‘நானே இப்படி என்றால், வடிவேல் நிலைமையை யோசிச்சுப் பாருங்க!’ – பாக்யராஜ்
Page 1 of 1

“காலம் மாறிவிட்டது. இனி மைக் பிடித்து பேசாமல் இருப்பதுதான் நல்லது. நானே இப்படி என்றால், வடிவேல் நிலைமையை கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க, என்றார் இயக்குநரும் நடிகருமான கே பாக்யராஜ்.
‘களவாணி’ படத்தை இயக்கிய ஏ.சற்குணம் அடுத்து, ‘வாகை சூட வா’ என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார். ‘களவாணி’ பட நாயகன் விமல், இந்த படத்திலும் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக கேரள நடிகை இனியா நடித்துள்ளார்.
இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று காலை நடந்தது.
விழாவில், இயக்குநர் கே.பாக்யராஜ் கலந்துகொண்டு பேசும்போது, திமுகவுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்த திரைக்கலைஞர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமையை குறிப்பிட்டுக் காட்டினார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அவர் தி.மு.க.வுக்காக பிரசாரம் செய்ததையும், இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், “இனிமேல் அதிகமாக பேசப்போவதில்லை” என்பதையும் குறிப்பிட்டார்.
அவர் கூறுகையில், “முன்பெல்லாம் விழாக்களில் நிறைய பேசுவேன். அந்த காலம் கடந்து விட்டது. இனிமேல் அளந்துதான் பேசுவேன்.
தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகள் வெளிவந்தபின், நான் ஊர் ஊராக சுற்ற ஆரம்பித்தேன். கேரளாவில் கொஞ்ச நாட்கள், ஆந்திராவில் கொஞ்ச நாட்கள் என வெளிïர்களில் தங்க ஆரம்பித்தேன்.
என் சூழ்நிலைக்கு தகுந்தபடி, ஒரு மலையாள பட வாய்ப்பு வந்தது. அங்கே போய் நடித்துவிட்டு வந்தேன். என் மகனுக்கு ஒரு தெலுங்கு பட வாய்ப்பு வந்தது. அதனால், ஹைதராபாத்தில் சில நாட்கள் இருந்தேன்.
இனிமேல், நான் அளந்துதான் பேசுவேன். அதிகமாக பேசமாட்டேன். ‘மைக்’கை பிடித்து பேசாமல் இருப்பது நல்லது என்ற முடிவுக்கு வந்து இருக்கிறேன். (சிரித்தபடி), நானே இப்படி என்றால், வடிவேல் நிலைமையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.
முன்பெல்லாம் சினிமாவில் கடும் உழைப்பு இருந்தால் வெற்றி பெற்று விடலாம் என்று நம்பினேன். இப்போது அப்படி அல்ல. நேரம் நன்றாக இருந்தால்தான் வெற்றி பெற முடியும் என்பதை காலதாமதமாக உணர்ந்தேன்.
‘சுப்பிரமணியபுரம்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு முதலில் என் மகனுக்குத்தான் வந்தது. அந்த வாய்ப்பை நழுவ விட்டேன். அடுத்து, ‘களவாணி’ படத்தில் நடிக்கும் வாய்ப்பும் முதலில் என் மகனுக்குத்தான் வந்தது. பிறகு அதுவும் கைநழுவிப் போனது.
என் மகனுக்கு நேரம் நன்றாக இருந்தால், அந்த இரண்டு பட வாய்ப்புகளும் கிடைத்து இருக்கும்,” என்றார்.
விழாவில் இயக்குநர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரன், ஆர்.கே.செல்வமணி, தங்கர்பச்சான், வசந்த், சேரன், அமீர், சிம்புதேவன், விஜய், பிரபு சாலமன், ஜனநாதன், பாண்டிராஜ், பொன்வண்ணன், தம்பி ராமையா, கவிஞர்கள் வைரமுத்து, அறிவுமதி, இசையமைப்பாளர் ஜிப்ரான், பட அதிபர் டி.சிவா, நடிகைகள் ராதிகா சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் பேசினார்கள்.
பட அதிபர் முருகானந்தம் வரவேற்று பேசினார். இயக்குநர் சற்குணம் நன்றி கூறினார்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இப்போதைக்கு நானே தயாரிப்பாளர் நானே ஹீரோ… விஜய் ஆன்டனியின் புது ரூட்!
» சிலையும் நானே! சிற்பியும் நானே!
» அடுத்த ரவுண்டுக்கு தயாராகும் வடிவேல்!
» திருமண மண்டபம் கட்டினார், வடிவேல்!
» சூர்யா, வடிவேல், ரவிக்குமார், முருகதாஸ் லாக்கர்கள் சீல் வைப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum