது மக்களுக்கு வெறுப்பு அதிகமாக இருக்கிறது. நான் தி.மு.க. ஆதரவாளராக இருந்தேன். எனக்கே வெறுப்பு வந்து விட்டது.
கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் கொலை, கொள்ளை, ஊழல், விலைவாசி உயர்வு, மின் தடை ஆகியவை மக்களிடம் வெறுப்பை ஏற்படுத்தியது. அ.தி.மு.க. கூட்டணிக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்.
வாரிசுகள் அந்தந்த தொழிலுக்கு வருவது தவறல்ல. ஆனால் அந்த தொழிலையே கபளீகரம் செய்வது தான் தவறு.
விஜய் ரசிகர் மன்ற மாநில தலைவர் ஜெயசீலனை விலை கொடுத்து வாங்கியுள்ளனர். இது அரசியல் சூழ்ச்சி. ஜெயசீலன் இயக்கத்துக்கு எதிராக செயல்பட்டதால் அவரை எங்கள் இயக்கத்தில் இருந்து நீக்கி விட்டோம்…”, என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விஜய் ஆதரவு மட்டும்தான்; அதிமுகவுக்கு பிரச்சாரம் இல்லை! – எஸ்ஏ சந்திரசேகரன்
» அதிமுகவுக்கு ஆதரவுக்கு எதிர்ப்பு: சேலத்தில் விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு!!
» அதிமுக கூட்டணியில் விஜய் இயக்கத்துக்கு 3 இடங்கள்; எஸ்ஏ சந்திரசேகரன் புதுக்கோட்டையில் போட்டி?
» விஜய்யின் மக்கள் இயக்கம் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு
» விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு! எஸ்.ஏ.சி. மறுப்பு!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum